சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1329
Word
English & Tamil Meaning (பொருள்)
சலவைமண்
calavai-maṇ,n. <>சலவை +>Earth used for plastering walls;
சுவரிற் பூசுதற்குரிய மண். (யாழ். அக),
சலன்
calaṉ,n. <>calana.Foot, leg;
கால். (பிங்.)
சலன்சலனெனல்
calaṉa-calaṉ-eṉal,n.Onom. expr. of tinkling sound;
சதங்கை முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. சதங்கைகள் சலன்சலனென (திருவாலவா. 28, 51).
சலனகாலம்
calaṉa-kālam,n. <>calana +.Times of hardship, adversity;
துன்பகாலம். (w.)
சலனநரம்பு
calaṉa-narampu,n. <>id. +.Motor nerve;
சதைகளை எண்ணியபடி அசைவிக்கும் நரம்பு. (இங். வை. 28)
சலனம்
calaṉam,n. <>calana.1. Moving, shaking, trembling;
அசைவு. மேருவின சிகரமுஞ்சலன முற்றிட (சிவரக. தேவிநாட். 4).
2. Mental agitation;
சஞ்சலம். சவலைமனச் சலனமெலாந் தீர்த்து (அருட்பாஇ vi, பிரியேனென்றல். 11).
3. Trouble, anxiety, affiction;
துன்பம்.
4. Foot , leg;
கால். (சூடா.)
5. (šaiva.) Liṅga imagined for mental worship;
இதயத்திற் கற்பித்துப் பூசிக்கப்படும் சிவலிங்கம். குறிப்பினுள்ளே தாபி தலிங்கஞ் சலனம் (சைவச. பொது. 122.)
சலனன்
calaṉaṉ,n. <>calana.Wind;
காற்று. (பிங்.)
சலனை
calaṉai,n. <>id.See சலனம்
சலனை பயனானாலும் (ஒழிபு. சத்திநி. 4)
சலச்தம்பவாதம்
cala-stampa-vātam,n. <>jala +.Dysury, painful discharge of urine;
நீர்க்கடுப்பு. (w.)
சலாக்கியம்
calākkiyam,n. <>šlāghya.Excellence . See
சிலாக்கியம். Colloq.
சலாக்கு
calākku,n. prob. šalaākā.Burin, engraver's tool;
உலோகங்களிற் செய்யும் சிந்திர வேலைகளுக்கு உதவுங் கருவி. (C. G.)
சலாகாபுருடர்
calākā-puruṭar,n. <>šlāghā + purusa. (Jaina.)Saints, 63 in number, including the 24 tīrttaṅkarar;
24 தீர்த்தங்கரரை உள்ளிட்ட 63 சைனப்பெரியோர்கள்.
சலாகு
calākai,n.Spike. See
சலாகை, 1.
சலாகை
1
calākai,n. <>šalākā.1. Needle-like tool of steel;
சிறு நாராசம். சலாகை நுழைந்த மணித்துளை (மணி. 12, 66).
2. Magnet;
காந்தம். (திவா.)
3. Surgeon's probe;
இரணவைத்தியக் கருகிவகை. Colloq.
4. Ramrod;
துப்பாக்கிச் சலாகை. (w.)
5. Spear, javelin;
சவளம் என்னுஙம ஆயுதம். (பிங்.)
6. Iron rod or stake;
இருப்புக்கம்பி.
7. Lath for roofing;
வரிச்சல். (J.)
சலாகை
2
calākai,n. prob. šlāgh.1. A superior kind of gem;
நன்மணி. (பிங்.)
2. An ornament worn on shoulders;
வாகுவலயம். (சீவக. 2696, உரை.)
3. A small coin;
சிறு நாணயவகை. (T. A. S. III, 217.)
சலாகைப்பாரை
calākai-p-pārai,n. <>சலாகை+.Sharp pointed implement for digging;
தோண்டுதற்கு உதவும் கூர்முனையுள்ள கருவி. (w.)
சலாகையடி
-
த்தல்
calākai-y-aṭi-,v. intr. <>id.+.To nail on laths, prepare laths;
வரிச்சல் சேர்த்தல். (J.)
சலாகையாணி
calākai-y-āṇi,n. <>id. +.Lath-nail;
வரிச்சலாணி. (J.)
சலாங்கு
calāṅku,n. perh. jala-raṅka. (பிங்.)1. Rail, water-fowl;
பொய்யாப்புள்.
2. Gnat, mosquito;
கொதுகு.
சலாசத்து
calācattu,n. <>šilā-jatu.See
சிலாசத்து. Colloq.
சலாசயம்
calācayam,n. <>jala+ ā-šaya.1. Reservoir, tank;
நீர்நிலை. Nā.
2. Urinary bladder, one of cācayam, q.v.;
முத்திதப்பை.
சலாசலலிங்கம்
calācala-liṅkam,n. <>cala+a-cala+.Various kinds of liṅga, such as vāṇa-liṅkam, irattiṉa-liṅkam, etc., used for both private and public worship;
ஆன்மார்த்த பரார்த்தபூசைகளுக்குரிய வாணலிங்கம் இரத்தினலிங்கம் முதலிய சிவலிங்கங்கள். (சைவச.பொது.123)
சலாசனம்
calācaṉam,n. <>id. +ā-sana. (šaiva.)Pedestals imagined for seating a liṅga when bathing it for worship, six in number,viz., aṉantar, taṉmam, āantar, vairākkiyam, aicuvariyam, patumam;
பூசையில் சிவலிங்கம் அமைத்தற்குரிய அனந்தர், தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், பதுமம் என்ற அறுவகை ஆசனம், (சைவச. பொது. 523.)
சலாஞ்செய்
-
தல்
calā-cey-,v. tr. & intr. <>சலாம்+.1. To salute by raising the hand to the forehead;
கையை நெற்றியில் வைத்து வந்தித்தல்.
2. To bow in obeisance;
வணங்குதல். (உரி. நி.) குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமானை (மீனாட். பிள்ளைத். காப்புப். 4).
சலாத்தி
calātti,n.A curtain;
திரைச்சீலை. (யாழ். அக.)
சலாத்து
-
தல்
calāttu-,5 v. tr.To shake, as liquid in a vessel;
குலுக்குதலி. Loc.
சலாந்தரு
calān-taru,n. <>சலாம்+. (Nāṭya.)A saluting pose in dancing;
நாட்டிய வுறுப்பு வகை. தள்ளரிய சலாந்தருவும் (குற்றா. தல. தருமசாமி. 55)
சலாபக்குளி
calāpa-k-kuḻi,n. <>சலாபம் +. (w.)1. Pearl-fishery; diving for pearls;
முத்துக் குளிப்பு.
2. Profitable business, as pearl-fishing;
வருமானமுள்ள தொழில்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1329 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், calākai, சலாகை, பிங், calana, worship, சைவச, cala, colloq, liṅkam, liṅga, jala, பொது, calaṉa, intr, வரிச்சல், lath, சிறு, nail, pearl, சலாம், யாழ், laths, calaṉ, கருவி, used, mental, சிவலிங்கம், šaiva, சலனம், கால், imagined, tool, prob, foot