சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1095
Word
English & Tamil Meaning (பொருள்)
கேலி
kēli,n. <>kēlī.1. Fun, jest, joke, pleasantry;
விளையாட்டுப் பேச்சு.
2. Ridicule, derision, mockery;
பரிகாசம்
3. Buffoonery, mimicry;
விகடம்.
கேலிக்காரன்
kēli-k-kāraṉ,n. <>id. +.1. Jester, buffoon, mimic;
விகடன்.
2. One who ridicules, scoffer;
பரிகாசஞ்செய்பவன்.
கேலிகம்
kēlikam,n. <>kēlika.Indian mast-tree. See
அசோகம், 3. (மலை.)
கேவசட்டையரம்
kēvacaṭṭai-y-aram,n. <>kēlika.A curved file;
ஒருவகை அரம். (C.E.M.)
கேவணம்
kēvaṇam,n. <>kṣēpaṇa. [K. kēvaṇa.]Bed or socket for a gem;
மணிபதிக்குங் குழி மணியொடு வயிரங் கட்டியபத்திக் கேவணப்பசும்பொற் குடைச்சூல் (சிலப். 16, 118).
கேவல்
kēval,n.Five-leaved yam. See
வள்ளிக்கொடி. (மலை.)
கேவலக்கிடை
kēvala-k-kiṭai,n.Disembodied inactive condition of the soul enveloped in āṇava, the inherent darkness;
ஆணவத்தல் மறைப்புண்டு அழுர்த்தமாய்ச் செயலற்றுக்கிடக்கும் ஆன்மாவின் நிலை. (சி. சி. 4, 38.)
கேவலக்கிழவன்
kēvala-k-kiḻavaṉ,n. <>id. +.Arhat, as enjoying the Supreme Bilss;
அருகக்கடவுள். தோமறு கேவலக்கிழவன் மூதெயில்போல் (சீவக. 856).
கேவலசாக்கிரம்
kēvala-cākkiram,n. <>id. +.To vuḻkkiram, condition of the embodied soul on its way to, and from, kēvala-k-kiṭai;
கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சாக்கிரம்.
கேவலசுழுத்தி
kēvala-cuḻutti,n. <>id. +.The cuḻutti condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai;
கேவலக்கிடைக்குச் செல்லும் பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சுழுத்தி.
கேவலசைதந்யம்
kēvala-caitanyam,n. <>id. +.Condition of soul when it becomes one with the Supreme Knowledge;
ஆன்மா ஞானசொரூபமாக உள்ள நிலை. கேவலசைதந்யமாகிய ஆத்மாவினிடம் (சித். சிகா.197, 2, உரை).
கேவலசொப்பனம்
kēvala-coppaṉam,n. <>id. +.The coppaṉam condition of the embodied soul on its way to and from kēvala-k-kiṭai;
கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சொப்பனம் .
கேவலஞானம்
kēvala-āṉam,n. <>id. +.Perfect knowledge, knowledge of the past, present and furture;
திரிகாலஞானம். கேவலஞானத்துக்கு முன்காணுங் காட்சியை (சீவக. 3081, உரை).
கேவலதிரவியம்
kēvala-tiraviyam,n. perh. kērala +.Black pepper. See
மிளகு. (மலை.)
கேவலதுரியம்
kēvala-turiyam,n. <>kēvala+. (šaiva.)The turiyam condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai;
கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன் கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய துரியம்.
கேவலதுரியாதீதம்
kēvala-turiyātītam,n. <>id. +.The turiyattam condition, of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai;
கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய துரியாதீதம்.
கேவலப்படுத்து
-
தல்
kēvala-p-paṭuttu-,v. tr. <>id. +.To disgrace, dishonour;
அவமரியாதை செய்தல்.
கேவலப்பொருள்
kēvala-p-poruḷ,n. <>id. +.The Supreme Being, as the one without a second;
பரப்பிரம்ம கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான் (குறள், 358, உரை).
கேவலம்
kēvalam,n. <>kēvala.1. Singleness, solitariness, isolation;
தனிமை. (சூடா.)
2. Uniqueness;
இணையற்றது.
3. Final emancipation, supreme bliss;
மோக்ஷம். (பிங்.)
4. See கேவலஞானம். திக்கறியப்பெற்றது கேவலம (திருநூற். 88).
.
5. That which is insignificant, common;
அற்பமானது. கேலவமல்ல விப்போர் (பாரத. பதின்மூ. 100).
6. Low status, meanness;
தாழ்நிலை. அவன் மிகக் கேவலமானவன்.
7. Disgrace, dishonour;
அவமானம். அவரைக் கேவலம்பண்ணினான்.
8. See கேவலாவத்தை. கேவலஞ் சகலஞ் சுத்தமென்றமூன் றவத்தை யான்மா மேவுவன் (சி. சி. 4, 37).
.
கேவலவுணர்வு
kēvala-v-uṇāvu,n. <>id. +.Knowledge of the Supreme Truth;
பரஞானம். (குறள், 352, உரை.)
கேவலன்
kēvalaṉ,n. <>id.1. One who attempts to obtain final emancipation;
கைவல்ய பதவியடைய முயல்பவன். கேவலன் . . . யாவதாத்மபாவி அசரீரியாய்க்கொண்டு திரிவானொருவன் (அஷ்டா. தச, அர்த்தபஞ் 26).
2. Ordinary man, average person;
சாமானியன். ஆசிரியன் கேவலனல்லன் (திருவாலவா, 15, 11).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1095 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kēvala, soul, condition, kiṭai, ஆன்மா, கேவலக்கிடைக்குச், நிற்கும், நிலைகளுள், embodied, ஒன்றாகிய, மீளும்பொழுதும், supreme, அதன்கணின்று, knowledge, செல்லும்பொழுதும், dishonour, disgrace, குறள், emancipation, கேவலன், turiyam, final, coppaṉam, நிலை, கேவலக்கிழவன், kēlika, cuḻutti, kēli, சீவக, கேவலஞானம்