சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2178
Word
English & Tamil Meaning (பொருள்)
நவநீதகம்
navanītakam,n. <>navanītaka.Clarified butter;
நெய். (யாழ். அக.)
நவநீதசோரன்
navanīta-cōraṉ,n. <>navanīta +.krṣṇa, as butter-stealer;
[வெண்ணெய்திருடி] கண்ணபிரான். (யாழ். அக.)
நவநீதபாகம்
navanīta-pākam,n. <>id. + . (Poet.)Transparent simplicity of style;
எளிதிற் பொருளுணர்தற்குரிய செய்யுணடை. (யாழ். அக. )
நவநீதம்
navanītam,n. <>nava-nita.1. Butter, fresh butter;
வெண்ணெய். (திவா.)
2. Newness;
புதுமை. (யாழ். அக.)
நவப்பிரமர்
nava-p-piramar,n. <>navan +.The nine creators, viz., Marīci, Piruku, Aṅkirā, Kiratu, Pulakaṉ, Pulattiyaṉ , Takkaṉ , Vaciṭṭa , Attiri;
மரீசி, பிருகு, அங்கிரா, கிரது, புலகன், புலத்தியன், தக்கன், வசிட்டன், அத்திரி என்ற சிருட்டிகர்த்தாக்கள் ஒன்பதின்மர்.
நவப்பிரீதி
navappirīti,n.Saltpetre;
வெடியுப்பு. (சங். அக.)
நவப்பிரேதம்
nava-p-pirētam,n. <>navan+.The nine demons who are believed to protect the eight cardinal points, and the zenith;
எண்டிக்கும் மேலிடமுமாகிய ஒன்பது திசைகளையும் காவல்புரியும் பூதங்கள்.(w.)
நவபண்டம்
nava-paṇṭam,n. <>id. + .See நவதானியம். எல்லைதீர் நவபண்டமு மெடுத்து வாய்மடுத்தான் (திருவிளை. குண்டோ.15).
.
நவபதார்த்தம்
nava-patārttam,n. <>id. + (Jaina.)The nine categories or fundamental realities, viz., cīvam, acīvam, puṇṇiyam, pāvam, āciravam, camvarai, mrccarai, pantam, mōṭcam;
சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என ஒன்பதுவகைப்பட்ட சைனமத தத்துவங்கள். (சீவக. 2814, உரை).
நவபாண்டம்
nava-pāṇṭam,n. <>nava +.New pots;
புதுப்பானை. Loc.
நவபாஷாணம்
nava-pāṣāṇam,n. <>navan +.Tēvipaṭṭaṇam, a place of pilgrimage near Ramnad, having nine large stones representing the nine planets, fixed in shallow water along the seashore;
கடற்கரை நீரிற் பிரதிஷ்டிக்கப்பெற்ற நவக்கிரகச்சிலைகளை உடையதும், இராமநாதபுரத்தை யடுத்துள்ளதும் யாத்திரைக்குரிய தலமுமான தேவிபட்டணம் என்ற ஊர்.
நவபுண்ணியம்
nava-puṇṇiyam,n. <>id.+.The nine acts of hospitality shown to an honoured guest, viz., etir-koḷal, paṇital, irukkat-y-ītal, kāl-kazuval, arcuccittal, tūpaṇkotuttal, tīpaṅkāṭṭal, pukaḻtal, uṇṭi-y-ītal;
எதிர்கொளல், பணிதல், இருக்கையீதல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், உண்டியீதம் என ஒன்பதுவகைப்பட்ட உபசாரச்செயல்கள். (யாழ். அக.)
நவபூசாவந்தம்
nava-pūcāvantam,n. <>id.+.Nine-faced ear-ring;
ஒன்பது முகமுடைய கடுக்கன்வகை. (W.)
நவபேதமூர்த்தம்
nava-pēta-mūrttam,n. <>id.+.The nine manifestations of šiva, viz., Civam, Catti, Nātam, Vintu, Catācivam, Ican, uruttiraṉ , Māl, Ayaṉ;
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பதுவகையான சிவபேதம். (சி. சி. 2, 74.)
நவம்
1
navam,n. <>nava.1. Newness, freshness, novelty;
புதுமை. (பிங்.) நவமாய செஞ்சுடர் நல்குதலும் (திருவாச.11, 4).
2. Friendship, affection;
நட்பு. (திவா.)
3. Earth;
பூமி. (அக. நி) .
நவம்
2
navam,n. <>navan.The number nine;
ஒன்பது. (பிங்.)
நவம்
3
navam,n. <>nabhas.Winter;
கார்காலம். (பிங்.)
நவம்
4
navam,n. <>punar-nava.A species of trianthema.
See சாரணை. (மலை.)
நவமணி
nava-maṇin. <>navan +.The nine gems or precious stones, viz., kōmētakam, nīIlam, pavaḷam, marakatam, māṇikkam, muttu, puruṭarākam, vaiṭūriyam, vayiram;
கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணீக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வயிரம் ஆகிய ஒன்பது வகை அரதளங்கள். (திவா.)
நவமணிமாலை
nava-maṇi-mālai,n. <>நவமணி +.1. A necklace of the nine gems;
நவரத்தினமாலை. அணிகிளர் மாடவீதி நச்சரவுச்சியாட்கு நவமணிமாலைமானும் (குற்றா. தல. நகரச்சருக். 13).
2. A poem of nine verses of various metres in antāti;
ஒன்பது பாவகையால் அந்தாதீயாக இயற்றப்படும் ஒரு பிரபந்தம். )இலக். வி. 837).
நவமரம்
navamaram,n. cf. நவ்வல்.Jambotree.
See நாவல்மரம். Loc.
நவமாலி
navamāli,n.Realgar;
மனோசிலை. (சங். அக.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2178 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், nava, nine, navan, ஒன்பது, யாழ், navam, butter, நவம், திவா, பிங், navanīta, நவமணி, gems, ஒன்பதுவகைப்பட்ட, newness, புதுமை, puṇṇiyam, stones, ītal