சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1789
Word
English & Tamil Meaning (பொருள்)
தலைவிளை
talai-viḷai,n. <>id.+.First crop of a cultivated field;
வயலின் முதல்விளைவு. தலைவிளை கானவர் கொய்தனர். (ஐங்குறு.270).
தலைவெட்டி
talai-veṭṭi,n. <>id.+.1. One who has cropped his hair;
தலைமயிரைக் கத்திரித்துக்கோள்ளுவொன்.
2. Vagabond;
காவாலி.
3. A treacherous person;
மோசக்காரன்.
4. A disease of sheep;
ஆட்டுநோய்வகை. (M. cm. D. 249.)
தலைவெட்டு
-
தல்
talai-veṭṭu-,n. <>id.+.1. To behead, decapitate;
சிரச்சேதம் செய்தல். மடிமாங்காய்போட்டுத் தலைவெட்டுகிறது. (பழ.).
2. See தலைதட்டு. Loc.
.
3. To do a treacherous act;
மோசஞ் செய்தல்.
4. To punch a court-fee stamp;
பத்திரக்காது குத்துதல்.
5. To crop one' s hair;
தலைமயிர் கத்திரித்தல். Loc.
தலைவை
-
த்தல்
talai-vai-,v. intr. <>id.+.See தலையிடு-, 1, 2.
.
2. To begin to flow;
நீர் முதலியன பாயத்தொடங்குதல். இப்பொழுதுதான் தண்ணீர் வயலில் தலைவைத்திருக்கிறது. Nā.
தவ்வல்
tavvaln. prob. T. davva. (J.)1. Tiny infant;
சிறுகுழந்தை.
2. Young of animals and plants;
விலங்கு மரமுதலியவற்றின் இளமை.
தவ்வி
tavvi,n. <>darvī. [M. tavvi.]Ladle;
அகப்பை. கையாற் றவ்விபிடித்துச் சமைத்து (தெய்வீகவுலா.176).
தவ்வு
1
-
தல்
tavvu-,5 v. intr. <>தபு-.1. To lessen, decrease, shrink;
குறைதல். (அக. நி.)
2. To close the petals, as a flower;
குவிதல். தவ்வாதிரவும் பொலிதாமரையின் (கம்பரா. சரபங். 2).
3. To perish, decay, waste away;
கெடுதல்.
4. To fail;
தவறுதல். எறிந்த வீச்சுத் தவ்விட ( கம்பரா. அதிகாயன். 213).
தவ்வு
2
tavvu,n. <> தவ்வு1-. (J.)1. Shrinking, perishing, decay, failure;
கெடுகை.
2. Hole in a board;
பலகையிலிடுந் துவாரம்.
தவ்வு
3
-
தல்
tavvu-,v. intr. <>தாவு-. [K. tavu.]1. To leap, jump, spring;
தாவுதல். தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32).
2. To tread gently;
மெல்ல மிதித்தல். தவ்விக்கொண்டெடுத்த வெல்லாம் (இரகு. ஆற்று. 19).
3. To boast; to be arrogant;
அகங்கரித்தல், அதிகமாகத் தவ்வாதே.
தவ்வு
4
tavvu-,n. <> தவ்வு3-.Hopping, jumping, leaping;
பாய்ச்சல். ஒரு தவ்வுத் தவ்வினான்.
தவ்வெனல்
tav-v-eṉal,n.Expr. denoting (a) shrinking, withering, fading;
சுருங்குதற் குறிப்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144):
Expr. denoting (b) sound, as of rain; pattering;
மழையின் ஒலிக்குறிப்பு. தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப (நெடுநல். 185).
தவ்வை
tavvai,n. [T. avva.]1. Mother;
தாய். பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு (சிலப்.15, 80).
2. Elder sister;
தமக்கை. தாரை தவ்வை தன்னொடு கூடிய (மணி. 7, 104).
3. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī;
[இலக்குமியின் மூத்தாள்] மூதேவி. (சூடா.) செய்யவடவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167).
தவ
1
tava,adv. [K. tave.]Much, intensely;
மிக. உறுதவ நனியென (தொல்.சொல்.301).
தவ
2
-
த்தல்
tava-,12 v. intr. cf. தபு-. [K. tave.]To cease;
நீங்குதல். மயக்கந் தவந்தயோகியர் (விநாயகபு.49, 21).
தவக்கணக்கு
tava-k-kaṇakku,n. prob. சவை+.Account kept by the managing committee of a temple;
கோயிற் சபைக்கணக்கு. Nā.
தவக்கம்
tavakkam,n. <>தவங்கு-.1. Impediment, hindrance;
தடை.
2. Scarcity, destitution, want, absolute need;
இல்லாமை. தண்¢ணீர்த் தவக்கத்தால் விளைவில்லை.
3. Delay, procrastination;
தாமதம். Loc.
4. [K. tavaka.] Anxiety, solicitude;
கவலை. அவன் தவக்கமாய்த் திரிகிறான்.
தவக்களை
tavakkaḷai,n.See தவளை. Loc.
.
தவக்கு
tavakku,n. <> தவங்கு-.Sense of shame;
நாணம். தவக்குற்று. (மாறனலங்.279, பக்.202).
தவக்கை
tavakkai,n.See தவளை. (w.)
.
தவக்கொடி
tava-k-koṭi,n. <>தவம்1+.Female ascetic, nun;
தவப்பெண். மாபெருந் தவக்கொடி யீன்றனை (மணி.7, 37).
தவகரடி
tavakaraṭi,n.See தவழ்கரடி.
.
தவங்கம்
tavaṅkam,n. <>தவங்கு-.Sorrow, sadness, grief;
துக்கம். (J.)
தவங்கு
-
தல்
tavaṅku-,5 v. intr. [T. tamaku.]1. To be hindered, impeded;
தடைப்படுதல். வேலை தவங்கிப்போயிற்று.
2. To be in distress, as for necessaries of life;
பொருட்குறையால் வருந்துதல். (W.)
3. To be faint, sad, dejected, despondent;
வாடுதல்.
தவச்சாலை
tava-c-cālai,n. <> தவம்1+.Hermitage, as a place for the performance of austerities;
தவஞ்செய்யும் இடம். விரதங்களை அனுட்டித்திருத்தற்குரிய தவச்சாலைகள் (மணி.28, 67, உரை).
தவசம்
tavacam,n. [T. davasamu, K. tavasa.]1. Grain, especially dry;
தானியம்.
2. Grain and other provisions laid by in store;
தொகுத்த தானியம். சலவையோ பட்டோ தவச தானியமோ. (குற்றா. குற. 70, 19).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1789 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், intr, tava, tavvu, தவ்வு, தவங்கு, talai, sister, elder, தவ்வை, குறள், தானியம், grain, தவளை, தவம்1, denoting, tave, தவக்கொடி, decay, செய்தல், த்தல், treacherous, hair, crop, nā, prob, shrinking, தலைவிளை, கம்பரா, tavvi, expr