சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2182
Word
English & Tamil Meaning (பொருள்)
நழுவுசாதம்
naḻuvu-cātam,n. <>நழுவு-+.See நழுவமுது. (யாழ். அக.).
.
நள்(ளு)
-
தல் [நட்டல்]
naḷ-,5 & 9 v. tr. cf. நளி2.1. To approach, join, associate with;
அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச்செங்.25).
2. To contract friendship, befriend;
நட்புக்கொள்ளுதல். உறினட்டறினொரூஉ மொப்பிலார் கேண்மை. (குறள்இ 812).
3. To like, accept;
விரும்புதல். நள்ளாதிந்த நானிலம் (கம்பரா. கைகேசி 26).
நள்
naḷ,cf. id. n.1. (K. naḷ.) Middle, centre;
நடு. நள்ளிராவும் நண்பகலும் (திவ். திருவாய். 4,7,2).
2. [K.naḷ.] Midday;
உச்சிப்போது. (யாழ். அக.)
3. Night;
இரவு. (பிங்.) நள்ளிற்சாகிலன் பகலிடைச் சாகிலன் (கம்பரா. இரணிய. 17).
4. The 22nd nakṣatra.
See திருவோணம். (திவா.) -adj.
Dense;
செறிந்த. மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் (திருக்கோ.156).
நள்ளலர்
naḷḷalar,n. <>நள்-+அல் neg. + .See நள்ளார். நள்ளலர்க் கடந்த துப்பி னம்பிளை (கந்தபு. மூன்றநா. பானுகோப. யுத். 165).
.
நள்ளாதார்
naḷḷātār,n. <>id. + ஆ neg. + .See நள்ளார். தந்நள்ளாதா ரில்லத்து (நாலடி, 207).
.
நள்ளார்
naḷḷār,n. <>id. + id. + .Enemies, foes,
பகைவர். (சூடா.) நள்ளார் பெரும்படை (கம்பரா. அதிகாயன். 219).
நள்ளி
1
naḷḷi,n.1. [K. naḷḷi.] Crab;
நண்டு. நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9,10,2).
2. Cancer in the Zodiac;
கர்க்கடகராசி. (சூடா.)
3. A liberal chief, one of seven kaṭaivaḷḷalkaḷ, q. v.;
கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பிறங்கு மவை நள்ளி (புறநா. 148).
நள்ளி
2
naḷḷi,n.Relationship ;
உறவு. (சூடா.)
நள்ளிடை
naḷ-ḷ-iṭai,n. <>நள் +.Middle place, central position;
நடுவிடம். நள்ளிடைச் சிவபுர நணுகு மன்னதை (சீகாளத். பு சிலந்தி. 13).
நள்ளிருணாறி
naḷḷiruṇāṟi,n. <>நள்ளிருள் +.Tuscan jasmine .
See இருவாட்சி. நரந்தநாக நள்ளிருணாறி (குறிஞ்சிப். 94).
நள்ளிருள்
naḷ-ḷ-ituḷ,n. <>நன் +.Intense darkness ;
செறிந்தவிருள். நள்ளிருள்யாமத்து (சிலப். 15, 105).
நள்ளு
naḷḷu,n. <>id.1. Middle .
See நள், 1. (W.)
2. Side ;
மருங்கு. (யாழ். அக.)
நள்ளுநர்
naḷḷunar,n. <>நள்-+.Friends, associates, adherents;
சினேகர் (திவா.)
நள்ளெனல்
naḷ-ḷ-eṉal,n.Onom expr. signifying a kind of subdued noise;
ஓர் ஓசைக் குறிப்பு. நள்ளென் மாலை மருதம் பண்ணி (புறநா. 149).
நள
naḷa,n. <>Anala.The 50th year of the jupiter cycle ;
வருஷம் அறுபதனுள் ஐம்பதாவதாண்டு
நளத்தம்
naḷattam,n. <>nalada.Spikenard herb .
See சடாமாஞ்சி. (மலை.)
நளத்தி
naḷatti,n.A woman of the Naḷavar caste;
நளவசாதிப்பெண். (யாழ்.அக)
நளபாகம்
naḷa-pākam,n. <>nala +.1. Excellent cooking, as that of Nala ;
[நளன் செய்த சமையல் போன்றது] மேன்மையான சமையல்.
2. Food cooked excellently;
நன்றாய்ச் சமைத்த உணவு
நளம்
1
nalam,n.A caste in Jaffna;
நளவசாதி. (J.)
நளம்
2
naḷam,n. prob. நளி-.Width breadth, extent;
அகலம். (சது.)
நளம்
3
naḷam,n. <>nāla.Lotus.
See தாமரை. (மலை.)
நளம்
4
naḷam,n. perh. nala.Name of a treatise on architecture, one of the 32 cirpanūl, q.v.;
சிற்பநூல்களிலொன்று. (இருசமய. உலக வழக்கப். 5.)
நளம்பள்ளு
naḷam-paḷḷu,n. <>நளம்1 +.The Naḷavar and the paḷḷar castes;
நளவரும் பள்ளருமாகிய சாதிகள். (J.)
நளவன்
naḷavaṉ,n.A person of the caste of toddy- drawers;
கள்ளிறக்குஞ் சாதியான். (j.)
நளவெண்பா
naḷa-veṇpā,n. <>நளன் +.A poem on Naḷa in veṇpā metre, by Pukaḻēnti-p-pulavar;
நளசக்கரவர்த்தியைக் கதாநாயகனாகக் கொண்டு புகழேந்திப்புலவர் வெண்பாவால் இயற்றிய ஒரு நூல்.
நளன்
naḷaṉ,n. <>Nala.1. A famous emperor of Niṣadha, heor of the Naiṭatam;
நிடததேசத்தரசனும் நைடதத்தின் கதாநாயகனுமான சக்கரவர்த்தி
2. A monkey belonging to Rāmā's hosts, said to have built the Adam's Bridge for Rāma and his army to cross over to Ceylon;
இராமபிரானுடைய வானரப்படைத் தலைவருள் சேதுபந்தனஞ் செய்த வீரன். நளன் வருகென்றனன் கவிக்கு நாயகன் (கம்பரா. சேதுப. 1).
3. Name of a liberal chief, one of seven inutalvaḷḷalkaḷ, q.v.
முதல்வள்ளல்களெழுவருள் ஒருவன்.
நளி
1
-
தல்
naḷi-,4 v. intr.1. To be close together, crowded;
செறிதல். நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் (மலைபடு. 197).
2. To be vast in extent ;
பரத்தல். நளிந்த கடலுட் டிமிறிரை போல் (களவழி. 18).
3. To resemble;
ஓத்தல். (தொல். பொ. 291.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2182 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், naḷ, யாழ், நளம், நளன், naḷa, nala, naḷam, நள்ளார், கம்பரா, நள்ளி, நள்ளிருள், middle, naḷḷi, caste, சூடா, செய்த, name, extent, veṇpā, சமையல், seven, திவா, திருவாய், திவ், liberal, chief, நள்ளிருணாறி, புறநா, ஒருவன், naḷavar