சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1898
Word
English & Tamil Meaning (பொருள்)
திருக்கு
1
tirukku,n. <>id.1. Twist;
முறுக்கு.
2. Bend, curve, as of a fort;
முடக்கம். மதிற்றிருக்கால் .... திருமுடங்கலென்றார் (திருவாலவா. 47, 14).
3. Tiny screw in jewels;
அணித்திருகு. Tinn.
4. A garment;
ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)
5. Perverseness; crookedness of mind;
மாறுபாடு. பெருந்திருக்குளத்துளான் (திருவாலவா. 16, 34).
6. Fraud, deceit;
வஞ்சனை. (w.)
திருக்கு
2
tirukku,n. <>drk nom. sing. of drs.1. Eye;
கண். (சூடா.)
2. (Phil.) Seer, perceiving agent;
காண்பவன். திருக்கு திருசிய மென் றிருபொருள் (வேதா. சூ. 25).
திருக்குக்காட்டாளி
tirukku-k-kāṭṭāḷi,n. <>திருக்கு1 +.Cheat, deceiver;
வஞ்சகன். (w.)
திருக்குகம்
tirukkukam,n. (அக. நி.)1. Courtyard;
முற்றம்.
2. Saree;
புடைவை.
திருக்குகை
tiru-k-kukai,n. <>திரு +.Monastery;
துறவிகள்வாழிடம். (I. M. P. Tj. 1083.)
திருக்குடந்தை
tiru-k-kuṭantai,n. <>id. +.Kumbakonam;
கும்பகோணம். திருக்குடந்தை யேரார்கோலந் திகழக்கிடந்தாய் (திவ். திருவாய். 5, 8, 1).
திருக்குதம்பை
tiru-k-kutampai,n. <>id. +.A kind of ear-rings;
காதணிவகை. (S. I. I. ii, 156.)
திருக்குருகூர்
tiru-k-kurukūr,n. <>id. +.See திருக்குருகை. திருக்குருகூர்தனுள் நின்ற ஆதிப்பிரான். (திவ். திருவாய். 4, 10,1).
.
திருக்குருகை
tiru-k-kurukai,n. <>id. +.The birth-place of Saint Caṭakōpar }, now called āḻvār-tiru-nakari;
சடகோபர் அவதாரஸ்தலமான ஆழ்வார்திருநகரி.
திருக்குருகைப்பிரான்பிள்ளான்
tiru-k-kurukai-p-pirāṉ,n. <>திருக்குருகை+.A disciple of Rāmānujācārya and the author of āṟāyirappaṭi, the first commentary on Tiruvāymoḻi;
இராமாநுஜாசாரியரின் சிஷ்யருள் ஒருவரும் திருவாய் மொழியின் முதல்வியாக்கியானமாகிய ஆறாயிரப்படி இயற்றியவருமான ஆசிரியர். (உபதேசரத். 41.)
திருக்குருகைப்பெருமாட்கவிராயர்
tiru-k-kurukāi-p-perumāṭ-kavirāyar,n. <>id. +.A native of āḻvār-tiru-nakari and the author of Māṟaṉ-alaṅkāram, Māṟaṉ-akapporuḷ, Tiru-k-kurukāmāṉmiyam and other works, 16th c.;
மாறனலங்காரம், மாறனகப்பொருள், திருக்குருகாமான் மியம் முதலிய நூல்களியற்றியவரும் 16 ம் நூற்றாண்டினரும் ஆழ்வார்திருநகரியூரினருமாகிய ஆசிரியர்.
திருக்குவலிப்பன்
tirukku-valippaṉ,n. <>திருகு- +.A kind of cattle disease;
மாட்டு நோய்வகை. (மாட்டுவா.147.)
திருக்குளம்
tiru-k-kuḷam,n. <>திரு +.Sacred tank of a temple;
கோயிலைச்சார்ந்த தடாகம். Colloq.
திருக்குற்றாலத்தலபுராணம்
tiru-k-kuṟ-ṟāla-t-tala-purāṇam,n. <>திருக்குற்றாலம்+.A Purāṇa on the šiva shrine at Kuṟṟālam by Tirikūṭarācappa-kavirāyar, 18th c.;
18 ம் நூற்றாண்டில் திரிகூடராசப்பகவிராயர் இயற்றியதும் குற்றாலத்தலமான்மியங் கூறுவதுமான நூல்.
திருக்குற்றாலம்
tiru-k-kuṟṟālam,n. <>திரு +.A šiva shrine in the Tinnevelly District;
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம்.
திருக்குறணுண்பொருண்மாலை
tiru-k-kuṟaṇuṇporuṇ-mālai,n. <>திருக்குறள்+நுண்மை+பொருள்+.Critical notes on Parimēl-aḻakar's commentary on Tiru-k-kuṟaḷ by Tiru-mēṉi Irattiṉa-kavirāyar of āḻvār-tiru-nakari;
திருக்குறட் பரிமேலழகருரைக்கு ஆழ்வார் திருநகரித் திருமேனி இரத்தினகவிராயர் எழுதிய குறிப்புரை.
திருக்குறள்
tiru-k-kuṟal,n. <>திரு +.The sacred Kuṟal, a classic work treating of Virtue, Wealth and Love in 133 chapters of ten distichs each, by Tiru-vaḷḷuvar, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும் அதிகாரத்துக்குப் பத்துக்குறள் கொண்ட 133 அதிகாரங்களில் அறம் பொருளின்பங்களைப்பற்றிக் கூறுவதும் திருவள்ளுவர் இயற்றியதுமான நூல்.
திருக்குறிப்பு
tiru-k-kuṟippu,n. <>id. +.Will, as of God or a great person;
திருவுள்ளக் கருத்து. திருக்குறிப்பன்னதாயிற் செப்புவல் (சீவக.1853).
திருக்குறிப்புத்தொண்டநாயனார்
tiru-k-kuṟippu-t-toṇṭa-nāyaṉār,n. <>திருக்குறிப்பு+.A canonized šaiva saint, one of 63;
நாயான்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.)
திருக்குறுந்தாண்டகம்
tiru-k-kuṟu-n-tāṇṭakam,n. <>திரு +.1. A poem in Nālāyira-p-pirapantam by Tirumaṅkai-y-āḻvār;
திருமங்கையாழ்வார் இயற்றியதும் நாலாயிரப்பிரபந்தத்தில் அடங்கியதுமான பிரபந்தம்.
2. Tēvāram decads in tāṇṭakam metre of six cīrs;
அறுசீர்த்தாண்டகங்களாலாகிய தேவாரப்பதிகங்கள்.
திருக்கூட்டம்
tiru-k-kūṭṭam,n. <>id. +.Fraternity of devotees;
பத்தர்குழாம். நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெரும்பேறு (காஞ்சிப்பு. கடவு.16).
திருக்கூத்து
tiru-k-kūttu,n. <>id. +.1. Sacred dance of šiva;
சிவபிரானது நடனம். திருக்கூத்தை மேவின இறைவனுக்கு (பு. வெ. 9, 48, உரை).
2. Divine sport;
கடவுளின் திருவிளையாட்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1898 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tiru, திரு, tirukku, āḻvār, nakari, kavirāyar, sacred, šiva, திருக்குருகை, திருவாய், திருக்கு, kuṟṟālam, திருக்கூட்டம், shrine, இயற்றியதும், tāṇṭakam, kuṟal, திருக்குறள், kuṟippu, திருக்குறிப்பு, நூல், commentary, kind, திவ், திருக்குடந்தை, திருவாலவா, kurukai, saint, māṟaṉ, ஆசிரியர், பொருள், author, திருக்குற்றாலம்