சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1918
Word
English & Tamil Meaning (பொருள்)
திருவாமணை
tiruvā-maṇai,n. <>துருவு- +.Coconut-scraper;
தேங்காய்துருவுங் கருவி. Loc.
திருவாய்க்கேள்வி
tiru-vāy-k-kēḷvi,n. <>திரு +.1. Royal order;
அரசாணை. அருமொழி விழுப்பரயர் எழுத்தினாற் புகுந்த திருவாய்க் கேள்விப்படி (S. I. I. iii, 135).
2. Investigation by a king;
இராசவிசாரணை. உலகம் வாழும்பரிசு திருவாய்க்கேள்விசெய்த கதை (திருவாரூ. 181).
திருவாய்ப்பாடி
tiru-vāy-p-pāṭi,n. <>id. +.The village where Krṣṇa spent his youth;
கண்ணபிரான் இளமையில் வாழ்ந்துவந்த கோகுலம். திருவாய்ப்பாடியிற் பெண்பிள்ளைகள் ... அனுபவிக்கப்பெற்றார்கள். (திவ். திருப்பா. வ்யா. அவ.).
திருவாய்மலர்
-
தல்
tiru-vāy-malar-,v. tr. id. +.To utter, declare, speak, used in reference to great persons;
கூறியருளுதல்.
திருவாய்மொழி
tiru-vāy-moḻi,n. <>id. +.A poem of 1000 stanzas in Nālāyira-p-pira-pantam in praise of Viṣṇu by Nammāḻvār;
நாலாயிரப்பிரபந்தத்துள் திருமால்விஷயமாக 1000 பாடல்களால் நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம்.
திருவாய்மொழிநூற்றந்தாதி
tiru-vāy-moḻi-nūṟṟantāti,n. <>id. +.A compendium of Tiruvāymoḻi which gives the purporst of each decad in a single veṇpā by Maṇavāḷa-mā-muṉikal;
திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகக்கருத்தையும் ஒவ்வொரு வெண்பாவிற் சுருக்கி அந்தாதியாக மணவாளமாமுனிகள் இயற்றிய பிரபந்தம்.
திருவாராதனம்
tiru-v-ārātaṉam,n. <>id. +.1. Worship of a deity;
கடவுட்பூசை. திருவாராதனஞ் செய்வன் வேதாவென்றால் (அஷ்டப். திருவரங்கத்தந். 30).
2. Paying homage, one of paca-camskāram, q.v.;
பஞ்சசம்ஸ்காரத்துள் ஒன்று. Vaiṣṇ.
திருவாராதனை
tiru-v-ārātaṉai,n. <>id. +.See திருவாராதனைக்கும் (S. I. I. i, 126).
.
திருவாரூர்
tiru-v-ārūr,n. <>id. +.A šiva shrine, in Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம் (தேவா. 711, 1.)
திருவாரூர்நான்மணிமாலை
tiru-v-ārūr-nāṉmaṇi-mālai,n. <>id. +.A poem in praise of šiva at Tiruvārūr, by Kumarakurupara-muṉi-var;
திருவாரூர்ச் சிவபிரான்மீது குமரகுருபர முனிவர் இயற்றிய பிரபந்தம்.
திருவாரூர்ப்பள்ளு
tiru-v-ārūr-p-paḷḷu,n. <>id. +.A paḷḷu-p-pirapantam on šiva at Tiruvārūr by āṉa-p-pirakācar;
திருவாரூர்ச் சிவபிரான்மேல் அவ்வூர் ஞானப்பிரகாசர் பாடிய பள்ளுப்பிரபந்தம்.
திருவாரூர்ப்பன்மணிமாலை
tiru-v-ārūr-p-paṉmaṇi-mālai,n. <>id. +.A poem in praise of šiva at Tiruvārūr by Vaittiyanāta-tēcikar;
திருவாரூர்ச் சிவபிரான்மீது வைத்தியநாத தேசிகர் இயற்றிய பிரபந்தம்.
திருவாரூர்ப்பிறந்தார்
tiru-v-ārūr-p-piṟantār,n. <>id. +.Those who are born at Tiruvārūr, one class to tokai-y-aṭiyār, q.v.;
தொகையடியாருள் ஒருசாராராகிய திருவாரூரிற் பிறந்தவர்கள் (தேவா. 738, 10.)
திருவாரூர்மும்மணிக்கோவை
tiru-v-ārūr-mummaṇi-k-kōvai,n <>id. +.A poem in Patiṉorān-tirumuṟai by Cēramāṉ-perumāḷ-nāyaṉār;
பதினொராந்திருமுறையுள் அடங்கியதும் சேரமான் பெருமாள்நாயனா ரருளிச்செய்ததுமான தோத்திர நூல்.
திருவாரூருலா
tiru-v-ārūr-ulā,n. <>id. +.A poem in honour of šiva at Tiruvārūr by the blind poet Vīrarākava-mutaliyār;
அந்தகக்கவி வீரராகவமுதலியார் திருவாரூர்ச் சிவபெருமாள்மீது பாடிய ஒரு பிரபந்தம்.
திருவாலவாய்
tiru-v-ālavāy,n. <>id. + ஆலவாய்Madura, as encircled by a serpent;
[பாம்பினாற் சூழப்பெற்றது] மதுரை. திருவாலவாயரனிற்கவே (தேவா. 858, 1).
திருவாலவாயுடையார்திருவிளையாடற்புராணம்
tiru-v-ālavāyuṭaiyār-tiru-viḷai-y-āṭaṟ-purāṇam,n <>id. +.A Purāṇa on the 64 sports of šiva at Madura by Perumpaṟṟa-p-puliyūr-nampi;
பெரும்பற்றப்புலியூர் நம்பியால் இயற்றப்பட்டதும் மதுரைச் சிவபிரானது 64 - ல¦லைகளைக் கூறுவதுமான புராணம்.
திருவாலி
tiru-v-āli,n. <>id. +.Rogue, knave;
புரட்டன். (w.)
திருவாலியமுதனார்
tiru-v-āli-y-amutaṉār,n. <>id. +.The author of a portion of Tiru-v-icai-p-pā;
திருவிசைப்பாவில் அடங்கிய பிரபந்த மொன்றற்கு ஆசிரியர். (திருவிசைப்பா.)
திருவாவினன்குடி
tiru-v-āviṉaṉ-kuṭin. <>id. +.Palni, a Skanda shrine in Madura District, one of six paṭai-vīṭu, q.v.;
மதுரை ஜில்லாவைச் சார்ந்ததும் முருகக்கடவுள் படைவீடு ஆறனுள் ஒன்றுமாகிய பழனியென்னும் தலம். (திருமுரு.)
திருவாழ்த்தான்
tiru-vāḻttāṉ,n. <>id. +.1. Court jester of repute;
பிரசித்தமான ஒரு விகடகவி.
2. Buffoon;
கோமாளி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1918 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tiru, ārūr, šiva, பிரபந்தம், tiruvārūr, vāy, poem, திருவாரூர்ச், தேவா, இயற்றிய, praise, āli, பாடிய, madura, மதுரை, paḷḷu, shrine, moḻi, ஒவ்வொரு, district, mālai, சிவபிரான்மீது