சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1912
Word
English & Tamil Meaning (பொருள்)
திருமாலாயுதம்
tiru-māl-āyutam,n. <>id. +.Viṣṇu's weapons, being five, viz., Caṅ-kam, cakkaram, taṉu, vāḷ, taṇṭu;
சங்கம், சக்கரம், தனு, வாள், தண்டு என்ற திருமாலின் ஐம்படைகள். (பிங்.)
திருமாலிருஞ்சோலை
tiru-māl-āyutam,n. <>id. +.See அழகர்மலை. (திவ்.திருவாய்.10, 7, 1)
.
திருமாலுந்தி
tiru-māl-untin. <>id. +.See திருமால்கொப்பூழ். (சூடா.)
.
திருமாலை
tiru-mālai,n. <>id. + mālā.1. Garland for an idol;
தெய்வத்துக்குத் தொடுக்கும் மாலை.
2. A poem in Nālāyira-p-pirapantam by Toṇṭar-aṭi-p-poṭi-y-āḻvār;
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்ததும் நாலாயிரப்பிரபந்தத்துட் சேர்ந்ததுமான ஒரு பிரபந்தம்.
திருமாலைகட்டி
tiru-mālai-kaṭṭi,n. <>திருமாலை +.Maker of garlands for idols;
கோயில் மாலை தொடுப்போன்.
திருமாலைவடை
tiru-mālai-vaṭai,n. <>id. + மாலை + vaṭaka.Cakes of black gram offered in the evening in temples;
கோயிலில் மாலையில் நிவேதிக்கும் வடைத் திருப்பணிகாரம்.
திருமாளிகை
tiru-māḷikai,n. <>id. +.1. See திருமாளிகைப்பத்தி. செம்பொனம்பலஞ்சூழ் திருமாளிகையும் (S. I. I. iii, 183).
.
2. House of a respectable person;
பெரியோர் வாழும் கிரகம். Vaiṣṇ.
திருமாளிகைச்சுற்று
tiru-māḷikai-c-cuṟṟu,n. <>id. +.See திருச்சுற்றுமாளிகை. (Insc.)
.
திருமாளிகைத்தேவர்
tiru-māḷikai-t-tēvar,n. <>id. +.The author of a section of Tiruvicaippā;
திருவிசைப்பாவின் ஒரு பகுதி இயற்றிய ஆசிரியர்.
திருமாளிகைப்பத்தி
tiru-māḷikai-p-patti,n. <>id. +.Series of buildings alongside the compound wall of a temple;
கோயிற்றிருமதிலையொட்டி உட்புறத்தமைந்துள்ள கட்டட வரிசை.
திருமு
-
தல்
tirumu-,5 v. <>திரும்பு-. [T.K. tirugu.] intr.To turn, return, go back; --tr. To rub hard;
திரும்புதல். ஓடித் திருமி (கம்பரா. மாரீச.136). -- நன்றாகத் தேய்த்தல். விளக்கைச் சாம்பலால் திருமு. Nā.
திருமுக்காணம்
tiru-mukkāṇam,n. <>திரு +.See திருமுகக்காணம். (S. I. I. II, 509.)
.
திருமுகக்கணக்கு
tiru-muka-k-kaṇakku,n. <>id. +.An accountant's post in the Travancore palace;
திருவிதாங்கூர் அரண்மனையிலுள்ள கணக்கு உத்தியோகம். Nā.
திருமுகக்காணம்
tiru-muka-k-kāṇamn. <>id. +.An ancient tax;
பழைய வரிவகை. (S. I. I. ii, 521.)
திருமுகத்துறை
tiru-muka-t-tuṟai,n. <>id. +.Mouth of the Cauvery river;
காவிரி கடலுடன் கலக்கும் சங்கமத்துறை. (சிலப்.10, 33, உரை.)
திருமுகப்பாசுரம்
tiru-muka-p-pācuṟam,n. <>id. +.The first poem in Patiṉorān-tiru-muṟai, believed to have been composed by the God at Madura;
பதினொராந்திருமுறையில் மதுரைச் சொக்க நாதக்கடவுள் இயற்றியதாகக் கருதப்படும் முதற்செய்யுள்.
திருமுகம்
tiru-mukam,n. <>id. +.1. Letter from a great person;
பெரியோரனுப்பும் நிருபம். உலகுதொழு திறைஞ்சுந் திருமுகம் போக்குஞ் செவ்வியளாகி (சிலப்.8, 53).
2. Royal order;
அரசனது சாஸனம். திருமுகம் மறுத்துப்போனவர்க்கு எத்தைச் சொல்லுவது (ஈடு, 1, 4, 4).
3. Divine presence;
தெய்வசன்னதி. (w.)
திருமுகமண்டலம்
tiru-muka-maṇṭalam,n. <>id. +.Hallowed face of idols or great men;
கோயின்மூர்த்தி அல்லது பெரியோரின் முகப்பிரதேசம்.
திருமுகஸ்தானம்
tiru-muka-stāṉam,n. <>id. +.A post of honour to which appointment is directly made by a king;
அரசரால் நேரில் நியமிக்கப்படும் கௌரவ உத்தியோகம். Nā.
திருமுட்டு
tiru-muṭṭu,n. <>id. +.Plates and vessels used in worship;
பூசைத்தட்டு முதலியன. இலங்குநற் றிருமுட்டிவை முதலிய வீந்தார் (தேவாரணி. மேன்மை. 52).
திருமுடி
tiru-muṭi,n. <>id. +.1. Head of the chief idol in a temple;
கோயில்மூர்த்தியின் சிரோபாகம்.
2. See திருநாமம், 3. நாரணற் கடிமைத் திருமுடியாயிரர்க்கு (அரிசமய. பரகா. 23).
.
3. Caste of bricklayers among Vēṭṭuvar or Kaik-kōḷar;
வேட்டுவர் அல்லது கைக்கோளர்க்குள் கொத்துவேலை செய்வோர். (E. T. vii, 35.)
திருமுடிக்கலசம்
tiru-muṭi-k-kalacam,n. <>திருமுடி +.A kind of anointing ceremony;
அபிஷேகச் சடங்குவகை. Nā.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1912 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tiru, muka, māḷikai, nā, மாலை, திருமுகம், mālai, māl, post, muṭi, திருமுடி, உத்தியோகம், திருமுகக்காணம், சிலப், அல்லது, person, idol, திருமாலை, āyutam, poem, idols, temple, திருமாளிகைப்பத்தி, திருமு