சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1053
Word
English & Tamil Meaning (பொருள்)
குறுக்கை
2
kuṟu-k-kai,n. <>குறு-மை+கை5.1. Tiger;
புலி. (பெருங். இலாவாண. 18, 18, அரும்.)
2. Dagger, poniard;
உடையாள். குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18. 18).
குறுக்கையர்
kuṟukkaiyā,n. <>குறுக்கை1.Members of the family in the Vēḷāḷa caste to which Tiru-nāvukkaracar belonged;
வேளாளமரபில் திருநாவுக்கரசுநாயனார் அவதரித்த குடியைச்சார்ந்தவர். வேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குருக்கையர்தங் குடிவிளங்கும் (பெரியபு. திருநா. 15).
குறுகக்காய்ச்சு
-
தல்
kuṟuka-k-kāyccu-,v. tr. <>குறுகு-+.To boll down a liquid;
சுண்டக்காய்ச்சுதல். (J.)
குறுகப்பிடி
-
த்தல்
kuṟuka-p-piṭi-,v. tr. <>குறுகு-+. (W.)1. To make short; to curtail, as expenses; to retrench; to shorten, as a story;
சுருக்குதல்.
2. To hold near or close to;
கிட்டப்பிடித்தல்.
குறுகல்
kuṟukal,n. <>id.That which is short, dwarfish, stunted;
குருகிய பொருள். (W.)
குறுகலர்
kuṟukalā,n. <>id. + அல் neg. +.Enemies, foes;
பகைவர். குறுகல ரூர் (திருக்கோ. 13).
குறுகாதவர்
kuṟukātavā,n. <>id. + ஆ neg. +.See குறுகலர். குறுகாதவரூர். . . சரத்தாற்செற்றவன் (தேவா. 169, 1).
.
குறுகார்
kuṟukār,n. <>id. +.See குருகலர். குறுகார் தடந்தோளிரண்டுந் துணிந்து (பாரத. முதற்போ. 29).
.
குறுகு
-
தல்
kuṟuku-,5.v. [T. kuruca, M. kuṟuku.] intr.1. To grow short, stumpy, dwarfish;
குள்ளமாதல். குறுகுகுறுகென விருத்தி (கந்தபு. திருக்குற்றாலப். 15).
2. To shrink, contract; to be reduced; to decrease, diminish, decline;
சிறுகுதல். உரைகுருக நிமிர்கீர்த்தி (கம்பரா. குலமுறை. 4).
3. (Gram.) To be shortened, as a long vowel;
மாத்திரை குறைதல். இடைப்படிற் குறுகு மிடனுமாருண்டே (தொல். எழுத். 37)--tr.
4. To approach, draw near;
அணுகுதல். இளங்கோவேந்தனிருப்பிடங் குறுகி (மணி. 18, 42).
குறுகுத்தாளி
kuṟuku-t-tāḷi,n. <>குறுகு-+.Hairy-leaved creamy white bindweed. See
சிறுதாளி. (மலை.)
குறுகுறு
-
த்தல்
kuṟu-kuṟu-,11. v. intr.1. To mutter in displeasure, murmur;
வெறுப்புத் தோன்ற முருமுருத்தல். (W.)
2. To be pricked by conscience;
மனம் உறுத்திக்கொண்டிருத்தல். குற்றமுள்ளநெஞ்சு குறுகுறுக்கும்.
3. To be perturbed by fear of detection;
அச்சம் உறுத்திக்கொண்டிருத்தல்.
4. To feel an itching or irritating sensation, as in the ear, in a sore;
தினவுறுதல். காது குறுகுறுக்கிறது.
குறுகுறுநட
-
த்தல்
kuṟu-kuṟu-naṭa-,v. intr. <>குறுகுறு-+.To wobble with short steps, as a child;
குறுகக்குறுக நடந்துசெல்லுதல். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி (புறநா. 188).
குறுகுறுப்பு
kuṟukuṟuppu,n. <>id.1. Muttering in displeasure;
விருப்பின்மை தோன்ற முருமுருக்கை. (W.)
2. [T. gurru.] Snoring, stertorous breathing;
குறட்டை. (W.)
3. Showing signs of perturbation with fear;
அச்சக்குறி காட்டுகை.
4. Briskness;
சுருசுருப்பு.
குறுகுறுப்பை
kuṟukuṟuppai,n. <>id.Snoring, stertorous beathing;
குறட்டை. (W.)
குறுகுறென்றுவிழி
-
த்தல்
kuṟu-kuṟeṉṟu-viḻi-,v. intr. <>id. +.To have a look of fear, a thievish look;
திருட்டுவிழிவிழித்தல். புதுத்திருடன் குறுகுறென்று விழிக்கிறான்.
குறுகுறெனல்
kuṟukuṟeṉal,n.Onom. expr. signifying (a) showing signs of haste;
விரைவுக்குறிப்பு. அவன் குறுகுறென்று நடக்கிறான்:
(b) tingling, as in the ears, a sore;
தினவுதின்னு தற்குறிப்பு. காது குறுகுறென்கிறது.
(c) muttering in displeasure;
கோபக்குறிப்பு.
(d) being perturbed with fear;
அச்சக் குறிப்பு: புலியைக்கண்டால் மனம் குறுகுறென்கிறது:
(e) being brisk and active;
சுரு சுருப்பாயிருத்தற் குறிப்பு.
குறுங்கண்
kuṟu-ṅ-kaṇ,n. <>குறு-மை+.A kind of lattic-window, with small apertures;
சாளரம். குறுங்க ணடைக்குங் கூதிர்க்காலையும் (சிலப். 14, 101).
குறுங்கண்ணி
kuṟu-ṅ-kaṇṇi,n. <>id. +.Wreath for the tuft;
முடியிலணியும் மாலை. குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய (இறை. களவி. 1, உரை).
குறுங்கணக்கு
kuṟu-ṅ-kaṇakku,n. <>id. +.Simple letters of the Tamil alphabet, viz., 12 vowels and 18 consonants, opp. to ṇeṭu-ṅ-kaṇakku;
உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து.
குறுங்கலி
kuṟu-ṅ-kali,n. <>id. +.1. An ancient melody-type of the pālai class;
பாலை யாழ்த்திறத்தொன்று. (திவா.)
2. (Puṟap.) Theme of addressing a hero with a view to turn him away from his illicit loves;
தன் மனைவியை விரும்பாது விகற்பித்த ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை. (பு. வெ. 12, இருபாற்பெ. 18.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1053 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kuṟu, குறுகு, intr, த்தல், short, kuṟuku, displeasure, குறுகுறு, snoring, stertorous, muttering, காது, sore, குறட்டை, showing, குறிப்பு, kaṇakku, குறுகுறென்கிறது, குறுகுறென்று, signs, perturbed, உறுத்திக்கொண்டிருத்தல், குறுகலர், குறுகார், dwarfish, பெருங், இலாவாண, குறு, குறுக்கை, மனம், தோன்ற, பொருள், tamil, kuṟuka