சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 214
Word
English & Tamil Meaning (பொருள்)
ஆசூரம்
ācūramn. cf. āsurī.Garlic. See வெள்வெண்காயம்.
(மூ. அ.)
ஆசெதுகை
ācetukain. <>ஆசு1+எதுகை.Intervention of ய், ர், ல், or ழ் between the first and second syllables of the rhyming foot in one or two lines of stanza;
ய், ர், ல், ழ், என்ற மெய்யெழுத்துக்களுளொன்று அடியெதுகையிடையே ஆசாக வருவது. (காரிகை. ஒழிபி. 6. உரை.)
ஆசெறூண்
ā-ceṟūṇn. <>ஆ+செல்+தூண்.Rubbing post for cows;
ஆதீண்டுகுற்றி. ஆய்த்தியர் நலக்காசெ றூணனான் (சீவக. 419).
ஆசேகம்
ācēkamn. <>ā-sēka.Moistening, pouring water upon;
நனைக்கை. ஆசேக வொண்புனல் (கந்தபு. வில்வலன் வாதாவிவ. 12)
ஆசை
ācain. <>āšā.1. Wish directed towards securing a desired object;
வேண்டலுறும் பொருட்கட்செல்லும் விருப்பம். (குறள். 360, உரை.)
2. Desire;
விருபம்.
3. Avarice, cupidity;
பொருளாசை.
4. Sexual appetite;
காமவிச்சை.
5. Affection;
அன்பு. அரும்பெறற் குமரர்மே லாசை (கூர்மபு. இந்திரத்.42).
6. Hope, expectation, prospect;
பேற்றில் நம்பிக்கை.
7. Gold;
பொன். (சூடா.)
8. Point of the compass;
திக்கு. (பிங்.)
ஆசைக்கிழத்தி
ācai-k-kiḻattin. <>id.+.Concubine;
வைப்பாட்டி. நிருபனுக்கங் காசைக் கிழத்தியாம் (திருக்காளத். பு. 30. 42).
ஆசைகாட்டு
-
தல்
ācai-kāṭṭu-v. intr. <>id.+.To present a bait or attraction, to excite desire, to allure;
தன்வசமாகும்பொருட்ட்டு இச்சையுண்டாக்குதல்.
ஆசைப்படு
-
தல்
ācai-p-paṭu-<>id.+. v. intr.; v.tr.To set one's heart upon; To desire
ஆசை கொள்ளுதல்.; விரும்புதல்.
ஆசைப்பாடு
ācai-p-pāṭun. <>id.+.Eager, longing or desire;
விருப்பம். ஆசைப்பாட்டிலரனைப் புகழுதல். (உபதேசகா. சிவபுண். 22).
ஆசைபிடி
-
த்தல்
ācai-piṭi-v. intr. <>id.+.To be possessed by desire, to be swayed by passion;
இச்சைமிகுதல். Colloq.
ஆசைபூட்டு
-
தல்
ācai-pūṭṭu-v.tr. <>id.+.To engross the affection of, captivate;
ஆசையிற் சிக்கச் செய்தல். (W.)
ஆசைமருந்து
ācai-maruntun. <>id.+.Love potion, philter;
தன்வசமாக்கக்கூட்டும் மருந்தது. (W.)
ஆசைவார்த்தை
ācai-vārttain. <>id.+.Persuasive, tempting speech, words of hope or encouragement;
நம்பிக்கை யுண்டாகச் சொல்லும் வார்த்தை.
ஆசௌசம்
ācaucamn. <>āšauca.Pollution;
தீட்டு. (கூர்மபு. அனுக்கிர. 25.)
ஆஞ்சனேயன்
ācaṉēyaṉn. <>ājanēya.Hanuman, the son of Ajanā;
அனுமான். (நல். பாரத. இராமன்படையெழு. 111.)
ஆஞ்சான்
ācāṉn. cf. It. alzaja, 'cable'.1. Halyard, rope for hoisting a sail;
மரக்கலப்பாயை யிழுக்குங் கயிறு.
2. Hawser, rope for lifting weights with the pulley, tow-rope by which a boat is drawn;
பாரத்தூக்குங் கயிறு.
3. The lone, slender stem of a tree;
இளமரத்தின் தண்டு. (W.)
ஆஞ்சான்பற்றி
ācāṉ-paṟṟin. <>id.+.Beam across the stern of a boat to which the halyard is tied;
மரக்கலக் கூம்பு. (W.)
ஆஞ்சி
1
ācin. <>அஞ்சு-.1. Fear;
அச்சம். (தொல். பொ. 79.)
2. Motion, vibration;
அலைவு. (பிங்.)
3. Idleness, laziness;
சோம்பு. (சூடா.)
4. Dancing;
கூத்து. (அக. நி.)
ஆஞ்சி
2
ācin. cf. aindrī.Cardamom plant. See ஏலம்.
(சூடா.)
ஆஞ்சிக்காஞ்சி
āci-k-kācin. <>அஞ்சு- +. (Puṟap.)1. Theme expressing a lady's horror on seeing the wounds of her husband killed in battle;
போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை. (தொல். பொ. 79.)
2. Theme describing the elevated character of the wrrior's wife who ends her earthly existence either by ascending the funeral pyre with her deceased lord, or by killing herself with the same deadly arrow that has caused her lord his mortal wound;
போர்க்களத்திறந்த கணவனுடன் தீயில் மூழ்கு மனைவியின் பெருமை கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 22.)
ஆஞ்சில்
āciln.Species of Azima. See சங்கஞ்செடி.
(மூ. அ.)
ஆஞ்செல்கை
ācelkain. <>ஆம்+.Raft;
தெப்பம். Loc.
ஆஞ்ஞாசக்கரம்
āā-cakkaram<>ā-jā+.Royal authority, revolving as a discus;
அரசாணையாகிய சக்கரம்.
ஆஞ்ஞாபனம்
āāpaṉamn. <>ā-jāpana.Ordering, commanding;
கட்டளையிடுகை.
ஆஞ்ஞாபி
-
த்தல்
āāpi-11 v.tr <>ā-jāp.To command, order, direct;
கட்டளையிடுதல்.
ஆஞ்ஞை
āain. <>ā-jā.1. Order, command direction;
கட்டளை.
2. A cakra in the body, described as a two-petalled lotus situated between the two eyebrows, one of āṟātāram, q.v.;
ஆறாதாரங்களு ளொன்று.
ஆஞா
āān. prob. ஐயா.Father;
தகப்பன். Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 214 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ācai, desire, சூடா, intr, rope, theme, தொல், அஞ்சு, ācin, புறத்துறை, lord, order, command, jā, ஆஞ்சி, boat, கூர்மபு, பிங், hope, affection, த்தல், கயிறு, விருப்பம், halyard, நம்பிக்கை