சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2881
Word
English & Tamil Meaning (பொருள்)
பெரும்பொருள்விளக்கம்
perumporuḷ-viḷakkamn. <>பெரும்பொருள்+.A poem on morals;
ஒரு நீதிநூல். (புறத்திரட்டு.)
பெரும்பொழுது
peru-m-poḻutun. <>பெரு-மை+.Seasons of the year, of which there are six, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutu-vēṉil, dist. fr. ciru-poḻutu;
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள். (நம்பியகப். 11.)
பெரும்பொன்படு
-
தல்
peru-m-poṉ-paṭu-v. intr. <>id.+.To be charming in appearance;
தோற்றப்பொலிவுண்டாதல். தொய்யிலெழுதி யிறுத்த பெரும்பொன் படுகம் (கலித். 64).
பெரும்போக்கு
peru-m-pōkkun. <>id.+.1. Broad-mindedness, liberality;
பெருந்தன்மை.
2. Death;
சாவு.
பெரும்போகம்
peru-m-pōkamn. <>id.+.1. Bumper crop;
மிகுந்த விளைவு. Colloq.
2. Supreme bliss;
பேரின்பம். பெரும்போகம் பின்னும் புதிதாய் (திருக்கோ. 9).
பெருமக்கள்
peru-makkaln. <>id.+.1. The great ;
பெரியோர். பெருமக்களுள்ளவர்தம் பெருமானை (திவ். திருவாய், 3, 7, 5).
2. Members of a village assembly, as great men ;
ஊர்க்காரியங்களை மேற்பார்வை செய்யும் சபைப்பெரியார். ஸம்வத்ஸர வாரியப் பெருமக்கள் (s.I.I.iii,9).
பெருமகன்
peru-makaṉn.<>id.+.1. Great man ;
பெரியோன். (பிங்.)
2. Chief ;
தலைவன். வயவர்பெரும்பாண். 101).
3. King ;
அரசன். வெண்குடைப்பெருமகன் கோயிலுள் (சீவக. 183).
4. Arhat ;
அருகதேவன். பெருமகன்றிருமொழி (சிவப்.10,47).
பெருமகிழ்ச்சிமாலை
peru-makiḻcci-mālain. <>id.+A panegyric in which the greatness of chaste women is described, one of 96 pirapantam , q.v.;
96 பிரபந்தங்களுள் கற்புடைப்பெண்டிர் பெருமையைக்கூறும் நூல்வகை. (சது.)
பெருமங்கலம்
peru-maṇkalamn. <>id.+1. Auspicious festival ;
சுபவிசேடம்.
2. Benedictory song ;
வாழ்த்துப்பாடல். பெருமங்கலம் பாடுவார் (சீவக. 308, உரை).
3. Theme of a king robed in white on his birthday and bestowing favours on his subjects ;
அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருல் செய்வதைக்கூறும் புறத்துறை. பிறந்த நாவயிற் பெருமங்கலமும் (தொல். பொ.91).
4. Poem describing the celebration of a king's birth-day, one of 96 pirapantam , q.v.;
பிரபந்தங்களுள் அரசனது பிறந்தநாண்மங்கலத்தைக் கூறும் நூல். (சது.)
பெருமஞ்சாடி
peru-macātin. <>id.+.A climber ; See ஆனைத்தெல்லு. Nā.
.
பெருமஞ்சிகன்
peru-macikaṉn. <>id.+.Barber ;
நாவிதன். (திவா.) பெருமஞ்சிகனுக்கு...கூந்தற்கருமம் (சீகாளத். பு. விடசங்க. 66).
பெருமடை
peru-maṭain. <>id.+Food offering to a deity ;
தெய்வங்களுக்கிடும் சோற்றுப் பலி. வளமிகு சிறப்பிற் றெய்வப் பெருமடை கொடுத்து (பெரியபு. கண்ணப். 19).
பெருமணம்
peru-maṇamn. <>id.+.Marriage ;
கலியாணம். பெருமணம் பண்ணி யறத்தினிற்கொண்ட (கலித். 96, 36).
பெருமணல்வட்டம்
peru-maṇal-vaṭṭamn. <>id.+.A hell of sand, one of eḻu-narakam, q.v.;
எழுநரகதொன்று. (பிங்.)
பெருமதிப்பன்
peru-matippaṉn. <>id.+.Precious or valuable object ;
அதிக விலைபெற்ற பொருள் (ஈடு.)
பெருமந்தாரை
peru-maṇtārain. <>id.+Purple variegated mountain ebony ; See செம்மந்தாரை.
.
பெருமரம்
peru-maramn. <>id.+ [M. perumaram.]1.Toothed-leaved tree of heaven, l.tr., Ailanthus excels;
மரவகை. (L.)
2. Fetid tree ; See பீநாறி. (மலை.)
.
3. White fragipani. See பெருங்கள்ளி. (மலை.)
.
பெருமருந்து
peru-maruntun. <>id.+ [M. perumarundu.]Indian birthwort, m.cl. Aristolochia indica;
கொடிவகை. (பதார்த்த.269.)
பெருமல்லிகை
peru-mallikain. <>id.+.Single-flowered Arabian jasmine, m.cl., Jasminum sambac-heyneana;
கொடிவகை. (மூ.அ.)
பெருமலம்
peru-malamn. <>id.+.See புன்கு,1. (சங். அக.)
.
பெருமலரி
peru-malarin. Perh. id.+ மலர்.White frangipani ; See பெருங்கள்ளி .
.
பெருமலை
peru-malain. <>id.+.Mt. Mēru ;
மகாமேரு. (பிங்.)
பெருமலைகலக்கி
peru-malai-kalakkin. <>id.+Peacock-tailed adiantum, Adiantum caudatum;
பூடுவகை . (W.)
பெருமழை
peru-maḻain. <>id.+Heavy rain ;
கனத்த மழை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2881 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், peru, பிங், king, பெருமங்கலம், பெருமடை, பிரபந்தங்களுள், tree, adiantum, கொடிவகை, பெருங்கள்ளி, pirapantam, பெருமணம், அரசன், vēṉil, paṉi, poem, கலித், பெரும்போகம், பொருள், பெருமக்கள், சீவக