தமிழ் - தமிழ் அகரமுதலி - அ முதல் - அக்காரம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
அ | தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து ; சுட்டெழுத்து ; விகுதி ( அஃறிணைப் பன்மை , வியங்கோள் , எச்சம் ) ; ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு ; சாரியை ; எட்டு என்னும் எண்ணின் குறி ; எதிர்மறை இடைச்சொல் ; அழகு ; கடவுள் ( சிவன் , திருமால் , பிரமன் ) . |
அஆ | விட்டிசைச்சொல் ; வியப்புக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு . |
அஃகம் | தானியம் ; விலைப்பொருள் ; ஊறுநீர் ; முறைமை . |
அஃகரம் | வெள்ளெருக்கு . |
அஃகல் | காண்க : அஃகுதல் . |
அஃகாமை | குறையாமை ; சுருங்காமை . |
அஃகான் | 'அ ' என்னும் முதல் எழுத்து ( அ - கான் , கான் எழுத்துச்சாரியை ) . |
அஃகு | ஊறுநீர் . |
அஃகுதல் | குறைதல் ; சுருங்குதல் ; நுணுகுதல் ; குவிதல் ; நெருங்குதல் ; வற்றுதல் ; கழிதல் . |
அஃகுல்லி | உக்காரி என்னும் சிற்றுண்டி ; பிட்டு . |
அஃகுள் | காண்க : அக்குள் . |
அஃகேனம் | ஆய்த எழுத்து , மூன்று புள்ளி ( ஃ ) வடிவினது , முள்ளில்லாப் பன்றி . |
அஃதான்று | ( அஃது - அன்று ) அதுவுமன்றி . |
அஃது | அஃறிணை ஒருமைச்சுட்டு ; அது ; அப்படி . |
அஃதை | அகதி , கதியிலி , திக்கற்றவர் , ஆதரவில்லாதவர் . |
அஃபோதம் | நிலாமுகிப்புள் , சகோரம் ; புறா . |
அஃறிணை | ( அல் - திணை ) உயர்திணையல்லாதவை ; பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் ; மக்கள் , தேவர் , நரகர் அல்லாத மற்றப் பொருள்கள் . |
அக்கக்காய் | துண்டுதுண்டாய் . |
அக்கச்சி | அக்காள் , தமக்கை . |
அக்கசாலை | கம்மியர் தொழிற்சாலை , உலோகவேலை செய்யும் களம் , அணிகலன் ஆக்குமிடம் ; கம்பட்டசாலை , நாணயச்சாலை . |
அக்கசாலையர் | கம்மியர் , தட்டார் . |
அக்கட | அவ்விடம் . |
அக்கடா | ஓய்வைக் குறிக்கும் ஓர் இடைச்சொல் ; எதுபற்றியும் கவலையில்லாமை ; வியப்புக்குறிப்பு . |
அக்கடி | அலைவு ; பயணத்தொல்லை . |
அக்கணா | தான்றிமரம் . |
அக்கதம் | காண்க : அட்சதை . |
அக்கதை | காண்க : அட்சதை . |
அக்கந்து | தூற்றுகையில் தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர் . |
அக்கப்பறை | அலைந்து திரிகை . |
அக்கப்பாடு | நிலையழிவு ; குழப்பம் , அல்லோலகல்லோலம் ; பொருள் அழிவு ; மரக்கல அழிவு . |
அக்கப்போர் | அலப்புதல் ; வம்புப்பேச்சு ; கலகம் . |
அக்கம் | தானியம் ; பொன் ; கண் ; உருத்திராக்கம் ; பாம்பு ; கயிறு ; பக்கம் . |
அக்கம்பக்கம் | அண்டைஅயல் ; முன்னும் பின்னும் ; அண்மைச் சூழல் . |
அக்கமணி | உருத்திராக்கமணி . |
அக்கமாலை | உருத்திராக்கமாலை , செபமாலை . |
அக்கவடம் | உருத்திராக்கமாலை , செபமாலை . |
அக்கரகாரம் | மருந்துவேர் , மருந்துப்பூண்டு . |
அக்கராகாரம் | மருந்துவேர் , மருந்துப்பூண்டு . |
அக்கரம் | எழுத்து ; அழியாதது ; மாமரம் ; வெள்ளெருக்கு ; வாய்நோய் . |
அக்கரன் | அழிவில்லாதவன் ; எங்கும் நிறை பொருள் , கடவுள் . |
அக்கரை | எதிர்க்கரை , நீர்நிலையின் மறுகரை . |
அக்கரைச்சீமை | கடல் கடந்த நாடு . |
அக்கரைப்பச்சை | பொய்த்தோற்றம் . |
அக்களிப்பு | அகக்களிப்பு , மனமகிழ்ச்சி . |
அக்கறை | ஈடுபாடு ; கருத்து , கவனம் . |
அக்கன் | தமக்கை ; கருடன் ; பிறவிக்குருடன் ; நாய் . |
அக்கா | தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி . |
அக்காள் | தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி . |
அக்காணி | பருவுடல் . |
அக்காத்தான் | தான்றிமரம் . |
அக்காரடலை | சருக்கரைப் பொங்கல்வகை . |
அக்காரவடிசில் | சருக்கரைப் பொங்கல்வகை . |
அக்காரம் | சருக்கரை ; வெல்லம் ; கரும்பு ; சீலை ; மாமரம் . |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அ முதல் - அக்காரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், எழுத்து, காண்க, தமக்கை, என்னும், செபமாலை, உருத்திராக்கமாலை, அழிவு, மருந்துவேர், பொருள், மருந்துப்பூண்டு, சருக்கரைப், பொங்கல்வகை, மூதேவி, முன்பிறந்தாள், மாமரம், அட்சதை, கம்மியர், வெள்ளெருக்கு, இடைச்சொல், ஊறுநீர், தானியம், குறிப்பு, அஃகுதல், கான், கடவுள், அக்காள், அஃறிணை, அஃது, தான்றிமரம்