சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2526
Word
English & Tamil Meaning (பொருள்)
பரூஉ
1
parūu,n. <>பரு-.1. Thickness, greatness, largeness;
பருமை. பரூஉக் குற்றரிசி (புறநா. 399).
2. Increasing;
மிகுதிப்படுகை. (W.)
பரூஉ
2
parūu,n. perh. பறி -.Plucking, snatching;
பறிக்கை. (பிங்.)
பரூஉக்கை
parūu-k-kai,n. <>பரூஉ1 +.1.Large, powerful arm;
பருத்த கை.
2. Big wooden bar placed perpendicularly over the axle of a cart;
வண்டியின் தெப்பக்கட்டை. எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார் (பெரும்பாண். 48).
பரேச்சாப்பிராரத்தம்
parēccā-p-pirārattam,n. <>para + icchā +.Experiencing the fruits of karma in an utterly indifferent attitude ;
உபேக்ஷையோடு பிராரத்தகருமத்தின் பயனை அனுபவிக்கை (வேதா. சூ.175, உரை.)
பரேண்
parēṇ,n. <>பரு-மை + எண்.Great strength;
மிக்கவன்மை. பரேணுடைப் புயத்து (விநாயகபு. 73, 49).
பரேதம்
parētam,n. <>parēta.Devil, demon;
பிசாசம். (யாழ். அக.)
பரேதராசன்
parēta-rācaṉ,n. <>id. +.Yama, as the Lord of the dead;
[பிரேதங்கட்கு அதிபதி] யமன். (யாழ். அக.)
பரேதன்
parētaṉ,n. <>parēta.He who is dead;
மரணமுற்றவன். Nā.
பரேபம்
parēpam,n. <>parēpa.Reservoir of water;
நீர்நிலை. (யாழ். அக.)
பரேர்
parēr,n. <>பரு-மை + ஏர்.Much beauty;
மிக்க அழகு. பரோம்புழகுடன் (குறிஞ்சிப். 96).
பரை
1
parai,n. <>parā.1. See பார்வதி. (மாறனலங். 665).
.
2. Parā-šakti;
சிவசத்தி. (சைவச. பொது. 74, உரை.)
3. (šaiva.) The state of individual soul in which it remains actionless enjoying grace from šiva;
சீவான்மா தன்செயலற்றுச் சிவபெருமானது அருள்பெற்று நிற்கும் நிலை. அந்தப் பரிபூரணமே பரையாய் (ஒழிவி. பொதுவி. 41).
4. An initiation.
See நைட்டிகதீக்ஷை. (சி. சி. 8. 5; ஞானப்.)
பரை
2
parai,n.1. Measure of capacity, See பறை3. (W.)
.
2. A cubic measure=2 cub. it. 544 cub. in.;
2 கன அடியும் 544 கன அங்குலமுங்கொண்ட அளவு. (M. M. 655.)
பரைச்சி
paraicci,n. <>பரை1.Pārvatī;
பார்வதி. அறங்காத்தமா பரைச்சி (திருப்பு. 1037).
பரைநாதன்
parai-nātaṉ,n.A kind of sulphur;
நெல்லிக்காய்க்கந்தி. (தைலவ. தைல.)
பரையோகம்
parai-yōkam,n. <>பரை1 +.(šaiva.) The state of individual soul in which it loses its self-consciousness expecting grace from šiva;
சீவான்மா தற்போதமழிந்து சிவபிரானது அருளை எதிர்பார்க்கும் நிலை. (ஒழிவி. யோக. 20, உரை.)
பரோட்சக்கியானம்
parōṭca-k-kiyāṉam,n.See பரோட்சஞானம்.
.
பரோட்சசாக்ஷியம்
parōṭca-cākṣiyam,n. <>parōkṣa +.Indirect evidence;
தன்கண்ணாற்பாராது சொல்லும் சாட்சியம். (C. G.)
பரோட்சஞானம்
parōṭca-āṉam,n. <>id. +.1. Knowledge obtained without the help of the senses; indirect cognition, such as inference;
பிரத்தியக்ஷமல்லாத ஞானம். (வேதா. சூ. 112.)
2. Spiritual knowledge;
பரஞானம். (வே தா. சூ. 115, உரை.)
பரோட்சம்
parōṭcam,n. <>parōkṣa.1. That which is beyond the range of sight;
கண்ணுக்கெட்டாதது. பரமபாவனை பரோட்சமாம் (கைவல். சங். 86).
2. See பரோட்சஞானம், 2. (வேதா. சூ. 112.)
.
3. Aside, a stage-direction;
அரங்கிலுள்ளோர் காதில் விழாதபடி கூறும் மொழி.
4. Past time;
சென்றகாலம். (யாழ். அக.)
பரோதிதம்
parōtitam,n.Frightening;
அச்சுறுத்துகை. (யாழ். அக.)
பரோபகாரம்
parōpakāram,n. <>parō-pakāra.Philanthropy;
பிறர்க்குச்செய்யும் உதவி.
பரோபகாரி
parōpakāri,n. <>parōpakārin.Philanthropist;
பிறர்க்கு உதவி புரிவோன்.
பல்
2
pal,n. [T. palu, K. hal, M. pal.]1. Tooth; fang;
எயிறு. முகை வெண்பல் (கலித். 58).
2. Tusk;
யானை பன்றி முதலியவற்றின் கொம்பு. ஒரு கருங்கேழலின் பல் (பிரபுலிங். கைலாச. 14).
3. Fluke of an anchor;
நங்கூர நாக்கு. (W.)
4. Cog of a wheel; tooth of a saw or sickle;
சக்கரம் வாள் முதலியவற்றின் பற்போன்ற கூர். (W.)
5. Tooth of a comb;
¢சீப்புப்பல் (W.)
6. Scollop in the border of a garment; indentation; notch;
காலிறங்காத சேலையில் கோத்துவாங்கும் மொக்கு. (W.)
7. The inner tooth-like piece, as of garlic;
வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் தனித்தனியான உள்ளீடு. (W.)
8. Small piece of cocoanut pulp;
தேங்காய் உள்ளீட்டின் சிறுதுண்டு. Loc.
பல்கணி
pal-kaṇi,n. <>பல்1 + கண்.Lattice, window;
சாளரம், (யாழ். அக.)
பல்கலைக்கழகம்
pal-kalai-k-kaḻakam,n. <>id. +.University;
மாகாணத்தில் உயர்தரப்படிப்பை நடத்துவிக்கும் வித்தியாசங்கம். Mod.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2526 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், parai, tooth, வேதா, parōṭca, பரோட்சஞானம், parūu, முதலியவற்றின், parēta, measure, பரை1, பரைச்சி, knowledge, piece, ஒழிவி, உதவி, indirect, parōkṣa, šiva, பார்வதி, šaiva, parā, dead, பரூஉக்கை, state, individual, சீவான்மா, பரூஉ, grace, soul, நிலை