சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1965
Word
English & Tamil Meaning (பொருள்)
துணை
2
tuṇai,n. perh. நுனை. (யாழ். அக.)1. Sharp end of an instrument or a weapon;
ஆயுதமுனை.
2. Arrow
அம்பு.
துணை
-
தல்
tuṇai-,4 v. tr. <>துணை1.To resemble, to be like;
ஓத்தல். நெய்பூசிய தொழின்மையே துணையும் (காஞ்சிப்பு. திருக்கண். 19).
துணை
-
த்தல்
tuṇai-,11 v. tr. <>id.1. To string, as a garland;
மாலை முதலியன கட்டுதல். தண்ணறுங் கழுநீர் துணைப்ப (மதுரைக் .551);
2. To resemble;
ஒத்தல். (தொல்.பொ.286, உரை.)
துணைக்கருவி
tuṇai-k-karuvi,n. <>id.+.1. Means to an end, medium;
உபாயம். (w.)
2. Implement, tool, instrument;
உதவிக் கருவி. (நன். 297, விருத்.)
துணைக்காரணம்
.n. <>id.+.Instrumental or secondary cause, as the potter's stick or wheel;
குடத்துக்குத் தண்டு சக்கரம்போல் காரியநிகழ்ச்சிக்கு உதவியாயிருக்கும் காரணம். (தொ. சொல். 74,உரை.)
துணைச்சொல்
tuṇai-c-col,n. <>id.+.Word or words in support of, or in seconding, a previous speaker;
ஆமோதிக்கும் வார்த்தை. (w.)
துணைப்படை
tuṇai-p-paṭai,n. <>id.+.Forces of one's allies sent to one's aid, one of aṟu-vakai-p-paṭai, q. v.;
நட்பரசரதாய்த் தனக்கு உதவுஞ் சேனை (குறள். 762, உரை.)
துணைப்பேறு
tuṇai-p-pēṟu,n. <>id.+.Receiving aid;
உதவிபெறுகை.
துணைப்பொருள்
tuṇai-p-poruḷ,n. <>id.+.Object of comparison;
ஓப்புமை கூறப்படுவது அப்பொருளாகு முறழ்துணைப்பொருளே (தொல். சொல்.16).
துணைபோதல்
tuṇai-pō-,v. intr. <>id.+.To be similar or equal; to match;
ஒப்பாதல்.அவனுக்கு இவன் துணைபோனவன்.
துணைமுத்தம்
tuṇai-muttam,n. <>id.+.stringed pearls;
பலவடஞ் சேர்ந்த முத்து. துஞ்சாக் கதிர்கொ டுணைமுத்தந் தொழுதேன் (சீவக. 351).
துணைமூளை
tuṇai-mūḷai,n. <>id.+.Cerebellum, the little brain;
சின்னமூளை. (இங். வைத்.)
துணைமை
tuṇaimai,n. <>id.1.Union;
பிரிவின்மை. நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே (தொல். பொ. 92).
2. Ability, power;
ஆற்றல். யாஅ ரொருவ ரொருவர்த முள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் (நாலடி, 127).
3. Help;
உதவி. துணைவரோடுந் துளபமா றுணைமைசெய்ய (சேதுபு. இலக்குமி. 25).
துணையரண்
tuṇai-y-araṇ,n. <>id. +.Strong and powerful kindred, considered a means of defence;
வன்மைமிக்க சுற்றத்தாரானாகிய துணை. (சுக்கிரநீதி. 300.)
துணையல்
tuṇaiyal,n. <>துணை4-.Garland, wreath of flowers;
பூமாலை. சாந்துங் கமழ்துணையலும் (தேவா. 562, 2).
துணையறை
tuṇai-y-aṟai,n. Prob துணை4-+அறு2-.Ornamental hangings;
தோரணம் முதலியவற்றின் தொங்கல். (திவா.)
துணையாளன்
tuṇai-y-āḷaṉ,n. <>துணை1+-.Helper;
உதவி புரிவோன். துணையாளனே தொழும் பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச.5, 98).
துணையிரு
-
த்தல்
tuṇai-y-iru-,v. tr. <>id.+.To keep company with a girl who has attained the age of puberty or with a woman in childbirth or with a bride, protecting them from demon-attack;
இருதுவான பெண் பிரசவித்தவள் மணப்பெண் இவர்க்குப் பேய்முதலியவற்றாற் கேடு வாராதபடி உதவியாயிருத்தல். (w.)
துணைவஞ்சி
tuṇai-vaci,n. <>id.+.(puṟap.)Theme describing the reconciliation of a warrior with his enemy whom he is determined to conquer or kill;
பிறரை வெல்லவேனுங் கொல்லவேனுந் துணிந்து நிற்கின்னொருவனைச் சில கூறிச் சந்திசெய்வித்தலைக் கூரும் புறத்துறை. (புறநா. 45.)
துணைவலி
tuṇai-vali,n. <>id.+.Strength of a king derived from his allies;
நட்பரசரால் ஆகிய ஆற்றல். (குறள். 471.)
துணைவன்
tuṇaivaṉ,n. <>id.1. Husband;
¢கணவன். (பிங்) துணைவரைத் தழுவினர் (கமபரா. மாரீசன்வதை.121).
2. Friend, companion;
தோழன். (சூடா.)
3. Minister;
மந்திரி. (அக.நி.)
4. Helper, assistant, convoy;
உதவிசெய்வோன். தோழாபோற்றி துணைவாபோற்றி (திருவாச. 4, 120).
5. Brother, cousin;
சகோதர முறையான். உரிமையறக் கவர்ந்த பெருந்துணைவன் (பாரத. கிருட்டிண.14).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1965 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tuṇai, துணை, தொல், துணைமை, குறள், ஆற்றல், துணை4, திருவாச, helper, allies, உதவி, means, resemble, துணை1, instrument, த்தல், garland, சொல், word, paṭai