சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1828
Word
English & Tamil Meaning (பொருள்)
தாடிமப்பிரியம்
tāṭima-p-piriyam,n. <>dādima-priya.Parrot, as fond of pomegranates;
(மாதுளம்பழத்தை விரும்புவது) கிளி. (யாழ்.அக.)
தாடிமபட்சணம்
tāṭima-paṭcaṇam,n. <>dādima-bhakṣaṇa.Parrot, as eating pomegranates;
(மாதுளம்பழம் தின்பது) கிளி. (யாழ்.அக.)
தாடிமம்
tāṭimam,n. <>dādina.1. Pomegranate. See தாதுமாதுளை (பிங்)
.
2. Cardamom-plant, 1.sh., Elettaria cardamomum;
சிற்றேலம். (மலை.)
தாடிரி
tāṭiri,n.A medicinal herb; See கண்டங்கத்தரி. (சங். அக.)
.
தாடு
tāṭu,n. prob. dhātu.1. Strength;
வலிமை. தாடுடைய தருமனார் (தேவா. 17, 9).
2. Leadership;
தலைமை. (அக. நி.)
தாடை
1
tāṭai,n. [k.dāde.]1. Cheeks, chaps;
கன்னம். தாடையிலோ ரடிபோட (இராமநா உயு. 58).
2. Jaw-bone;
தாடையெலும்பு.
3. See தாடி (யாழ். அக.)
.
தாடை
2
tāṭai,n.Creamy leaved lance wood, m. tr., pterospermum suberifolium;
வெண்ணாங்கு. (L.)
தாடை
3
tāṭai,n. <>dādhā. (யாழ். அக.)1 Desire;
விருப்பம்.
2. Molar teeth;
பெரும்பல்.
தாடைக்கால்
tāṭai-k-kāl,n. <>தாடை +.Articulation of the lower jaw;
கன்னக்கீல். Loc.
தாடைச்சன்னி
tāṭai-ccaṉṉi,n. <>id.+.Tetanus, lock-jaw;
இழுப்புநோய்வகை. Loc.
தாடையெலும்பு
tāṭai-y-elumpu,n. <> id. +.Jaw-bone;
கன்னத்தின் கீழெலும்பு. (W.)
தாடைவீக்கம்
tāṭai-vīkkam,n. <>id.+.Mumps;
பொன்னுக்குவீங்கி. (பைஷஜ.212.)
தாண்
tān,n.Vegetable piece in curry. See தான். Loc.
.
தாண்டகச்சந்தம்
tāṇṭaka-c-cantam,n. <>தாண்டகம்+.1. A stanza in which lines of tāṇṭakam measur preponderate over lines of cantam measure;
தாண்டகவடி மிக்குச் சந்தவடி குறைந்துவருஞ் செய்யுள். (யாப்.வி.95, 456.)
2. A stanza containing both canta-v-aṭi and tāṇṭaka-v-aṭi;
சந்தவடியுந் தாண்டகவடியும் விரவியோசை கொண்டுவருஞ் செய்யுள். (யாப். வி. 95, 455.)
தாண்டகம்
tāṇṭakam,n. <>daṇdaka.1. A stanza each line of which consists of more than 26 syllables, of two kinds, viz. aḷavaḷi-t-tāṇṭakam and aḷaviyaṟṟāṇṭakam;
26 எழுத்தின் மிக்க அடியான்வரும் அளவழித்தாண்டகம் அளவியற்றாண்டகம் என்ற இருபகுப்பினையுடைய பாக்கள். (யாப்.வி.95, 447.)
2. A poem in praise of deities made up of quatrains of equal length, each line containing either six or eight cīr;
அறு சீராலேனும் எண்சீராலேனும் இயன்ற ஒத்த நான்கடி கொண்ட செய்யுள்களுடையதும் கடவுளரைப் புகழ்வதுமான பிரபந்தவகை. (பன்னிருபா. 305.)
