சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2322
Word
English & Tamil Meaning (பொருள்)
நுதற்குறி
nutaṟ-kuṟi,n. <>நுதல்3 +.Sacred marks on the forehead;
புண்டரம் திலகம் முதலிய நெற்றிக்குறிகள். (த்யிவா)
நுதற்சுடிகை
nutaṟ-cuṭikai,n. <>id.+.See நுதலணி. (திவா.)
.
நுதற்சூட்டு
nutaṟ-cūṭṭu,n. <>id.+.See நுதலணி.திருநுதற் சூட்டயல் சுடரும் (பெருங். உஞ்சைக்.40, 101).
.
நுதனாட்டி
nutaṉāṭṭi,n. <>id. + நாட்டம்.Durgā, as having an eye in Her forehead;
[நெற்றிக்கண்ணுடையவள்] துர்க்கை. பிறைநுத னாட்டி (கல்லா. 78, 11).
நுதி
-
த்தல்
nuti-,11 v. tr. pern. நுதி.To cover with, as a garment lining;
அடைசுதல். நுதிமயிர்த் துகிற் குப்பாயம் (சீவக. 819).
நுதி
nuti,cf. நுனி. n.1. Tip, point, end;
நுனி. நுதிமுக மழுங்க ... பாபுநின்களிறு (புறநா. 31).
2. Acumen, sharpness of intellect;
அறிவுக்கூர்மை. நுதிகொ ணாகரிகன் (சீவக. 1110).
3. Head;
தலை. நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் னோற்றங்காண் (கலித். 101).
4. (Astron.) The error over and above the longitude arrived at after 12 cycles of pacāṅka-vākkiyam for 248 days in the vākya mode of calculation;
வாக்கிய முறைப்படி செய்த சந்திரகணனத்தில் ஏற்படும் வாக்கியப்பிழை. (w.) --adv.
In front of, before;
முன்பு. நூற்றைவரோடு நடந்தாணுதி (சீவக. 1933, உரை)
நுதித்தோல்
nuti-t-tōl,n. <>நுதி+.Foreskin;
ஆண்குறியின் நுனித்தோல். (W.)
நுதிவிழுதல்
nuti-viḻutal,n. <>id.+.(Astron.) mistakes occurring sometimes in the use of pacāṅka-vākkiyam tables;
பஞ்சாங்கவாக்கியகணனத்தில் ஏற்படும் பிழை. (W.)
நுது
-
த்தல்
nutu-,11 v. tr. [K. nondu]1. To put out, quench, extinguish;
அவித்தல். நெய்யா லெரி நுதுப்பே மென்றற்றால் (குறள், 1148).
2. To destroy;
அழித்தல். வரதன் நம்படையை நுதுக்கும் (தணிகைப்பு. சீபரி.162).
3. To remove;
நீக்குதல். இன்ன னுதுக்குந் தண்கவிகை வள்ளல் (விநாயகபு.46,4).
நுதுப்பு
nutuppu,n. <>நுது-.Quenching, suppressing;
தணிக்கை. (W.)
நுந்தாவிளக்கு
nuntā-viḷakku,n. <>நுந்து- + ஆ neg.+.Ever-burning lamp, as in a temple;
கோயில்களிலுள்ள வாடாவிளக்கு. (S.I.I.ii, 132.)
நுந்து
-
தல்
nuntu-,5 v. tr. cf. உந்து-. [K. nondu.]1. To propel, thrust forth, cast away;
தள்ளுதல். பரந்துபொன் னிரந்து நுந்தி (திவ். திருச்சந். 51).
2. To trim, stir up;
தூண்டுதல். துந்தாத வொண்சுடரே (தேவா. 811, 5).
நுந்தை
nuntai,n. <>நும்.Your father;
உன்தந்தை. நுந்தை நும்மூர்வருதும் (ஐங்குறு. 92).
நுப்பது
nuppatu,n.[M. nuppatu.] corr. of
முப்பது.
நுபம்
nupam,n. cf. நூபம்.Madar.
See எருக்கு. (மலை.)
நுபுவருத்தி
nupuvarutti,n.Tortoiseshell;
ஆமையொடு. (சங்.அக.)
நும்
numpron.The form which nīyir, the second personal pronoun plural, assumes in oblique cases; -- part. The infix which ellīrum takes in oblique cases, as
வேற்றுமையுருபிற்குமுன் நீயிர் என்ற முன்னிலைப்பன்மை கொள்ளு முருவம். நும்மெனிறுதி யியற்கை யாகும் (தொல். எழுத். 187). எல்ல¦ர்நும்மையும் எல்ல¦ரும் என்ற முன்னிலைப்பெயர் வேற்றுமையுருபேற்கும்போது கொள்ளுஞ் சாரியை எல்ல¦ரு மென்னு முன்னிலை யிறுதியும்..நும்மிடை வரூ முன் முன்னிலை
நும்பி
numpin. <>நும்.Your younger brother ;
உன்தம்பி. நும்பி பின்வரு நும்பி (தணிகைப்பு. சீபரி.397).
நும்முன்
num-muṉn. <>id.+.1.Your ancestor, as father ;
உன்முன்னோன். சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன் (புறநா. 174).
2. Your elder brother ;
உன் தமையன்.
நுமன்
numaṉn. <>id.Your relation, party or associate ;
உம்மைச்சார்ந்தவன். (தொல்.சொல். 410, இளம்பூ.).
நுமையன்
num-aiyaṉn. <>id. +.Your elder brother ;
உன் தமையன். வில்வலாய் நுமையனாரைக் காண்டி (சீவக. 1709).
நுரம்பு
nurampun.Mud, mire ;
சேறு . (பிங்.)
நுரு
nurun.Tender shoots in paddy stubble ;
அறுத்ததாளில் முளைக்கும் தளிர். (J.)
நுரை
1
nurain.1. [T. nurugu, K. nore, M. nura.]Froth, foam, scum, spume, lather ;
நீர்க்குமிழிகளின் தொகுதி. நீர்க்கு நுரையுண்டு (நாலடி, 221)
2. Bubble;
குமிழி. (சூடா.)
3. Butter;
வெண்ணெய். உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து (பெரும்பாண். 158).
4. Flaw in a diamond;
வயிரக்குற்றவகை.
5. Whiteness;
வெண்மை. (யாழ். அக.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2322 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நுதி, சீவக, nuti, brother, nutaṟ, நும், நும்பி, nuppatu, father, elder, தமையன், oblique, cases, நுந்தை, முன்னிலை, தொல், நும்முன், தணிகைப்பு, நுனி, புறநா, த்தல், நுதலணி, forehead, astron, pacāṅka, nondu, சீபரி, நுது, ஏற்படும், vākkiyam, நுந்து