சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1916
Word
English & Tamil Meaning (பொருள்)
திருவமால்
tiruva-māl,n. <>id. + அம் + மால்.Viṣṇu;
திருமால். திருவமாற் கிளையாள் (சிலப். 12, நாகநாறு.).
திருவமுது
tiru-v-amutu,n. <>id. +.Boiled rice offered to an idol or a great person;
நிவேதன வுணவு. திருவமுதுக்கு வைத்தகாசு பத்தும் (S. I. I. i, 98).
திருவரங்கத்தமுதனார்
tiru-v-araṅka-t-t-amutaṉār,n. <>id. +.Author or Rāmānuca-nūṟṟantāti, a contemporary of Rāmānuja;
இராமாநுசாசாரியரின் காலத்தவரும், இராமாநுசநூற்றந்தாதியை இயற்றியவருமாகிய பெரியார். (திவ்.)
திருவரங்கம்
tiru-v-araṅkam,n. <>id. +.šrirangam. See ஸ்ரீரங்கம். (சிலப்.)
.
திருவரங்கு
tiru-v-araṅku,n. <>id. +.The sacred hall in a temple;
கோயிலுள்ள பிராதன மண்டபம். (S. I. I. ii, 69.)
திருவருட்டுறை
tiru-v-aruṭṭuṟai,n. <>திருவருள்+.The šiva shrine at Tiru-veṇṇey-nallūr;
திருவெண்ணெய்நல்லூரிலுள்ள சிவன்கோயில். திருவருட்டுறையே புக்கார் (பெரியபு. தடுத்தாட். 65).
திருவருட்பயன்
tiru-v-aruṭ-payaṉ,n. <>id. +.A text-book of šaiva Siddhanta Philosophy by Umāpati-civācāriyar, one of 14 mey-kāṇṭa-cattiram, q.v.;
மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றும் உமாபதிசிவாசாரியர் இயற்றியதுமாகிய சைவசித்தாந்த நூல்.
திருவருட்பா
tiru-v-aruṭpā,n. <>id. +.A collection of devotional poems by Irāmaliṅka-cuvāmikaḷ, 19th c.;
கி. பி. 19-ஆம் நூற்றாண்டில் இராமலிங்கசுவாமிகள் இயற்றிய தோத்திரநூல்.
திருவருள்
tiru-v-aruḷ,n. <>திரு+.Divine grace;
தெய்வ கிருபை. திருவருள் மூழ்கி (திவ். திருவாய். 8, 9, 6).
திருவல்லிக்கேணி
tiru-v-alli-k-kēṇi,n. <>id. +.An ancient Viṣṇu shrine in Madras;
சென்னையிலுள்ள திருமால் தலம். (திவ். பெரியதி. 2, 3, 1.)
திருவலகிடு
-
தல்
tiru-v-alakiṭu-,v. tr. <>திருவலகு+.To sweep and clean a temple;
கோயிலைப் பெருக்கிச் சுத்தஞ்செய்தல்.
திருவலகு
tiru-v-alaku,n. <>திரு +.Broom used in temples;
கோயில்பெருக்குந் துடைப்பம். அலகைத் திருவலகென்றும் (திருக்கோ. 1, உரை).
திருவலகுசேர்
-
த்தல்
tiru-v-alaku-cēr-,v. tr. <>திருவலகு- +.See திருவலகிடு-. Vaiṣṇ.
.
திருவலர்
tiruvalar,n.A class of Vēṭar in Salem District;
சேலம் ஜில்லாவில் உள்ள வேடர் பிரிவினர். (E. T. vii, 332.)
திருவழுவூர்
tiru-vaḻuvūr,n. <>திரு +.A šiva shrine in Tanjore District, one of aṭṭa-vīraṭṭam, q.v.;
சிவபிரான் கோயில்கொண்ட அட்ட வீரட்டங்களுள் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். (தேவா.)
திருவள்ளுவப்பயன்
tiru-vaḷṭuva-p-payaṉ,n. <>id. +.The Kuṟaḷ. See திருக்குறள். (தொல். பொ. 76, உரை.)
.
திருவள்ளுவமாலை
tiru-vaḷḷuva-mālai,n. <>id. +.Verses in praise of the Kuṟaḷ, attributed to Sangam poets;
திருக்குறளைப் புகழ்ந்து சங்கப்புல்லவர்கள் பாடியனவாகக் கருதப்படும் செய்யுட்களமைந்த நூல்.
திருவள்ளுவர்
tiru-vaḷḷuvar,n. <>id. +.1. The author of the Kuṟaḷ;
திருக்குறளாசிரியர். திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு (வள்ளுவமா. 1).
2. The Kuṟrḷ;
திருக்குறள். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் (இலக். கொத். 7).
திருவறம்
tiru-v-aṟam,n. <>id. +.Sacred duties prescribed by a religion;
சமய தருமம். திருவற மெய்துதல் சித்தம் (மணி.10, 85).
திருவன்
1
tiruvaṉ,n. <>id.1. Wealthy person, blessed person;
சீமான்.
2. Viṣṇu;
திருமால். சிங்கமாய்க் கீண்ட திருவன் (திவ். இயற். 2, 84).
திருவன்
2
tiruvaṉ,n. prob. திருகு-.1. Buffoon, jester of a king;
விகடக்காரன். (J.)
2. Rogue;
புரட்டன். (J.)
3. Grey mullett, attaining 6 in. in length, Nugil parsia;
ஆறங்குல நீளம் வளர்வதும் சாம்பல் நிறமுடையதுமான மீன்வகை.
திருவன்கோலா
tiruvaṉ-kōlā,n.Half-beak. See கொழுத்தமுரல்.
.
திருவனந்தபுரம்
tiru-v-aṉanta-puram,n. <>திரு +.Trivandrum, the modern capital of Travancore, noted for its Viṣṇu shrine;
திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைமைநகரமாயுள்ள திருமால் தலம். (திவ். திருவாய்.)
திருவனந்தல்
tiru-v-aṉantal,n. <>id. +.Morning ceremony when the god is awakened from sleep, aubade;
கடவுளின் திருபப்ள்ளியெழுச்சிப் பூசனை.
திருவனந்தற்கட்டளை
tiru-v-aṉantaṟ-kaṭṭaḷai,n. <>திருவனந்தல் +.Endowment for the morning oblations in a temple;
கோயிலிற் காலை வழிபாட்டுக்கு விடப்பட்ட மானியம்.
திருவனந்தாழ்வான்
tiru-v-aṉantāḻvāṉ,n. <>திரு +.ādišēṣa. See ஆதிசேஷன். (ஈடு.)
.
திருவாக்கு
tiru-vākku,n. <>id. +.Sacred word, utterance or order, as of a deity, guru, king;
தெய்வம் பெரியோர்களின் வாய்மொழி. திருவாக்குக்கு எதிர்வாக்குண்டோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1916 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tiru, திரு, திவ், viṣṇu, shrine, திருமால், tiruvaṉ, திருவன், kuṟaḷ, திருவலகு, temple, person, திருவருள், sacred, morning, திருக்குறள், திருவனந்தல், district, king, திருவள்ளுவர், நூல், šiva, author, சிலப், payaṉ, word, திருவலகிடு, தலம், திருவாய், alaku