சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2477
Word
English & Tamil Meaning (பொருள்)
பதினைந்தாம்புலி
patiṉ-aintām-puli,n. <>பதினைந்து+.A kind of chess played with two sets of pieces, one set numbering three and styled puli, and the other set numbering fifteen and styled nāy,
கீறிய கட்டத்தில் புலியென்று கூறப்படும் மூன்றுகாய்களையும் நாயென்று கூறப்படும் பதினைந்துகாய்களையும் வைத்து ஆடப்படும் விளையாட்டுவகை.
பதினைந்துநாயும்புலியும்
patiṉaintu-nāyum-puliyum,n.See பதினைந்தாம்புலி. Nā.
.
பதினெராந்திருமுறை
patiṉ-orān-tirumuṟai,n. <>பதினொன்று+.The eleventh canonical book of saivites, consisting of poems composed by different šaiva Saints;
சிவனடியார் பலரால் பாடப்பெற்றதும் சைவத்திருமுறைகளுள் பதினொன்றாவதுமான நூற்றொகுதி.
பதினோராடல்
patiṉ-ōr-āṭal,n. <>id. +.See கூத்து,2. (சிலப், 3, 14 உரை.)
.
பதுக்கம்
patukkam,n. <>பதுங்கு-.1. Skulking, lurking, hiding;
ஒளிக்கை.
2. Clandestine conduct;
கபடம் பதுக்கமாய் நடக்கிறான். (W.)
3. Stooping, crouching, hiding, as one watching to shoot a game, as a beast to spring on its prey;
எய்தல் பாய்தல் முதலியவற்றுக்காகப் பதுங்குகை.
4. Servility, cringing, fawning ;
பின்னிற்கை. (W.)
பதுக்காய்
patukkāy,n. (J.)1. That which is short, stout or stocky, as a person or an animal ;
பருத்துக் குள்ளமாயுள்ள-வன்து.
2. A kind of snipe ;
உள்ளான்வகை.
பதுக்காயன்
patukkāyaṉ,n. <>பதுக்காய்.Short, thickest person;
குறுக்கே வளர்ந்த குள்ளன். (W.)
பதுக்கு
-
தல்
patukku-,5 v. tr. Caus. of பதுங்கு-.To hide, secrete, conceal;
ஒளித்தல்.
பதுக்கை
patukkai,n. perh. பதுங்கு-.1. Pile of stones;
கற்குவியல். பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை (ஐங்குறு.362).
2. Heap of leaves;
இலைக்குவியல். பதுக்கை நிரைத்த கடுநவை யாராற்று (கலித்.12, 2).
3. Sand-bank; elevation;
மணற்குன்று பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி (புறநா.264).
4. Thicket, bushes, low jungle;
சிறுதூறு. (திவா.) உவலைப் பதுக்கை முரம்பு (தஞ்சைவா.363).
5. Rock ;
பாறை. (பிங்.) பாடலம் புனைந்தகற் பதுக்கை யிவ்விடனே (கல்லா. 6).
பதுக்கைக்கடவுள்
patukkai-k-kaṭavuḷ,n. <>பதுக்கை +.Idol on an elevation or mound;
மணற்குன்றின்மேலுள்ள நடுகற்றெய்வம். வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் (அகநா.35).
பதுகரை
patukarai,n.Silvery-leaved ape flower.
See பழமுண்ணிப்பாலை. (மலை.)
பதுங்கலன்
patuṅkalaṉ,n. <>பதுங்கு-. (W.)1. Skulker;
பின்னிற்பவன்.
2. Shy, bashful person;
சங்கோசமுள்ளவன்.
பதுங்கி
patuṅki,n.See பதுங்கலன். (W.)
.
பதுங்கு
-
தல்
patuṅku-,5 v. intr. [K. hatuku.]1. To hide, conceal oneself;
ஒளித்தல். அரண்புக்குப் பதுங்கினானை (கம்பரா.அங்கத.31).
2. To lie in ambush, crouch;
பதிவிருத்தல். பதுங்கிலும் பாய்புலி (திருமந்.2914).
3. To disappear;
மறைதல். பருதியை முகின்மறைப்பப் பாயொளி பதுங்கினாற்போல் (சி.சி, 2, 83).
4. To fawn, cringe,
பின்னிற்றல் . (W.)
See பதுங்குபிடி-. Loc.
.
பதுங்கு
patuṅku.n. <>பதுங்கு.Brick on edge;
குத்துக்கல்வரிசை. Loc.
பதுங்குபிடி
-
த்தல்
patuṅku-piṭi,v. tr. <>பதுங்கு+.To pave with bricks on edge, as in terracing;
மேற்றளத்துக்குச் சிறுகற்பாவுதல். Loc.
பதுங்கூன்று
-
தல்
patuṅkūṉṟu,v. tr. <>id. +.See பதுங்குபிடி-. Loc.
.
பதுமகூடம்
patuma-kūṭam,n. <>id. +.Temple with 154 towers and 19 storeys;
154 சிகரங்களையும் 19 மேனிலைக்கட்டினையுமுடைய கோயில் (சுக்கிரநீதி, 230.)
பதுமகேசரம்
patuma-kēcaram,n. cf. padma-kēsara.Mastwood.
See புன்னை. (சங்.அக.)
பதுமகோசம்
patuma-kōcam,n. <>padma +.Temple with 301 towers and 36 storeys;
301 சிகரங்களையும் 36 மேனிலைக்கட்டினையுமூடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)
பதுமகோசிகம்
patuma-kōcikam,n. <>id. +. (Nāṭya.)A gesture with one hand in which the fingers are so held as to appear like the calyx of a lotus;
தாமரைக்காய் உருவமாகக் கை குவித்து ஐந்துவிரலையும் அகலவிரித்துக் காட்டும் இணையாவினைக்கைவகை (சிலப், 3, 18, உரை.)
பதுமகோமளை
patuma-kōmaḷai,n. <>d. +.The wife of šūrapadma, famed for her chastity;
கற்பிற்சிறந்த சூரபன்மன்தேவி. (கதபு. புதல்வ.1.)
பதுமநாபன்
patuma-nāpaṉ,n. <>padmanābha.Viṣṇu, as lotus-navelled;
[உந்தித்தாமரையோன்] திருமால்.
பதுமநிதி
patuma-niti,n. <>padma +.One of the nine treasures of Kubēra;
குபேரனது. நவதிதியிலொன்று. சங்கநிதி பதுமநிதி யிரண்டுந்தந்து (தேவா, 1230, 10).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2477 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பதுங்கு, patuma, பதுக்கை, person, patiṉ, padma, patuṅku, பதுங்குபிடி, edge, temple, towers, storeys, lotus, பதுமநிதி, சுக்கிரநீதி, கோயில், சிகரங்களையும், பதுங்கலன், patukkai, puli, hiding, சிலப், கூறப்படும், numbering, styled, பதுக்காய், short, பதினைந்தாம்புலி, kind, ஒளித்தல், conceal, hide, elevation