சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2036
Word
English & Tamil Meaning (பொருள்)
தெரிநிலையும்மை
teri-nilai-y-ummai,n.<>id.+.See உம். 1. தெரிதற் பொருட்கண்வருதலிற் றெரிநிலையும்மை (தொல். சொல். 255, சேனா.).
.
தெரிநிலைவினை
teri-nilai-viṉai,n.<>id.+. (Gram.)Verb explicitly denoting tense by a tense-sign, opp. to kuṟippu-viṉai ;
காலத்தை வெளிப்படையாய்த் தோற்றுவிக்கும் வினை (நன்320, உரை) .
தெரிப்பான்
terippāṉ,n. prob. தெறி-.A disease peculiar to sheep in which the abdomen gets swollen and there is water discharge from the bowels ;
வயிறுவீங்கி நீர்கழியச்செய்யும் ஆட்டு வியாதிவகை . (M.CM. D.I, 249.)
தெரிப்பு
terippu,n.<>தெரி2-.1. Informing, acquainting, communicating;
அறிவிப்பு. (W.)
2. Investigation;
ஆராய்வு. (யாழ்.அக)
3. Saying, mentioning;
சொல்லுகை. (W.)
4. Witing; inscription;
எழுதுகை. (சுடா).
5. Note of hand;
சீட்டு.
6. Sifting with a fan;
கொழிப்பு.
7. Dividing;
பிரிப்பு. (யாழ்.அக)
8. Selecting stones in the kokkān play;
கொக்கான் விளையாட்டிற் கற்களைத் தெரிந்தெடுக்கை.
9. Things sifted, assorted or chosen ;
கொழிக்கப்பட்டவை. (J.)
தெரிபடு
-
தல்
teri-paṭu-,v. intr. <>தெரி1+. (யாழ். அக.)1. To be selected ;
தெரிந்தெடுக்கப்படுதல்.
2. To appear ;
தோன்றுதல்.
தெரிபொருள்
teri-poruḷ,<> id.+.Soul, as the agent of cognition ;
(அறிபவன்) ஆன்மா தெரிபொரு டேரின் (பரிபா2, 26) .
தெரிமா
terimā,n. prob. id.+.Lion ;
சிங்கம். (அக.நி.)
தெரியத்தெரி
-
தல்
teriya-t-teri-,v. tr. <>id.+.To understand clearly ;
தெளிவாயறிதல் தெரியத்தெரியுந் தெரிவிலாதாரை (நாலடி.247) .
தெரியப்படுத்து
-
தல்
teriya-p-paṭuttu-,v. tr. <>id.+.To explain; to submit; to make known or reveal ;
அறிவித்தல் அவன் தன் எசமானனிடத்தில் தெரியப்படுத்தினான்.
தெரியல்
teriyal,n.<>id.1. Selection ;
தெரிந்துகொள்ளுகை. தேங்கமழ் தெரியற் றீம்பூந்தாரவன் (சீவக. 2253).
2. Flower garland ;
பூமாலை. புனை வினைப் பொலிந்த பொலனறுந் தெரியல் (புறநா. 29).
தெரியலர்
teriyalar,n.<>id.+ ஆல் neg.+.1. The ignorant, the unenlightened, the uninformed;
அறிவில்லார் (யாழ்.அக).
2. Enemies ;
பகைவர் தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சிர்மதுரை (திருவாலவா. பக் 320. பயகர.110 .
தெரியவுணர்
-
தல்
teriya-v-unar,v. tr. <>id.+.To understand clearly ;
தெளியவறிதல். தேரித் தெரியவுணர்நீ (பரிபா.6, 92).
தெரியாத்தன்மை
teriyā-t-taṉmai,n.<>id.+ ஆ neg.+.See தெரியாத்தனம். Loc.
.
தெரியாத்தனம்
teriyā-t-taṉam,n.<>id.+id.+.Ignorance ;
அறியாமை .
தெரியாநிலைவினை
teriyā-nilai-viṉai,n.<>id.+id.+.Appellative verb ;
குறிப்புவினை (சங்.அக.)
தெரியாப்புத்தி
teriyā-p-putti,n.<>id.+ id.+.See தெரியாத்தனம். (யாழ். அக.)
.
தெரியிழை
teri-y-iḻai,n.<>id.+.Woman, as wearing choice ornaments ;
(ஆரய்ந்த ஆபரணங்களைத் தரித்தவள்) பெண்.
தெரியுமோர்
teriyumōr,n.<>id.Those who know or understand; learned men ;
தெரிவோர் நேரீற் றியற்சீர் நிலைக்குரித்தன்றே தெரியு மோர்க்கே (தொல்.பொ.337) .
தெரிவி
-
த்தல்
terivi-,11 v. tr. Caus. of தெரி1-.1. To explain, point out, show, teach;
அறிவித்தல்.
2. To bring to light, manifest reveal, display ;
வெளிப்படுத்துதல்.
தெரிவிடு
-
தல்
teriviṭu-,v. tr. <>தெரிவு+. (யாழ். அக.)1. To choose, select, cull ;
தெரிந்தெடுத்தல்.
2. To examine ;
ஆராய்தல்.
தெரிவில்புகழ்ச்சி
teri-vil-pukaḻcci,n.<>id.+ இல் neg.+. =(Rhet.)Figure of speech in which one is praised by way of slighting another ;
ஒன்றைப்பழித்தற்கு வேறொன்றைப் புகழும் அணி. (வீரசோ. அலங். 32) .
தெரிவினை
teri-viṉai,n.<>தெரி1+.See தெரிநிலைவினை. (சங். அக.)
.
தெரிவு
terivu,n.<>id.1. Knowledge, understanding;
அறிவு தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்ல¦ர் (சிலப்.30, 185).
2. Choosing, picking, selecting;
தெரிந்தெடுக்கை. (யாழ்.அக)
3. Anything selected or chosen;
தெரிந்தெடுக்கப்பட்டது. (யாழ்.அக)
4. Appearance, visibility;
தோற்றம். (W.)
5. That which is known or ascertained;
அறியப்பட்டது . (W.)
தெரிவை
terivai,n.<>id.1. Woman between 25 and 31 years of age;
25வது முதல் 31வதுக்குட்பட்ட பெண். (திவா).
2. Woman;
பெண் (சூடா) தெரிவைமார்க்கொரு கட்டளை யெனச்செய்த திருவே (கம்பரா சித்திர.33).
3. Virgo in the zodiac;
கன்னியாராசி. (பிங்).
தெரு
teru,n. [T. teruvu, M. teru.].1. Street ;
வீதி. (திவா.) வாரல் வாழிய ரையவெந் தெருவே (குறுந். 139).
2. High way, public road
வழி.தெருவும் மாமறுகலின் மயக்குற்றன (புறநா. 345).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2036 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், teri, teriyā, viṉai, பெண், woman, understand, தெரியாத்தனம், தெரி1, teriya, nilai, தெரிநிலைவினை, tense, தெரியலர், தொல், புறநா, திவா, தெரிவு, teru, தெரியல், selecting, selected, தெரிந்தெடுக்கை, prob, clearly, அறிவித்தல், reveal, chosen