சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1176
Word
English & Tamil Meaning (பொருள்)
கோட்டைமேடு
kōṭṭai-mēṭu,n. <>id. +.Glacis;
அகழிக்குப் புறம்பேயுள்ள மண்மேடு . (கட்டட. நாமா. 7.)
கோட்டையடுப்பு
kōṭṭai-y-aṭuppu,n. prob. கோட்டு-+.Oven-trench, fireplace in the form of a ditch;
காடியடுப்பு. Colloq.
கோட்டைவிதைப்பாடு
kōṭṭai-vitai-p-pāṭu,n.See கோட்டைவிரைப்பாடு.
.
கோட்டைவிரைப்பாடு
kōṭṭai-virai-p-pāṭu,n. <>கோட்டை1+.Land measure about 1.62 acres=the extent of land which requires one kōṭṭai of seed for sowing;
ஒருகோட்டை விதை விதைக்கக்கூடிய நிலவளவு. (G. Tn. D. I, 238.)
கோட்டைவெளி
kōṭṭai-veḷi,n. <>கோட்டை2+.Esplanade;
கோட்டைக்கு வெளியிலுள்ள இடம். (C. E. M.)
கோட்டைவேளாளர்
kōṭṭai-vēḷāḷā,n. <>id. +.A sect of Vēḷāḷas living in a fort at Srivaikuntam in Tinnevelly district;
திருநெல்வேலிஜில்லா ஸ்ரீவைகுண்டத்தில் கோட்டைக்குள் வசித்துவரும் வேளாளவகையினர்.
கோட்படு
-
தல்
kōṭ-paṭu-,v intr. <>கோள்+படு-.1. To be seized, captured;
பிடிக்கப்படுதல். புலிதானே புறத்ததாக் குட்டி கோட்படா தென்ன (கம்பரா. சூர்ப்ப. 102).
2. To be realised, understood;
அறியப்படுதல். ஞானத்தாலுங் கோட்படாப்பதமே (கம்பரா. அனுமப். 36).
3. To gain strength, become powerful;
வலிமைகொள்ளுதல். பனிமதக் குவடு கோட்பட் டெழுந்துறப் பாய்ந்த வாற்றல் (இரகு. திக்குவி. 225).
கோட்படுபதம்
kōṭ-paṭu-patam,n. <>id. + cf. gōṣ-pada.Hoof;
மாட்டுக்குளம்பு. (யாழ். அக.)
கோட்பறை
kōṭ-paṟai,n. <>id. +.Proclamation-drum, tom-tom;
செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை. கொள்ளென குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62).
கோட்பாடு
kōṭ-pāṭu,n. <>கொள்-+.1. Principles, tenets of a religious sect, doctrines, idea, opinon;
கொள்கை.
2. Conduct, behaviour;
நடத்தை. (சிலப். பதி. 16, அரும்.)
கோட்பு
kōṭpu,n. <>id.1. Taking, receiving;
கொள்ளுகை. (யாழ். அக.)
2. Strength, power;
வலிமை. விதியின் கோட்பால் வீடினன் (கம்பர. உருக்காட். 81).
கோட்புகு
-
தல்
kōṭ-puku-,v. intr. <>கோள்+.To mature, as trees; to enter on the first bearing stage;
மரமுதலியன பயன்கொள்ளும் பருவத்ததாதல். கோட்புகாத கன்னிக்கமுகு (சீவக. 169, உரை). கோட்புகுகையாவது பாலசூதாதிகள் அபிநவமாகப் பலவத்துக்களாகை (ஈடு, 5, 10, 3).
கோட்புலிநாயனார்
kōṭ-puli-nāyaṉār,n. <>id. +.A cononized šaiva saint, one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.)
கோடக்குத்துவா
kōṭa-k-kuttuvā,n.1. A herring, greenish, Pellona indica;
கடல் மீன்வகை.
2. A herring, golden, glossed with purple, Pellona brachysoma;
குத்துவாமீன்வகை.
கோடகசாலை
kōṭakacālai,n. [M. kōṭācāri.]A very small plant, Justicia procumbens;
ஒருவகைப் பூடு. (பதார்த்த. 252.)
கோடகம்
1
kōṭakam,n. <>kōṭaka.1. Ornamental curves of a crown, one of five muṭi-y-uṟuppu, q.v.;
முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று (திவா.)
2. A kind of tapering crown;
சிகரமாகச் செய்த முடிவகை. கோடக மணிந்த கொல முடியினாய் (சீவக. 2989).
3. Junction where several streets meet, crossing;
பலதெருக்கூடுமிடம். (பிங்.)
4. Ewer;
குண்டிகை. (W.)
கோடகம்
2
kōṭakam,n. <>ghōṭaka.1. Horse;
குதிரை. பச்சைக் கோடகக் காற்றை (கல்லா. 17, 48).
2. The first nakṣatra. See
அசுவதி. (சங். அக.)
கோடகம்
3
kōṭakam,n.Newness, novelty;
புதுமை. (பிங்.)
கோடங்கி
kōṭaṅki,n.1. A small hand-drum;
உடுக்கை. Tj.
2. Soothsayer who uses the uṭukku drum;
உடுக்கடித்துக் குறிசொல்வோன். Loc.
கோடங்கிபார்
-
த்தல்
kōṭaṅki-pār-,v. intr. <>கோடங்கி+.To consult a kōṭaṅki;
கோடங்கியிடம் குறிகேட்டல். (W.)
கோடங்கிழங்கு
kōṭaṅ-kiḻaṅku,n. <>கோடைக்கிழங்கு.Lesseer galangal. See
சிற்றரத்தை. (W.)
கோடணை
1
kōṭaṇai,n. <>ghōṣaṇā.1. Sound;
ஒலி . (திவா.)
2. Loud noise, roar, thunder;
முழக்கம். கோடணை போக்கி (பெருங். உஞ்சைக், 49, 85).
3. Playing on the lute;
யாழ் வாசிக்கை. குழலவன் கோடணை யறைவாம் (சீவக. 603).
4. Musical instrument;
வாச்சியப்பொது. பாடிமிழ் பனித்துறைக் கோடணை யரவமும் (பெருங். உஞ்சைக். 41, 3).
5. Decoration, adornment;
அலங்காரம். (மணி. 5, 94, அரும்.)
கோடணை
2
kōṭaṇai,n. <>கொடு-மை.Cruelty;
கொடுமை. (பிங்.)
கோடணைபோக்கு
-
தல்
kōṭaṇai-pōkku-,v. intr. <>கோடணை1+.To cause loud noise;
பெருமுழக்கம் உண்டாகச்செய்தல். கோடணை போக்கி யதிர்குரன் முரசு (பெருங். உஞ்சைக். 49, 85).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1176 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kōṭṭai, kōṭ, கோடணை, intr, பெருங், drum, பிங், kōṭakam, சீவக, யாழ், kōṭaṅki, கோடகம், உஞ்சைக், kōṭaṇai, pāṭu, திவா, crown, noise, கோடங்கி, loud, போக்கி, first, paṭu, கோள், sect, land, கோட்டைவிரைப்பாடு, கம்பரா, strength, pellona, herring, அரும், கோட்பறை, small