சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2928
Word
English & Tamil Meaning (பொருள்)
பொய்ம்மை
poymmain. <>id.1. Falsehood, lie;
1. பொய். பொய்ம்மையும் வாய்மை யிடத்த (குறாள், 292).
2. Unreality, illusion;
மாயம்.
3. That which is counterfeit or artificial;
போலி. (W.)
பொய்ம்மையாளர்
poymmai-y-āḷarn. <>பொய்ம்மை+.Liars, persons given to falsehood or duplicity;
பொய்யர். பொய்ம்மையாளரைப் பாடாதே (தேவா, 647, 1).
பொய்ம்மையுத்தரம்
poymmai-y-uttaramn. <>id.+.Statement by the defendant contesting the plaintiff's statement;
வாதியின் பூருவபக்கத்தைப் பிரதிவாதி மறுத்துரைக்கை. (சுக்கிரநீதி, 270.)
பொய்யடி
poy-y-aṭin. <>பொய்+. (W.)1. Playful stroke proving light or harmless;
போலியடி.
2. Deceiving by false words;
பொய்யால் பிறரை வஞ்சிக்கை.
3. Terrifying;
அச்சுறுத்துகை.
பொய்யடிமை
poy-y-aṭimain. <>id.+.Insincere devotion to God;
போலிப்பக்தி. பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன் (தேவா. 737, 7).
பொய்யடிமையில்லாதபுலவர்
poy-y-aṭimai-y-illāta-pulavarn. <>பொய்யடிமை+.Poets of the last sangam, who consecrated their lives to the worship of šiva, one of tokai-y-aṭiyār, q.v.;
சிவபெருமானை வழிபடும் சங்கப்புலவர் காளான் தொகையடியார் (பதினொ திருத்தொண்டர் திருவந். 49.)
பொய்யம்பு
poy-y-ampun. <>பொய்+.Sham arrow, discharged in play or mock-fight;
விளையாட்டம்பு. வேடுவனாய்ப் பொய்யம் பெய்து (தேவா. 1040, 3).
பொய்யவியல்செய்
-
தல்
poy-y-aviyalcey-v. tr. <>id.+அவியல்+.To parboil;
புழுக்குதல்.
பொய்யறுகல்
poy-y-aṟu-kaln. <>id.+.Brick partially burnt;
பாதிவெந்த செங்கல். (C. G.)
பொய்யறை
poy-y-aṟain. <>id.+.1. Secret compartment in a box or safe;
பெட்டகத்தின் மறைவறை. Loc.
2. See பொய்க்குழி, 1. பொய்யறைப் படுத்து (சிலப். 10, 70).
.
பொய்யன்
poyyaṉn. <>id. [K. pusiga.]Liar;
பொய் பேசுபவன்.பொய்யர் கண்டிர் வாழ்க்கையாளர் (தேவ, 188, 6).
பொய்யாடல்
poy-y-āṭaln. <>id.+.Innocent sport, as of children;
வினயமில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு. பொய்யாட லாடும் புணர்ப்பின் (பரிபா. 11, 89).
பொய்யாணை
poy-y-āṇain. <>id.+.False oath, perjury;
பொய்யாகச் செய்யும் பிரமாணம். (யாழ். அக.)
பொய்யாப்புள்
poyyā-p-puḷn. perh. பொய3¢-+ ஆ neg.+.Rail, water-fowl;
பறவை வகை (சூடா.)
பொய்யாமை
poyyāmain. <>id+id.1. Being truthful;
பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296).
2. Impartiality;
நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல் (கலித். 99).
பொய்யாமொழி
poy-y-ā-moḷin. <>id.+id.+.1. Never-failing word, true word;
1. சத்திய வசனம்.
2. Sacred Scriptures of the Hindus, as the Vēdas and the āgamas;
வேதாகமம். பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் (தேவா. 612, 10).
3. The Kuṟal;
குறல். திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் (வள்ளுவமா. 23).
4. A poet, author of Tacai-vāṇaṉ-kōvai,
தஞ்சை வாணன்கோவை யியற்றிய புலவர். (தமிழ்நா.)
பொய்யாறு
poy-y-āṟun. <>id.+.See பொய்ந்நெறி.
பொய்யாற் றொழுக்கங் கொண்டு (மணி. 23, 22).
பொய்யிகந்தோர்
poy-y-ikantōrn. <>id.+.Sages;
முனிவர். (உரி. நி.)
பொய்யிடை
poy-y-iṭain. <>id.+.Slender waist;
நுண்ணிய இடை. வார்மூலை பொறாத பொய்யிடை நைய (கம்பரா. ஊர்தே. 104).
பொய்யில்புலவன்
poy-y-il-pulavaṉn. <>id.+ இல் neg.+.1. Man of true wisdom;
மெய்ஞ்ஞானி. பொய்யில்புலவர் புரிந்துறையு மேலுலகம் (பு. வெ. 10, 4).
2. Tiruvaḷḷuvar;
திருவள்ளுவர். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் (மணி. 22, 61).
பொய்யுகம்
poy-yukamn. <>id.+.Kail yuga;
கலியுகம். நாலாம் பொய்யுகம் (திருவிளை. இரசவாத. 30).
பொய்யுரம்
poy-y-uramn. <>id.+.Illusory knowledge;
மித்தியாஞானம் பொய்யுரமுறு நிருவிகற்பவுரு (வேதா. சூ. 67).
பொய்யுறக்கம்
poy-y-uṟakkamn. <>id.+.Pretended sleep;
கள்ளத்தூக்கம். மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் . . . உறங்கி (திவ். இயற். சிறிய. ம. 31).
1. See பொய்த்தூக்கம், 1. (W.)
.
பொய்யுறக்கு
poy-y-uṟakkun. <>id.+.See பொய்யுறக்கம்.
அமளி மேலாப் பொய்யுறக்குறங்கு வானை (கம்பரா. ஊர்தே. 213).
பொய்யுறங்கு
-
தல்
poy-y-uṟaṅku-v. intr. <>id.+.To pretend to sleep;
உறங்குவதுபோல் நடித்தல். புனையிழை யொருமயில் பொய்யுறங்குவாள் (கம்பரா. உண்டா. 64).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2928 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொய், தேவா, word, கம்பரா, பொய்யுறக்கம், பொய்யடிமை, falsehood, பொய்யிடை, ஊர்தே, பொய்யுகம், sleep, பொய்ம்மை, திருவள்ளுவர், பொய்யா, false, statement, poymmai, பொய்யாமை, true, பொய்யர்