சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1044
Word
English & Tamil Meaning (பொருள்)
குற்றவீடு
kuṟṟa-vīṭu,n. id. + விடு-.Faultlessness, sinlessness, suppression of human passions;
காமம்வெகுளிழதலிய குற்றங்கள் நீங்கு கை குற்றவீடெய்தி (மணி. 26, 51).
குற்றாக்குரவையர்
kuṟṟā-k-kuravaiyā,n. <>குற்று- + ஆ neg + prob. குரவர்.A sect of tamil speaking brahmins who postpone the ear boring ceremony of their boys till upanayaṉam;
ஆண் குழந்தைகளுக்குக் காதுகுத்துஞ் சடங்கை உபநயனம் வரை செய்யாதிருக்கும் ஒருசார் பிராமணவகுப்பினர். Loc.
குற்றாலம்
1
kuṟṟālam,n. prob. ku-tāla.A village in Tinnevelly istrict, sacred to šiva and famous for its waterfall, a sanatorium;
அருவியால் பெயர்பெற்றது ஆரோக்கியத்திற் கேற்றதும் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். குற்றாலத்துறை கூத்தன். (தேவா.1181. உற்றா.).
குற்றாலம்
2
kuṟṟālam,n.A kind of paddy, sown between āṉi and Puraṭṭāci, maturing in five months;
ஆனிழதல் புரட்டாசிவரையுள்ள மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதத்தில் விளையும் ஒருவகை நெல். Loc.
குற்றி
kuṟṟi,n. <>குறு-மை.Stump, stub, stake, block, log;
மரக்கட்டை. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடி, 178).
குற்றிசை
kuṟṟicai,n. <>id. + இசை.1. Short meter in viruttam verse, opp. to neṭṭicai;
குறுகிய சந்தம். (w.)
2. (Puṟap.) Theme describing the impropriety of the hero of a poem in neglecting his wife;
தலைவன் மனைவியைப் புறக்கணித்து அறநெறிபிறழ்ந்தொழுகுவதைக் கூறும் புறத் துடை. (பு. வெ. 12, இருபாற். 17.)
குற்றிமரம்
kuṟṟi-maram,n. <>குற்றி+.Plank placed in a house parallel to a wall as a support for utensils;
கோக்காலிமரம். Tinn.
குற்றியலிகரம்
kuṟṟiyal-ikaram,n. <>குறு-மை+இயல்_.(Gram.) Shortened 'இ' having only half a māttrai as in words
கேண்மியா, நாகியாது, one of cārpeḻuttu; சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம். (தொல். எழுத். 2.)
குற்றியலுகரம்
kuṟṟiyal-ukaram,n. <>id.+ id.+.(Gram.) Shortened 'உ' having only half a māttrai found generally at the end of words, one of cārpeḻuttu;
சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் அரைமாட்டிரையாய்க் குறுகிவரும் உகரம். (தொல். ஏழுத். 2.)
குற்று
-
தல்
kuṟṟu-,5. v. tr.1. To pound;
இடித்தல். (சூடா.)
2. To strike, hit, buttl
தாக்குதல். மூரற் பகுவாயிற் குற்ற நிற்குஞ் சிலவரை (கந்தபு. சிங்கமு. 139).
3. To crush, as lice;
நெரித்தல். (w.)
4. To puncture, prick, pierce
ஊடுருவக் குத்துதல். (W.)
குற்றுகரம்
kuṟṟukaram,n. <>குறு-மை+உகரம்.See குற்றியலுகரம். (தொல். எழுத். 45, உரை.)
.
குற்றுடைவாள்
kuṟṟuṭai-vāḷ,n. <>id. + உடைவாள்.Small poniard;
சுரைகை. குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் பொன்கட்டிற்று. (S.I.I. ii, 185).
குற்றுநெல்
kuṟṟu-nel,n. <>குற்று-+.Cespaid for pounding paddy;
நெற்குற்றுதற்கு ஏற்பட்ட ஒரு பழையவரி. (I.M.P. Cg. 1000.)
குற்றுமி
kuṟṟumi,n. <>id. + உமி.Broken husk;
குற்றி நீக்கிய உமி. (W.)
குற்றுயிர்
kuṟṟuyir,n. <>குறு-மை+உயிர்.1. [T. kuṭṭusuru.] State of being half dead;
குறையுயிர்.
2. Short vowel. See
குற்றெழுத்து. குற்றுயிரளபி னீறாம் (நன். 108).
குற்றுவாய்
kuṟṟuvāy,n.A herring, golden, glossed with purple. See
குத்துவா.
குற்றுழிஞை
kuṟṟuḻiai,n. <>குறு-மை+உழிஞை. (Puṟap.)Theme of a warrior standing on the enemy's fortification all alone and displaying his valour and prowess;
பகைவரது கோட்டைமதிலின்மேல் வீரனொருவன் தனியனாகவே நின்று தன் வீரப்பெருமையைக் கட்டுவதுகூறும் புறத்துறை. (பு. வெ. 6, 13.)
குற்றெழுத்து
kuṟṟeḻuttu,n. <>id.Short vowel;
ஒரு மாட்டிரையுள்ள உயிரெழுத்து. (தொல். எழுத். 3.)
குற்றேல்
kuṟṟēl,n.See குற்றேவல். குலங்கெழு குமரரைக் குற்றே லருளி (பெருங். உஞ்சைக். 32, 15).
.
குற்றேவல்
kuṟṟēval,n. <>குறு-மை+.Menial service;
பணிவிடை. குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது (திவ். திருப்பா. 29).
குற்றொற்று
kuṟṟoṟṟu,n. <>id. + ஒற்று. (Gram.)Consonant suceeding a short vowel;
குற்றேழுத்தின் பின்வரும் மெய்யெழுத்து.
குற
-
த்தல்
kuṟa-,12. v. tr. cf. கற-.To emit, give out;
வெளிப்படுத்துதல். கொந்தக் குழலைக் குறந்த புழுகட்டி (திவ். பெரிழ்யாழ், 2, 5, 8).
குறக்கூத்து
kuṟa-k-kūttu,n. <>குறம்+.Dance of Kuṟavar;
குறவராடுங் கூத்து. (W.)
குறக்கெஞ்சு
kuṟa-k-kecu,n. <>id. +.Cringing attitude of a Kuṟavaṉ;
குற்றஞ்செய்த குறவனது கெஞ்சுஞ்செயல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1044 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறு, short, குற்றி, தொல், எழுத், kuṟa, vowel, gram, குற்று, உகரம், குற்றியலுகரம், kuṟṟālam, kuṟṟu, குற்றாலம், குற்றுடைவாள், திவ், குற்றேவல், prob, சார்பெழுத்துள், cārpeḻuttu, theme, puṟap, குறுகிய, paddy, kuṟṟiyal, tamil, māttrai, having, shortened, kuṟṟi