சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2867
Word
English & Tamil Meaning (பொருள்)
பெரியபிள்ளை
periya-piḷḷain. <>id.+.Aged man of a village or a family, held in respect;
ஊர் அல்லது குடும்பத்திற்குத் தலைமையாக மதிக்கப்பட்டவன். Loc.
பெரியபுராணம்
periya-purāṇamn. <>id.+.A hagiologic poem containing the lives of the sixty-three nāyaṉmār, by Cēkkiḻār;
நாயன்மார் அறுபத்துமூவர் சரிதங்களைப்பற்றிச் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்.
பெரியபுலு
periya-pulun. <>id.+.Cant for hundred, as a large ten;
நூறு. (J.)
பெரியபுனுகுப்பூனை
periya-puṉuku-p-pūṉain. <>id.+.Large civet cat, Viverra zebettia;
புனுகுப்பூனைவகை.
பெரியபூளை
periya-pūḷain. <>id.+.Large poolay, m. sh., Aerua javanica;
செடிவகை. (M. M. 702.)
பெரியபெயர்
periya-peyarn. <>id.+.Great fame, celebrity;
பெரும்புகழ். (W.)
பெரியபெருமாள்
periya-perumāḷn. <>id.+.1. God at šriraṅgam;
திருவரங்கத்துத் திருமால் பெரிய பெருமாளரங்க ராடிரூசல். (அஷ்டப் ஊசல். 1).
2. Paramount sovereign; emperor;
பேரரசன். பெரியபெருமாள் பிரதிமம் ஒன்று (S. I. I. ii, 155).
பெரியபொருள்
periya-poruḷn. <>id.+.Brahma, as the supreme Being;
பரப்பிரமம். ஞானவானந்தமாம் பெரிய பொருளைப் பணிகுவாம் (தாயு. திருவருள். பரசிவ. 2).
பெரியம்மா
periyammān. <>id.+அம்மா.See பெரியம்மாள்.
.
பெரியம்மாள்
periyammāḷn. <>id.+அம்மாள்.1. Senior paternal uncle's wife;
தகப்பனுக்கு மூத்தசகோதரன் மனைவி.
2. Mother's elder sister;
தாயின் மூத்தசகோதரி.
3. The elderly lady or mistress of a house;
வீட்டுக்கு எஜமானி. Loc.
பெரியம்மான்
periyammāṉn. <>id.+அம்மான்.1. Eldest of mother's brothers;
தாயுடன் பிறந்த சகோதரருள் மூத்தவன். (W.)
2. Father's elder sister's husband;
தந்தைக்கு மூத்த சகோதரியின் கணவன்.
பெரியம்மான்பச்சரிசி
periyammāṉ-paccaricin.Pill-bearing spurge, small herb, Euphorbia pilulifera;
செடிவகை. (M. M. 27.)
பெரியம்மை
periyammain. <>பெரிய+அம்மை.1. See பெரியம்மாள். Colloq.
.
2. Smallpox, personified as a deity;
வைசூரிவகை. Colloq.
3. Goddess of Misfortune;
மூதேவி. மட்டில் பெரியம்மை வாகனமே (தனிப்பா. i, 96, 17).
பெரியமரம்
periya-maramn. <>id.+.A large catamaran;
கடலோடிகளது பெரிய கட்டுமரம். Loc.
பெரியமனசு
periya-maṉacun. <>id.+.See பெரியமனம். Loc.
.
பெரியமனம்
periya-maṉamn. <>id.+.1. Noble mind, magnanimity;
உதாரமனம். (W.)
2. Favour;
தயை. Loc.
பெரியமனிதன்
periya-maṉitaṉn. <>id.+.See பெரியமனுஷன்.
.
பெரியமனுஷன்
periya-maṉuṣaṉn. <>id.+manuṣya.1. Great man;
சிறந்தோன். (W.)
2. Wealthy, influential man;
செல்வமும் செல்வாக்குமுள்ளவன்.
3. Man of position, official or otherwise;
உயர்ந்த நிலையிலுள்ளவன்.
4. Aged man;
வயது முதிர்ந்தவன். (W.)
5. Headman of a caste, as of washermen;
வண்ணாரச்சாதித்தலைவன். (E. T. vii, 317.)
பெரியமனுஷி
periya-maṉuṣin. <>id.+.1. Aged woman;
வயது முதிர்ந்தவள்.
2. Influential woman; woman of position;
தகுந்த நிலையிலுள்ளவள்.
3. See பெரியவள், 2.
.
பெரியமனுஷியா
-
தல்
periya-manuṣi-yā-v. intr. <>id.+.To attain puberty, as a girl;
இருதுமதியாதல். Loc.
பெரியமாவிலிங்கம்
periya-māviliṅkamn. <>id.+.A species of garlic-pear, s. tr., Crataeva religiosa-nurvala;
மாவிலிங்கவகை. (L.)
பெரியமுப்பழம்
periya-muppaḻamn. <>id.+.An ancient treatise on poetics, not now extant;
பாட்டியன்மரபு கூறும் ஒரு பழைய நூல். (யாப். வி. பக். 516.)
பெரியமூக்கிரட்டை
periya-mūkkiraṭṭain. <>id.+.Pointed-leaved hogweed, s. cl., Boerhavia repanda;
மூக்குத்திக்கொடிவகை. (L.)
பெரியமூளை
periya-mūḷain. <>id.+.1. Cerebrum, fore-brain;
மூளையின் மேற்பாகம் (இங். வை. 27).
2. Person of great intellect;
அறிவாற்றல் மிக்கவன்.
பெரியமேளம்
periya-mēḷamn. <>id.+.1. Music of big instruments, like clarionet, pipe, drum and cymbals, dist. fr. ciṉṉa-mēḷam;
நாகசுரம் தவுல் முதலிய பெரிய வாத்தியங்கள் கொண்டு வாசிக்கப்படும் மேளம்.
2. Anything done on a large scale;
பெரும்படியாய்ச் செய்வது. அவர் காரியமெல்லாம் பெரிய மேளம். Tinn.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2867 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், periya, பெரிய, large, பெரியம்மாள், woman, aged, influential, பெரியமனுஷன், வயது, மேளம், பெரியமனம், position, elder, செடிவகை, நூல், பெரியபெருமாள், mother, பெரியம்மை, sister, colloq