சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 287
Word
English & Tamil Meaning (பொருள்)
இடைநரை
iṭai-narain. <>id.+.Hair or beard growing grey here and there;
அங்கும் இங்கும் சிறிது நரைத்திருக்கை. (W.)
இடைநாடி
iṭai-nāṭin. <>idā+nādī.A principal tubular organ of the human body. See இடைகலை.
.
இடைநாழிகை
iṭai-nāḻikain. <>இடை1+ nādikā.Passage between the ardha-maṇṭapa and the mahā-maṇṭapa of a temple;
கோயிலில் அர்த்தமண்டப மகாமண்டபங்கட்கு இடைப்பட்ட இடம். (T.A.S. 100.)
இடைநிகரா
-
தல்
iṭai-nikar-ā-v.intr. <>id.+.To be in ordinary circumstances, neither affluent nor penurious;
நடுத்தரமான நிலையிலிருத்தல். (குறள்.635, உரை).
இடைநிலை
iṭai-nilain. <>id.+ நில்-.1. State of being in the middle;
மத்தியத்தில் நிற்கை. இடைநிலைத்தீவகம்.
2. (Gram.) Medial particles coming between the root and the ending in a word (i) in verbs, to indicate tense, as த் in செய்தான்; (ii) in personal nouns as an inserted euphonic connective particle, as ஞ் in அறிஞன்;
பெயர்வினைகளின் பகுதிவிகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு. (நன்.141).
இடைநிலைத்தீவகம்
iṭai-nilai-t-tīvakamn. <>இடைநிலை+. (Rhet.)Literally a lamp in the centre illuminating all around, applied to denote a figure of speech in which a word used in the middle of a sentence goes to amplify the meanings of words in various parts of the same;
தீவகவணிவகை. (தண்டி.38).
இடைநிலைப்பாட்டு
iṭai-nilai-p-pāṭṭun. <>id.+.A specific part of the verse of the kali type;
கலிப்பாவினோருறுப்பு. (தொல்.பொ.444).
இடைநிலைமெய்ம்மயக்கு
iṭai-nilai-mey-m-mayakkun. <>id.+. (Gram.)Permissible conjunction, in Tamil, of consonantal sounds, either in the same word or in words coming together, classified into two kinds accg. as the consonants are similar or dissimilar, as உடநிலை மெய்ம்மயக்கு and வேற்றுநிலை மெய்ம்மயக்கு;
சொல்லினிடையில் மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்றுகூடும் நிலை. (நன்.110. உரை).
இடைநிலைவிளக்கு
iṭai-nilai-viḷakkun. <>id.+. (Rhet.)A figure of speech. See இடை நிலைத்தீவகம்.
(சிலப்.1. 22, உரை).
இடைநீரினில்[ற்]
-
த[ற]ல்
iṭai-nīriṉil-,v.intr. <>இடை1+நீரில்+நில்-.To tread the water;
நிலைகுத்தாய் நீந்துதல். (J.)
இடைநேரம்
iṭai-nēramn. <>id.+.Recess, tiffin time;
சிற்றுண்டி கொள்ளுஞ் சமயம். Madr.
இடைப்படி
iṭai-p-paṭin. <>id.+.A measure of weight equal to 12 palams;
ஓர் அளவு. (தைலவ.தைல.121, உரை).
இடைப்படு
-
தல்
iṭai-p-paṭu-v.intr. <>id.+.1. To appear in the midst, intervene;
மத்தியமாதல்.
2. To happen in an interim;
இடையிற் சம்பவித்தல். (W.)
இடைப்படுதானம்
iṭai-p-paṭu-tāṉamn. <>id.+ படு-+ dāna.Charity to the ordinary indigent folk being the medium grade of benevolence to the deserving;
மத்திமதானம்.
இடைப்படுவள்ளல்கள்
iṭai-p-paṭu-vaḷḷalkaḷn. <>id.+.The munificent patrons of the intermediate galaxy of liberal benefactors. See இடைவள்ளல்கள்.
(கந்தபு.ஆற்று.39).
இடைப்பழம்
iṭai-p-paḻamn. <>id.+.Ripe fruits interspersed among the unripe, as in a bunch of plantains;
காய்க்குலையில் இடையிடையே பழுத்திருப்பது. (W.)
இடைப்பாட்டம்
iṭai-p-pāṭṭamn. <>id.+.An ancient tax on herdsmen;
பழையவரி வகை. (S.I.I.ii, 521,ft.)
இடைப்பிறவரல்
iṭai-p-piṟa-varaln. <>id.+. (Gram.)Word or words used as complements to the subject or predicate in a sentence;
எழுவாய் முதலியன கொண்டு முடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை. (நன்.356).
இடைப்புழுதி
iṭai-p-puḻutin. <>id.+.Land which is neither very moist nor very dry and is in a proper state for sowing;
காய்ந்தும் காயாமலுமுள்ள புழுதிநிலம். (W.)
இடைப்பூட்சி
iṭai-p-pūṭcin. <>id.+.பூண்-. See இடைப்பாட்டம்.
(S.I.I.ii, 521.)
இடைப்போகம்
iṭai-p-pōkamn. <>id.+.Interim crop;
இடைக்காலத்து விளைவு.
இடைமகன்
iṭai-makaṉn. <>id.+.Cowherd or shepherd;
இடையன். இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன் (சீவக.1914).
இடைமடக்கு
iṭai-maṭakkun. <>id.+.1. Interrupting a conversation; 2. A play on words;
பேச்சினடுவே தடுக்கை. (W.) மடக்கணி வகை. (தண்டி.91.)
இடைமருது
iṭai-marutun. <>id.+.Name of a Siva shrine in the Tanjore district;
திருவிடைமருதூர். (தேவா.446).
இடைமிடை
-
தல்
iṭai-miṭai-v.tr. <>id.+.To intermingle;
நடுவேகலத்தில் பொய்யோ டிடைமிடைந்த சொல். (நாலடி.80).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 287 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், iṭai, word, words, nilai, gram, paṭu, intr, sentence, used, speech, மெய்ம்மயக்கு, இடைமகன், இடைப்பாட்டம், interim, figure, தண்டி, coming, ordinary, maṇṭapa, இடை1, tamil, இடைநிலை, நில், இடைநிலைத்தீவகம், middle, state, rhet