சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2683
Word
English & Tamil Meaning (பொருள்)
பிரம்புக்கொன்றை
pirampu-k-koṉṟain. perh. பிரம்பு+.Siamese tree senna, m.tr., Cassia siamea;
கொன்றைமரவகை.
பிரம்புகட்டு
-
தல்
pirampu-kaṭṭu-v. tr. <> id.+.To fit up with a rim, as a vessel;
பாத்திரங்கட்கு விளிம்பிலே வளையங்கட்டுதல். விளிம்பு பிரம்புகட்டின வட்டிலில் (சீவக. 2700, உரை).
பிரம்புத்தடுக்கு
pirampu-t-taṭukkun. <> id.+.Rattan-blinds;
பிரம்பினாற் செய்த தட்டி. (C. E. M.)
பிரம்புரி
pirampurin.A kind of paddy;
ஒருவகைநெல். பெரிய செந்நெற் பிரம்புரி கெந்தசாலி (தேவா. 700, 7).
பிரம்மாதாயம்
pirammātāyamn.See பிரமதாயம். (C. G.)
.
பிரமக்கியானம்
pirama-k-kiyāṉamn. <> brahman+.See பிரமஞானம்.
.
பிரமக்கிரந்தி
pirama-k-kirantin. <> id.+.1. A kind of knot tied in the sacred thread;
பூணூல் முடிச்சுவகை.
2. Tying together two bunches of sacrificial grass in representation of the union of šiva and šakti;
சிவமும் சத்தியும் கூடுதற்கு அறிகுறியாக இடும் தருப்பைமுடிவகை. (W.)
பிரமக்கிழத்தி
pirama-k-kiḻattin. <> id.+The šakti of the Supreme Being;
இறைவனது சத்தி. பேரின்பமான பிரமக்கிழத்தி (திருவுந்தி. 34).
பிரமக்கொலை
pirama-k-kolain. <> id.+See பிரமகத்தி. (சி. போ. பா. 8, 1, பக்.174, சுவாமிநா.)
.
பிரமகண்டம்
pirama-kaṇṭamn. of. குமரகண்டம்.Cramp;
குரக்குவலிப்பு. (சீவரட்.)
பிரமகத்தி
piramakattin. <> brahma-hatyā.1. Murder of a Brahmin;
பார்ப்பனக்கொலை.
2. Sin of Brahminicide, haunting and pursuing the murderer;
கொன்றானைத் தொடர்ந்துபற்றும் பார்ப்பனக் கொலைப்பாவம். பிரமகத்தியி னீங்கிப் பிறங்குவான் (சேதுபு. தனுக். 57).
3. Ghost of a murdered Brahmin, believed to haunt the murderer;
பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்து வரும் இறந்தவனுருவம்.
பிரமகபாலம்
pirama-kapālamn. <> brah-man+.1. Skull of the fifth head of Brahmā, plucked off by šiva and carried in His hand as a begging bowl;
பிரமனது ஐந்தாந்தலையைக்கிள்ளிப் பிட்சையோடாகச் சிவன் கைக்கொண்டதலையோடு.
2. A sacred place of pilgrimage in Badarinath;
இமயமலையிலுள்ள ஒரு புண்ணியதலம்.
பிரமகற்பம்
pirama-kaṟpamn. <> id.+.1. The age or cosmic period of Brahmā;
பிரமனாயுட்காலம். முன்னமோர் பிரமகற்ப முடிவினில் (திருவாலவா. 47, 1).
2. A very large number;
ஒரு பேரெண். (திவா.)
பிரமகன்னிகை
pirama-kaṉṉikain. <> Brahma-kanyakā.Sarasvatī, the Goddess of Learning;
சரஸ்வதிதேவி. (யாழ். அக.)
பிரமகாண்டம்
pirama-kāṇṭamn. <> brahman+.A section of the Vēdas.
See ஞானகாண்டம். (சி. போ. பா, 1, 1, பக். 32, சுவாமிநா.)
பிரமகாதகன்
pirama-kātakaṉn. <> id.+.Murderer of a Brahmin;
பிராமணனைக் கொலைசெய்தோன் (சங். அக.)
பிரமகாயத்திரி
pirama-kāyattirin. <> id.+.A sacred mantra repeated by the Brahmins in their daily worship;
பிராமணர் நாடோறும் செபிக்கும் மந்திரவகை.
பிரமகீதை
pirama-kītain. <> id.+.A treatise on Vēdānta by Tattuva-rāyar;
தத்துவராயசுவாமிகள் இயற்றிய ஒரு வேதாந்தநூல்.
பிரமகுலம்
pirama-kulamn. <> id.+.The Brahmin caste;
பார்ப்பனச்சாதி.
பிரமகூர்ச்சம்
pirama-kūrccamn. <> id.+.1. A knot of darbha grass;
தருப்பைமுடிச்சு. பிரமகூர்ச்சந் தோயுநீர் (கூர்மபு. தானமுரைத்.17).
2. A religious fast in which paca-kavviyam alone is taken;
பட்டினியிருந்து பஞ்சகவ்வியத்தை உட்கொள்ளும் விரதவிசேடம்.
3. The five products of the cow;
பஞ்சகவ்வியம்.
பிரமகைவர்த்தம்
piramakaivarttamn.See பிரமவைவர்த்தம். (திவா.)
.
பிரமசடங்கம்
pirama-caṭaṅkamn. <> brahman+ṣad-aṅga.A group of six mantras the recited while touching the six members of the body in consecration;
உடலின் ஆறுறுப்புக்களைத் தொட்டு உச்சரிக்கும் ஆறு மந்திரங்கள். (W.)
பிரமசமாசம்
pirama-camācamn. <> id.+.The Brahma Samāj, a reformed sect of the Hinduism;
நவீன இந்து மதங்களுள் ஒன்று.
பிரமசர்ப்பம்
pirama-carppamn. <> id.+.A species of snake;
பாம்புவகை. Loc.
பிரமசரிதன்
pirama-caritaṉn. <> id.+.See பிரமசாரி. (சங். அக.)
.
பிரமசரியம்
pirama-cariyamn. <> brahma-carya.1. Student-life, life of one devoted to the study of the Vēdas, one four ācciramam, q.v.;
ஆச்சிரமம் நான்கனுள் ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நிலை. (சீவக. 712, உரை.);
2. Celibate life;
விவாகமற்ற வாழ்வு. Loc.
3. Penance;
தவம். (அக. நி.)
4. Brahmins;
பார்ப்பனர். (அக. நி.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2683 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், pirama, brahmin, brahma, sacred, pirampu, murderer, பிரமகத்தி, life, brahman, திவா, brahmins, vēdas, brahmā, šakti, kind, பிரம்புரி, சீவக, knot, grass, பிரமக்கிழத்தி, šiva, சுவாமிநா