விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
201. மறிவினையின் வகைகள் யாவை?
1. இயற்கை மறிவினை.
2. செயற்கை மறிவினை.
202. செயற்கை மறிவினை என்றால் என்ன?
செயற்கைத் துண்டலால் உண்டாவது. பெருமூளைப் புறணியில் தோன்றுவது. வேறு பெயர் கற்றல் மறிவினை.
203. செய்கை மறிவினையில் ஆராய்ச்சி செய்து புகழ் பெற்றவர் யார்?
உருசிய உடல் நூல் அறிஞர் பாவ்லவ்.
204. கட்டுப்படுத்தல் என்றால் என்ன?
இயற்கைத் தொடர்பற்ற துண்டலுடன் ஒரு துலங்கலைப் பொருத்துமாறு செய்யும் முறை.
205. இதை நிறுவியவர் யார்? இதன் சிறப்பென்ன?
இதை நிறுவியவர் நோபல் பரிசுபெற்ற பாவ்லவ். கற்றலில் பயன்படுவது. இதில் கற்றல் மறிவினை ஏற்படுவது.
206. இந்த ஆய்வுக்கு இவர் பயன்படுத்திய இரு பொருள்கள் யாவை?
நாய், மணி
207. இதன் வகைகள் யாவை?
1. இடைநிலைக் கட்டுப்படுத்தல்
2. இயக்கக் கட்டுப்படுத்தல்
3. சமூகக் கட்டுப்படுத்தல்.
208. முழங்கால் மறிவினை என்றால் என்ன?
முழங்கால் உதறல். முழங்கால் பந்தகம் தட்டப்படுவதால், கால் முன்தள்ளப்படும்.
9. சுரப்பி மண்டலம்
209. சுரப்பி என்றால் என்ன?
சுரக்கும் உறுப்பு. இது சுரக்கும் நீர் சுரப்பு எனப்படும்.
210. சுரப்பியின் வகைகள் யாவை?
1. நாளமுள்ள சுரப்பிகள் - குழாய் மூலம் தங்கள் சுரப்புகளைச் செலுத்துபவை. எ டு உமிழ் நீர்ச்சுரப்பி.
2. நாளமில்லாச் சுரப்பிகள் - தங்கள் சுரப்புகளை நேரிடையாகக் குருதியில் சேர்ப்பவை. எ-டு தொண்டைச் சுரப்பி, மூளையடிச் சுரப்பி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மறிவினை, கட்டுப்படுத்தல், சுரப்பி, என்ன, என்றால், யாவை, முழங்கால், வகைகள்