சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2519
Word
English & Tamil Meaning (பொருள்)
பரிவாரதேவதைகள்
parivāra-tēvatai-kaḷ,n. <>பரிவாரம்+.Attendant deities of a superior god;
சுற்றுத்தேவதைகள்.
பரிவாரம்
parivāram,n. <>pari-vāra.1.Train, retinue, attendants;
சூழ்வோர். (திவா.)
2. Army, body of troops;
படை. (சது.)
3. Servants;
ஏவலாளர்.
4. A sub-division of Maṟavar and Akampaṭiyar castes;
மறவர் அகம்படியருள் ஒரு பிரிவினர். (E. T.)
5. The Toṭṭiya Zamindars in the districts of Coimbatore, Trichinopoly, Madura and Tinnevelly;
கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களிலுள்ள தொட்டிய ஜமீன்தார்கள். (E.T.)
6. Case, sheath;
உறை. (யாழ்.அக.)
பரிவாரன்
parivāraṉ,n. <>id.Servant, follower;
வேலைக்காரன். (நாமதீப.138.)
பரிவாராலயம்
parivārālayam,n. <>id.+ā-laya.Temples of the subordinate deities;
சுற்றுக்கோயில். ஸ்ரீராஜ ராஜேஸ்வர முடையார் கோயிலிற் பரிவாராலயத்து (S.I.I.ii,86).
பரிவாலி
pari-vāli,n. <>பரி3+.Poorman's millet.
குதிரைவாலி. (மூ.அ.)
பரிவிக்கட்டு
-
தல்
parivi-k-kaṭṭu-,v. intr. <>பரி1-+.To intercede.
See பரிந்துபேசு-. நீ அவனுக்குப் பரிவிக்கட்டினது போதும்.
பரிவிண்ணன்
pariviṇṇaṉ,n. <>pariviṇṇa.See பரிவித்தி. (யாழ்.அக.)
.
பரிவித்தி
parivitti,n. <>pari-vitti.Unmarried elder brother whose younger brother is married;
தம்பி மணந்துகொள்ளத் தான் மணமுடியாத தமையன். (யாழ்.அக.)
பரிவிந்தகன்
parivintakaṉ,n. <>pari-vindaka.See பரிவேத்தா. (யாழ்.அக.)
.
பரிவிரட்டம்
pariviraṭṭam,n. prob, paribhraṣṭa.Mistake, error, blunder;
தவறு. (யாழ்.அக.)
பரிவிராசகன்
parivirācakaṉ,n. <>parivrājaka.Ascetic, sannyāsin;
துறவி.
பரிவிருகிதம்
parivirukitam,n. <>paribrmhita.Increase;
அதிகப்படுகை. (யாழ். அக.)
பரிவிருங்கணம்
pariviruṅkaṇam,n. <>pari-brmhaṇa.Growth; increase;
மிகுதிப்படுகை. (யாழ்.அக.)
பரிவிருத்தி
parivirutti,n. <>parivrtti. (W.)1. (Astron.) Revolution of a planet;
கிரகங்களின் சுற்று.
2. (Astrol.) Tables used in determining the passage of planets from one sign to another;
கிரகசாரவாக்கியம்.
பரிவீதம்
parivītam,n. <>pari-vīta.Brahmā's bow;
பிரமன் விலை. (யாழ்.அக.)
பரிவு
parivu,n. <>பரி1-.1. Affection, love;
அன்பு. பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் (புறநா. 184).
2. Devotion. piety;
பக்தி. பரிவின்றன்மை யுருவுகொண் டனையவன் (பதினொ. திருக்கண்ண. 1, கல்லாட.)
3. Delight, pleasure;
இன்பம். (சூடா.)
4. Sympathy;
அனுதாபம். பரிசிலாளர் வயி னளவில் பரிவும் (சேதுபு. முத்தீர். 17).
5. Distress, affliction;
வருத்தம். கம்பஞ்செய் பரிவு நீங்கி (சீவக. 1737).
6. Fault, defect;
குற்றம். பண்வகையாற் பரிவு தீர்ந்து (சிலப். 7,1).
7. Ripeness;
பக்குவம். (யாழ்.அக.)
பரிவேசம்
parivēcam,n.See பரிவேடம். (யாழ்.அக.)
.
பரிவேட்டணம்
parivēṭṭaṇam,n. <>parivēṣṭana. (யாழ். அக.)1. Circumference;
சுற்றளவு.
2. Surrounding;
சூழ்கை.
பரிவேட்டி
-
த்தல்
parivēṭṭi-,11 v. tr. <>pari-vēṣṭa.To surround; to circumambulate; சுற்றுதல். (சங்.அக.)
.
பரிவேட்டி
parivēṭṭi,n. <>pari-vēṣṭita.Circumambulation from left to right;
வலம் வருகை . தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத்.உலா, 93).
பரிவேட்பு
parivēṭpu,n. <>pari-vēṣa.Circling, hovering, as of a bird;
பறவை வட்டமிடுகை. பார்வற் கொக்கின் பரிவேட்பு (பதிற்றுப்.21, 27).
பரிவேடணம்
parivēṭaṇam,n. <>parivēṣaṇa. (யாழ். அக.)1. Serving meals to guests;
விருந்தினர்க்குப் பரிமாறுகை.
2. See பரிவேட்டணம், 2.
.
பரிவேடம்
parivēṭam,n. <>pari-vēṣa.Halo around the sun or moon;
சந்திர சூரியர்களைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள்வட்டம். பரிவேட மிட்டதுகொள் பார் (பாரதவெண். வாசுதே.124).
பரிவேடிப்பு
parivēṭippu,n. <>id.See பரிவேடம். (சீவக. 1098, உரை.)
.
பரிவேத்தா
parivēttā,n. <>pari-vēttā nom. masc. sing. of parivēttr.An younger brother who marries while his elder brother remains unmarried;
தமையன் மணவாதிருக்கத் தான் மணந்துகொண்ட தம்பி. பரிவேத்தா வென்னும் புன்சொற்கு (திருவாலவா, 43, 5)
பரிவேதனம்
1
parivētaṉam,n. <>paridēvana.1. Weeping, bewailing, lamentation;
அழுகை.
2. Suffering, anguish;
பெருந்துயரம். (W.)
பரிவேதனம்
2
parivētaṉam,n. <>parivēdana. (யாழ். அக.)1. Marriage;
விவாகம்.
2. Acquisition;
சம்பாத்தியம்.
3. Extensive knowledge;
பரந்த அறிவு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2519 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், pari, brother, பரிவேடம், பரிவேத்தா, பரிவு, பரிவேட்டணம், சீவக, பரிவேட்டி, பரிவேட்பு, parivētaṉam, பரிவேதனம், vēṣa, parivēṭṭi, தமையன், unmarried, பரிவித்தி, பரி1, deities, elder, younger, பரிவாரம், தான், தம்பி, increase