சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1949
Word
English & Tamil Meaning (பொருள்)
தீர்வைச்சரக்கு
tīrvai-c-carakkun. <>id. +.Dutiable goods;
சுங்கவரி இடுதற்குரிய பொருள்.
தீர்வைசாதம்
tīrvai-cātamn. <>id.+.Rice-offering in a temple made at midnight;
அர்த்தசாமத்தில் நிவேதிக்கும் அன்னம்
தீர்வைத்துறை
tīrvai-t-tuṟain. <>id. +.Custom-house;
கங்கத்துறை. Loc.
தீர்வைதிட்டம்
tīrvai-tīṭṭamn. <>id.+.Rate of assessment;
திட்டமான வரியேற்பாடு
தீர்வைதீர்
-
தல்
tīrvai-tīr-v. intr. <>id.+.To levy duty on goods
பண்டங்கட்கு வரிவிதித்தல். (W.)
2. To pay duty on goods;
பண்டங்கட்குச் சுங்கவரியிறுத்தல். Loc.
தீர்வைப்பற்று
tīrvai-p-paṟṟun. <>id.+.Lands held on condition of paying a fixed money assessment irrespective of the crop, opp. to udra-p-paṟṟu;
திட்டமான ரொக்கவரியுள்ள நிலம்.
தீர்வையிடு
-
தல்
tīrvai-y-iṭu-,v. tr <>id.+.To settle, decide;
தீர்மானித்தல். தீராக்கருவழக்கைத் ¢தீர்வையிட்டு (தாயு. பைங்கிளி. 29).
2. To end;
முடிவு செய்தல்.
தீர்வையெடு
-
த்தல்
tīrvai-y-etu-,v. intr. <>id.+.1.To levy or collect duty;
வரிவாங்குதல்.
2. To obtain copy of a decree from court
தீர்ப்பு நகலெடுத்தல். (J.)
தீர்வைவிழுதல்
tīrvai-viḻutal,n. <>id.+.Passing of a judgment or decree;
வழக்குத்திர்ப்புச் செய்கை. (J.)
தீர்வைஜாஸ்தி
tīrvai-jāstin. <>id.+.1. Additional assessment made on dry lands for raising wet crops on them;
புன்செய்நிலத்தில் நென்செய்ச் சாகுபடிசெய்ததற்காக விதிக்கப்பட்ட வரிமிகுதி.
2. Charge for water taken from a Government source of irrigation to dry or garden lands, the rate varying according to the class of tank or channel from which water is taken;
புன்செய்ச் சாகுபடிக்குச் சர்க்கார்நீரை உபயோகப்படுத்துவதற்காக விதிக்கப்படும் நீர்வரி.
தீர
tīra,adv. <>தீர்1-.1. Entirely, perfectly, absolutely;
முற்ற. தலைப்பட்டார் தீரத் துறந்தார் (குறள், 348).
2. Exceedingly;
மிக. மக்களிற்றீரக் குறியானைக் குறளன் என்றும் (யாப். வி. 23, பக். 99).
தீரக்கழிய
tīra-k-kaḻiya,adv. <>id.+.1. Excessively, to the utmost;
மிகவதிகமாய். தீரக்கழிய அபராதம் பண்ணினபின்பு (ஈடு, 1, 1, 5).
தீரத்துவம்
tīrattuvam,n. <>dhīra-tva.See தீரம்1.
.
தீரதை
tīratai,n. <>dhīra-tāSee தீரம்1.
தீரதையா மறிஞர்க்கு (ஞானவா. தாசூ.44)
தீரம்1
tīram,n. <>dhīra.1. Courage, valour;
தைரியம். தீரத்தினாற் றுறவு சேராமல் (தாயு. பராபர. 271).
2. strength, vigour, power
வலி (சூடா.)
3. Intelligence
அறிவு. (யாழ்.அக.)
தீரம்
tīrm,n. <>tīra.1. Shore, bank;
கரை. தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின் (பரிபா. 22, 35).
2. Dyke, as of a paddy field;
செய்வரம்பு. (பிங்.)
3. Arrow;
அம்பு. (யாழ். அக.)
தீரம்3
tīram,n.Turmeric
மஞ்சள். (யாழ். அக.)
தீரவாசம்
tīra-vācam,n. <>tīra.+.Tract adjoining a river;
நதிப்பாய்ச்சலுள்ள இடம். அவனுக்குத் தீரவாசத்தில் நாலுகோட்டை நிலமுண்டு.
தீரவாசி
tīra-vāci,n. <>id.+.One who lives near a river;
நதிக்கரையில் வசிப்பவ-ன்-ள்.
தீரன்
tīraṉ,n. <>dhīra.Brave, valiant person;
மனத்திடமுள்ளவன். தீரரென் றமரர் செப்பி (கம்பரா. இந்திரசித். 30).
தீராந்தி
tīrānti,n. <>Fr. tirant.Beam of a building, crossbeam;
விட்டம். Pond.
தீராநோய்
tīrā-nōy,n. <>தீர்1- + ஆ neg.+.Incurable disease;
அசாத்தியமான வியாதி. தீராநோய் செய்தா னெனவுரைத்தாள் (திவ். இயற் சிறிய. ம. 52).
தீராமாற்று
tīrā-māṟṟu,n. <>id.+id.+.That which cannot be relieved or cured;
பரிகாரமில்லாத செயல். பெண்களைத் தீராமாற்றாக நெஞ்சாறல் பண்ணுங் கிருஷ்ணன் (திவ், திருப்பா.12, வ்யா.133).
தீராமை
tīrāmai,n. <>id.+ id.+.1. Cruelty;
கொடுமை. (J.)
2. Heinous crime;
கடுந்துரோகம். (J.)
3. Great injustice;
பேரநீதி. (J.)
4. False accusation;
பொய்க்குற்றச்சாட்டு. (J.)
5. Malicious slander;
வன்மத்தாற் சொல்லும் கோள். (J.)
6. Inability to endure;
ஆற்றாமை. Loc.
தீராமைக்காரி
tīrāmai-k-kāri,n. <>தீராமை +.Hard-hearted, cruel woman
வன்கண்மையுள்ளவள். தீரா மயறந்த தீராமைக்காரியை (குற்றா. குற.112, 3, )
தீராவழக்கு
tīrā-vaḻakku,n. <>தீர்1-+ஆ neg.+.Intricate lawsuit; dispute which cannot be easily settled;
அறாவழக்கு. Colloq.
தீராவினா
tīrā-viṉā,n. <>id.+id.+.An insoluble problem;
இறுக்கமுடியாத கேள்வி.
தீரை
tīrai,n. <>dhirā.Bold, brave woman;
தீரமுள்ளவள். (நன்.101, மயிலை)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1949 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tīrvai, tīra, dhīra, tīrā, lands, யாழ், duty, தீரம்1, தீர்1, assessment, தீராநோய், brave, river, made, திவ், tīrāmai, தீராமை, cannot, rate, tīram, water, decree, தாயு, பொருள், goods, levy, திட்டமான, தீரக்கழிய, intr