சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2922
Word
English & Tamil Meaning (பொருள்)
பொதுச்சொல்
potu-c-coln. <>id.+.1. Word in general use;
எல்லாரும் அறிந்த சொல்.
2. (Gram.) Word common to both the tiṇai;
இருதிணைகட்கும் பொதுவாகிய சொல். ஒன்றொழி பொதுச்சொல். (நன். 269).
3. Word implying common possession, as of the world;
உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை. போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறா அது (புறநா. 8).
4. General heading;
படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல். பொதுச்சொற் றானே படர்வது படலம் (சூடா.).
பொதுசனம்
potu-caṉamn. <>id.+.1. The public;
மகாசனம். Mod.
2. Arbitrators;
மத்தியஸ்தர்கள்.
பொதுஞானம்
potu-āṉamn. <>id.+.Differentiated knowledge. See சவிகற்பக்காட்சி.
பொதுஞானம் வந்தணுகி (கோயிற்பு. இரணிய. 38).
பொதுத்தன்மை
potu-t-taṉmain. <>id.+.1. Neutrality;
நடுவுநிலைமை.
2. Common-ness, generality;
பெரும்பாலும் காணப்படும் குணம்.
3. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam, as redness to coral and to the lips;
உவமான வுவமேயங்களில் அமைந்துள்ள சாதாரண தருமம். (அணியி. 1.)
பொதுத்திணை
potu-t-tiṇain. <>id.+.Word common to both the tiṇai;
இருதிணைகட்கும் பொதுச்சொல். (W.)
பொதுநடுவர்
potu-naṭuvarn. <>id.+.Mediators or arbitrators;
மத்தியஸ்தர். (யாழ். அக.)
பொதுநலத்தார்
potu-nalattārn. <>id.+.Prostitutes;
பொதுமகளிர். பொதுநலத்தார் புன்னலந் தோயார் (குறள், 915).
பொதுநலம்
potu-nalamn. <>id.+.1. See பொதுநன்மை.
.
2. Sexual enjoyment available for hire;
பொருள் கொடுப்பார் பெறுஞ் சிற்றின்பம். (குறள், 915.)
பொதுநன்மை
potu-naṉmain. <>id.+.Common weal, public good;
சனசமூகத்துக்கு உற்ற நன்மை. Colloq.
பொதுநிலம்
potu-nilamn. <>id.+.1. Land held in joint ownership;
பலருக்குப் பொதுவான பூமி.
2. Land left uncultivated in a village for communal purposes;
சமூகநன்மைக்காகக் கிராமத்திற் பயிரிடாது விடப்பட்ட நிலம்.
பொதுநிறம்
potu-niṟamn. <>id.+.Complexion between fair and black, as an indefinite middling colour;
மாநிறம். (W.)
பொதுநீக்கு
-
தல்
potu-nīkku-v. tr. <>id.+.1. To avoid generality;
பொதுமையை விடுத்தல். பொது நீக்கித் தனைநியை வல்லோக்கென்றும் பெருந்துணையை (தேவா. 13, 5).
2. To make one's own;
தனக்கே யுரிமை யாக்குதல்.
பொதுநீங்குவமை
potu-nīṅkuvamain. <>id + நீங்கு- + உவமை. (Rhet.)A figure of speech. See இயைபின்மையணி. (தண்டி. 30, 23.)
.
பொதுநூல்
potu-nūln. <>id.+.Treatise on fundamental principles acceptable to all religionists;
எல்லா மதத்தினர்க்கும் பொதுவாகிய சாமானிய தருமங்களை எடுத்துரைக்கும் நூல். (சித். மரபுகண். 1.)
பொதுநெறி
potu-neṟin. <>id.+.Common way;
யாவரும் செல்லும் வழி. உயிர்போகு பொதுநெறி (சிலப். 28, 173).
பொதுநோக்கு
potu-nōkkun. <>id.+.1. Impartial regard, as of a king;
எல்லாரையும் ஒப்ப நோக்குகை. பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121).
2. Indifferent look;
உதாசீனமான பார்வை. ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் (குறள், 1099).
3. Common sense;
இயற்கையாக அமைந்த அறிவு. எம்மிடத்தே யமைந்துள்ள அறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி (பிரபஞ்சவி. 20).
பொதுப்படு
-
தல்
potu-p-paṭuv. intr. <>id.+.1. To be general;
பொதுவாதல். பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (திருக்கோ. 354).
2. To agree;
ஒப்பாதல். பொன்னொடே பொருவினல்ல தொன்றொடு பொதுப்படாவுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75).
பொதுப்படை
potu-p-paṭain. <>பொதுப்படு-.That which is common, general;
பொதுவானது. Loc.
பொதுப்பண்
potu-p-paṇn. <>பொது+. (Mus.)Musical mode fit to be sung during both day and night;
இரவும் பகலும் பாடற்கு உரிய பண். (சங். அக.)
பொதுப்பணம்
potu-p-paṇamn. <>id.+.Common fund;
பொதுவான நிதி. Mod.
பொதுப்பாயிரம்
potu-p-pāyiramn. <>id.+.General preface dealing with the nature of treatises, and authors, the method of teaching students and the method of study, opp. to ciṟ-appu-p-pāyiram;
நூலியல்பு, நுவல்வோன்திறம், நுவலுந்திறன், கொள்வோன் கூற்று, கோடற்கூற்று ஆகியவற்றைப்பற்றி கூறும் முன்னுரை. எல்லா நூற்குமிவை பொதுப் பாயிரம் (நன். 2).
பொதுப்பெண்
potu-p-peṇn. <>id.+.See பொதுமகள், 1. (சூடா.)
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2922 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், potu, common, general, word, குறள், பொது, சொல், பொதுச்சொல், land, பொதுநலத்தார், பொதுவான, பொதுநன்மை, பொதுநோக்கு, method, பொதுப்படு, rhet, பொதுநெறி, எல்லா, public, பொதுவாகிய, இருதிணைகட்கும், tiṇai, பொருள், பொதுச்சொற், புறநா, பொதுஞானம், arbitrators, சூடா, generality