சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1046
Word
English & Tamil Meaning (பொருள்)
குறண்டி
1
kuṟaṇṭi,n. <>id.A secondary melody-type of the cevvaḻi class;
செவ்வழிப்பண்வகை. (பிங்.)
குறண்டி
2
kuṟaṇṭi,n. cf. kuraṇda.1. A thorny shrub, Lepidagathis;
முட்செடிவகை.
2. Barb of a fishhook;
தூண்டில் முள். Loc.
குறண்டிப்பிடி
-
த்தல்
kuṟaṇṭi-p-piṭi,v. intr. <>குறண்டு-+.To be close fisted, grasping miserly;
உலோபஞ்செய்தல். (J.)
குறண்டிப்போ
-
தல்
kuṟaṇṭi-p-pō-,v. intr. <>id.+.To grow crooked; to be bent, hunchbacked;
கூனலாதல். (J.)
குறண்டிவளையம்
kuṟaṇṭi-vaḷaiyam,n. <>குறண்டி2+.Double hooks fixed to a roofbeam for hanging a cradle;
தொட்டிற்சங்கிலி மாட்டும் வளையம். Loc.
குறண்டு
-
தல்
kuṟaṇṭu-,5. v. intr. cf. குறழ்-. (J.)1. To be crooked or bent, as horns, fingers, limbs, fruits;
வளைதல்.
2. To be convulsed, to have spasms;
வலிப்புக்கொள்ளுதல்.
3. To coil up, as a small reptile;
சுருண்டுகொள்ளுதல்.
குறத்தனம்
kuṟattaṉam,n. <>குறம்.Pretence, dissimulation;
பாசாங்கு.
குறத்தி
1
kuṟatti,n. <>குறம்.1. Woman of the hilly tract;
குறிஞ்சிநிலப்பெண். (இறை. 1, உரை.)
2. Woman of the Kuṟava tribe;
குறச்சாதிப்பெண்.
குறத்தி
2
kuṟatti,n.A plant common in sandy tracts. See
நிலப்பனை. (மலை.)
குறத்திப்பாசி
kuṟatti-p-pāci,n.Job's tears, a small coarse grass, Coix lachryma, having large, round white, shining fruits;
வெண்மையும் உருட்சியுமன காய்களையுடைய புல்வகை. (M. M. 69.)
குறத்திப்பாட்டு
kuṟatti-p-pāṭṭu,n. <>குறத்தி+.A poem in which a Kuṟava woman is represented as describing to a maiden her fortune in her love-affair;
தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப்பற்றிக் குறத்தி குறிசொல்வ தைக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283.)
குறப்பாசாங்கு
kuṟa-p-pācāṅku,n. <>குறம்+.Pretended simplicity or feigned innocence, as the trick of a Kuṟavaṉ;
குற்றஞ்செய்த குறவன் ஒன்றும் அறியாதவன்போற் காட்டும் போலிநடிப்பு.
குறம்
kuṟam,n. perh. குற-.1. Kuṟava tribe;
குறச்சாதி.
2. Palmistry, fortune-telling, as practised by Kuṟava women;
குறத்திசொல்லுங்குறி. (சங். அக.)
3. A theme in kalampakam as reppresenting the speech of Kuṟavaṉ;
குறவர் கூற்றாகவரும் கலம்பகவுறுப்பிள் ஒன்று. தவ்ங்குற மறம்பாண் (இலக். வி. 812).
4. See குறத்திப்பாட்டு. மீனாட்சியம்மைகுறம்.
.
குறமகளிளவெயினி
kuṟa-makaḷ-iḷa-v-eyiṉi,n. <>குறம்+.A Kuṟrava poetess who composed the 157th stanza in Puṟa-nāṉūṟu;
புறநானூற்றில் 157-ம் பாடலியற்றியவரும் குறச்சாதியினருமான ஒரு பெண்புலவர்.
குறவஞ்சி
kuṟa-vaci,n. <>id. + [T. koravaji.]1. Woman of the Kuṟava tribe; fortune-teller;
குறிசொல்லும் குறமகள். (W.)
2. A kind of dramatic poem. See
குறத்திப்பாட்டு.
குறவணவன்
kuṟavaṇavaṉ,n.Large white grub found in dung heaps;
எருக்குவியலில் தோன்றும் வெண்புழு. (J.)
குறவழக்கு
kuṟa-vaḻakku,n. <>குறம்+.1. Complicated, incolved lawsuit;
தீராவழக்கு. (W.)
2. Baseless contention obstinately maintained;
பிடிவாதமாய் மேற்கொள்ளும் துர்வழக்கு. Loc.
குறவன்
kuṟavaṉ,n. <>id. [T. korava, K. koṟava, M. kuṟavan.]1. Inhabitant of the hilly tract;
குறிஞ்சிநிலமகன். குறவரு மருளுங் குன்றத்து (மலைபடு. 275).
2. Inhabitant of the desert tract;
பாலைநிலமகன். (பிங்.)
3. Kuṟava, a caste of fowlers, snake-catchers, basket-makers and fortune-tellers;
வலைவைத்தல் பாம்புபிடித்தல் கூடைமுடைதல் குறிசொல்லுதல் முதலிய தொழில்கள் செய்யும் சாதியினன்.
4. Pretender, cringing hypocrite;
பாசாங்குபண்ணுகிறவன். Colloq.
5. Mercury, quicksilver;
பாதரசம். (மூ. அ.)
குறவாணர்
kuṟa-vāṇā,n. <>id. +.The Kuṟava tribe of the mountain;
மலைக்குறவர். முடிந்தபொழுதிற் குறவாணர் (திவ். இயற். 3, 89).
குறவி
kuṟavi,n. <>id. [K. koṟavaji.]A woman of kuṟava caste;
குறச்சாதிப்பெண். குறவிதோண் மணந்த செல்வக் குமரவேள் (தேவா. 758, 3).
குறவை
kuṟavai,n. [T. koṟṟa.]1. Black murrel. See
வரால்.
2. Murrel, greenish, attaining more than 1 ft. in length, Ophiocephalus punctatus;
வரால்மீன் வகை. (பதார்த்த. 914.)
குறழ்
-
தல்
kuṟaḻ-,4. v. intr.To stoop, bend low;
குனிதல். அவனாங்கே பாராக் குறழா (கலித். 65, 10).
குறள்
kuṟaḷ,n. <>குறு-மை. [M. kuṟaḷ.]1. Shortness, dwarfishness;
குறுமை. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944, 1)
2. Dwarf, about 2 ft. high. dist. fr. cintu;
ஈரடி உயரமுள்ள குள்ளன். தேரை நடப்பனபோற் குறள் (சீவக. 631).
3. Imp, goblin;c
பூதம். (பிங்.)
4. Smallness;
சிறுமை. வரகின் குறளவிழ்ச் சொன்றி (பெரும்பாண். 193).
5. See குறளடி. (இலக். வி. 720.)
.
6. See குறள் வெண்பா. (இலக். வி. 720.)
.
7. See திருக்குறள். உலகங் கொள்ள மொழிந்தார் குறள் (வள்ளுவமா. 33).
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1046 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kuṟava, குறம், kuṟaṇṭi, woman, kuṟa, குறத்தி, kuṟatti, fortune, குறள், tribe, intr, இலக், kuṟavaṉ, tract, பிங், குறவன், kuṟaḷ, inhabitant, caste, murrel, குறவாணர், தேவா, poem, hilly, bent, குறழ், fruits, குறண்டி, crooked, small, குறத்திப்பாட்டு, large, குறச்சாதிப்பெண், குறண்டு