சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1785
Word
English & Tamil Meaning (பொருள்)
தலையணை
talai-y-aṇai,n. <>id.+. [M. talayaṇa]1. Pillow;
தலைவைத்துப் படுப்பதற்குப் பஞ்சுமுதலியன அடைத்துத் தைத்த பை. (திவா.)
2. The very first dam near the source of a river;
ஆற்றின் உற்பத்திக்கருகிற் கட்டும் முதலணை.
தலையணைதாங்கி
talai-y-aṇai-tāṅki,n. <>தலையணை+.A constituent part of a cot;
கட்டிலின் ஒருறுப்பு (யாழ்.அக.)
தலையணைமந்திரம்
talai-aṇai-mantiram,n. <>id.+.Curtain lectures, private advice of a wife to her husband, as given over the pillow;
மனைவி கணவனுக்கு இரகசியத்திலோதும் உபதேசம்
தலையரங்கேறு
-
தல்
talai-y-araṅkēṟu-,v. intr. <>தலை+.To make one's first appearance on the stage as a performer;
தான் கற்றவித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல். தலைக்கோலெய்தித் தலையரங்கேறி (சிலப்.3, 161).
தலையரட்டை
talai-y-araṭṭai,n. <>id.+ அலட்டு-. [K. taleharaṭe.] Colloq.1. Vain babbler;
செருக்குடன் வீண்பேச்சுப் பேசுபவன்.
2. Vain babbling;
வீண்பேச்சு.
தலையல்
talaiyal,n. <>தலை-.1. Pouring, raining;
சொரிகை. (சூடா.)
2. First rains;
தலைப்பெய்மழை. (பிங்.)
3. Cessation of rain;
மழைபெய்துவிடுகை. (திவா.)
4. Freshet;
புதுப்புனல் வரவு. (அக.நி.)
தலையலங்காரம்
talai-yalaṅkāram,n. <>தலை+.1. Decoration of the head;
தலையை யலங்கரிக்கை. Loc.
2. Conical ornamental top of a car;
தேர்க்கொடிஞ்சி. (ஞானா. 7, உரை.) பொற்றே ரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே (தனிப்பா. i, 146, 45).
தலையவதாரம்பண்ணு
-
தல்
talai-y-avatāram-paṇṇu,v. tr. <>id.+aparādha+.To behead;
சிரச்சேதஞ்செய்தல். (w.)
தலையழி
1
-
தல்
talai-aḻi-,v. intr. <>id.+.To ruined utterly; to perisn miserably, used in cursing;
அடியோடு கெடுதல்.
தலையழி
2
-
த்தல்
talai-y-aḻi-,v. tr. <>id.+.1. to be ruin utterly;
அடியோடு கெடுத்தல். தானவரை யென்றுந் தலையழித்தான் (இலக்.வி.646, உரை).
2. To destroy one's power;
தலைமைதீர்த்தல். சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப (தொல்.பொ.70).
தலையழுக்கு
talai-y-aḻukku,n. <>id.+.See தலைமுழுக்கு. (w.)
.
தலையளி
1
-
த்தல்
talai-y-aḷi-,v. <>id.+.1. To protect; save;
காத்தல். தானேவந் தெம்மைத் தலையளித்து (திருவாச. 7, 6).
2. To regard with grace;
கருணையொடு நோக்குதல். நாடுதலையளிக்கு மளிமுகம்போல (புறநா. 67).--
To give presents;
வரிசைசெய்தல். தலையளித்தான் றண்ணடையுந் தந்து (பு. வெ. 2, 12).
தலையளி
2
talai-y-aḷi,n. <>id.+.1. Kind speech;
முகமலர்ந்து இனிய கூறுகை. யாவர்க்குந் தலையளி செய்தலும் (குறள், 390, உரை).
2. Ideal love;
உத்தம அன்பு. ஆவிநீங்கின டலையளியாகிய தது வன்றோ (கந்தபு. இரணியன்பு. 2).
3. Grace;
கருணை.
தலையற்றாள்
talai-y-aṟṟāḷ,n. <>id.+.Widow, as one who has lost her husband;
(தலைவனை யிழந்தவள்) கைம்பெண். (நிகண்டு.)
தலையறை
talai-y-aṟai,n. <>id.+அறு-.Headless body;
உடற்குறை. (நிகண்டு.)
தலையன்பு
talai--y-aṉpu,n. <>id.+.See தலையளி, 2. (திருவுந்தி.7, உரை.)
.
தலையா
-
தல்
talai-y-ā-,v. intr.<>id.+.To become prominent;
மேன்மையாதல். தமருட் டலையாதல் (பு.வெ.3, 6).
தலையாகுமோனை
talai-y-āku-mōṉai,n. <>id.+. (Pros.)Alliteration of the first letter of each foot in a line;
செய்யுளின் ஓரடியின் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை.ஒழிபி.6, உரை.)
தலையாகெதுகை
talai-y-āketukai,n. <>id.+. (Pros.)Rhyming of the initial foot in each line of a stanza;
முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை.)
தலையாட்டம்
talai-y-āṭṭam,n. <>id.+.1. [M. talayāṭṭam.] Trembling of the head, as from palsy;
தலைநடுக்கம். வந்த தலையாட்டமன்றி வந்தது பல்லாட்டம்(அருட்பா.நாமாவளி.164).
2. Extreme fear;
பேரச்சம். Loc.
3. Arrogance;
கருவம். Colloq.
4. [T. talāṭamu.] Plume of hair on a horse's head;
குதிரைத் தலையணிவகை. துஞ்சாகிய சிவந்த தலையாட்டத்தினையும் (கலித். 96, உரை).
தலையாட்டி
talai-y-āṭṭi,n. <>id.+.See தலையாட்டிப்பொம்மை. Loc.
.
தலையாட்டிப்பொம்மை
talai-y-āṭṭi-p-pommai,n. <>தலையாட்டி+.Lit., a doll moving its head to and fro. a servile person;
(இங்குமங்கும் தலையசைத்தாடும்பொம்மை) எதற்கும் இணங்கி நடப்பவன்.
தலையாடி
talai-y-āṭi,n. <>தலை+.1. Top most part of the trunk of a tree, commonly of a palm, as unfit for use;
பனைமரத்தின் நுனிப்பாகம். (J.)
2. Latter half of a stanza;
ஒரு செய்யுளின் பிற்பகுதி. (ஈடு, 7, 5, 10.)
தலையாண்டு
talai-y-āṇṭu,n. <>id,+. Nā.1. First anniversary of a deceased person;
ஆப்திகம்.
2. Previous year, as dist. fr. taṉṉāṇṭu;
முந்திய வருடம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1785 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், talai, first, head, தலையளி, aṇai, intr, line, செய்யுளின், pros, நிகண்டு, foot, stanza, தலையாட்டிப்பொம்மை, person, āṭṭi, தலையாட்டி, ஒழிபி, grace, காரிகை, அடியோடு, husband, colloq, part, திவா, pillow, vain, தலையலங்காரம், தலையணை, த்தல், utterly, aḻi, தலையழி, aḷi