தாண்டகவடி
tāṇṭaka-v-aṭi,n. <>தாண்டகம்+. (Pros.)A metrical line of more than 26 letters;
இருபத்தாறுக்குமேற்பட்ட எழுத்துக்களால் இயன்ற அடி. (யாப்.வி.95, 256.)
தாண்டவம்
1
tāṇṭavam,n. <>தாண்டு-.1. Leaping, jumping;
தாவுகை. (பிங்.)
2. Driving;
செலுத்துகை. (பிங்.)
தாண்டவம்
2
tāṇṭavam,n. <>tāṇdava.A kind of dance;
கூத்துவகை. (திவா.)
தாண்டவமூர்த்தி
tāṇṭava-mūrtti,n. <>id. +.Natarāja, as šiva in His dancing attitude;
(தாண்டவமாடும் மூர்த்தி) நடராசர்.
தாண்டவராயசுவாமிகள்
tāṇṭavarāyacuvāmikaḷn.Author of Kaivalliya-navanīItam. a treatise on Vēdānta;
வேதாந்தநூலான கைவல்லியநவநீத மியற்றிய ஆசிரியர்.
தாண்டவன்
tāṇṭavaṉ,n. <>tāṇdava.See தாண்டவமூர்த்தி. (சங். அக.)
.
தாண்டா
tāṇṭā,n. perh. Mhr. dāṇdā.A flower-garland worn on braided hair by woman;
மகளிர் தலைப்பின்னலில் அணியும் மாலை. Loc.
தாண்டி
tāṇṭi,n. <>tāṇdi.Treatise on dancing;
நடனசாத்திரம். (யாழ்.அக.)
தாண்டிமண்டலம்போடு
-
தல்
tāṇtimaṇṭalam-pōṭu-,v. intr. <>தாண்டு-+.To spring or run at a person in rage, as a ferocious animal;
கோபாவேசத்தோடு மேற்பாய்தல். (J.)
தாண்டு
-
தல்
tāṇtu-,5 V. [K. tāṇṭu, M. tāṇṭuka.]1. To dance, skip, jump;
குதித்தாடுதல். (பிங்.)
2. To be arrogant;
செருக்கடைதல். Loc.
3. To transgress limits in talking;
மிதமிஞ்சிப்பேசுதல். Loc.-tr.
1. To leap across, jump over, cross, step over;
கடத்தல். (பிங்.)
2. To drive;
செலுத்துதல். (பிங்.)
3. To surpass, outdo, excel;
மேற்படுதல். பரீக்ஷையில் எல்லாரையும் தாண்டிவிட்டான்.
தாண்டு
tāṇṭu,n. <>தாண்டு-.1. Leap, jump;
குதி. ஒரு தாண்டுத் தாண்டினான்.
2. Victory, success;
வெற்றி. (யாழ். அக.)
3. Airs, self-conceit;
அகங்கரிப்பு. வெகுதாண்டுத் தாண்டுகிறான்
4. A disease characterised by abnormal swelling in the legs, supposed to be caused by treading or crossing over the chillies, etc., waved round persons to avert the effects of evil eye and thrown in the streets;
சுற்றிப்போட்டபின் வீதியில் எறியப்பட்ட மிளகாய் முதலியவற்றைத் தாண்டுதலால் உண்டாவதாகக் கருதப்படும் கால்தோய் வகை. Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1828 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tāṭai, பிங், யாழ், தாண்டு, யாப், over, தாடை, stanza, tāṇṭakam, தாண்டகம், line, aṭi, jump, tāṇṭaka, tāṇdava, tāṇṭavam, தாண்டவமூர்த்தி, tāṇṭu, leap, treatise, dancing, தாண்டவம், dance, தாண்டகவடி, கிளி, pomegranates, parrot, dādima, தாடையெலும்பு, cantam, containing, செய்யுள், tāṭima, lines, இயன்ற