விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

191. அச்சிழை என்றால் என்ன?
உயிரணுவின் உடலிலிருந்து துடிப்புகளை எடுத்துச் செல்லும் நரம்பிழை.
192. கிளை நரம்பிழை என்றால் என்ன?
ஒரு நரம்பணுவிலிருந்து கிளைக்கும் இழை. இது கண்ணறை நோக்கித் துடிப்புகளை எடுத்துச் செல்லும்.
193. தகவுறுநரம்பணு என்றால் என்ன?
நரம்பு மண்டலத்திலுள்ள நரம்பணு. இதன் மூலம் துடிப்புகள் உணர் நரம்புக் கண்ணறையிலிருந்து செய்தி நரம்புக் கண்ணறைக்குச் செல்கின்றன.
194. விலகமைநரம்பு என்றால் என்ன?
இது 6 ஆம் மூளை நரம்பு. விழிக்கோளம் சுழலப் பயன்படுவது.
195. இகல்நரம்பு என்றால் என்ன?
உட்செல் நரம்பு. உணர்பகுதிகளிலிருந்து உணர்ச்சியை மைய நரம்பு மண்டலத்திற்கு எடுத்துச் செல்வது.
196. அகல்நரம்பு என்றால் என்ன?
வெளிச்செல் நரம்பு. நரம்பு மண்டலத்திலிருந்து புறப்பகுதிக்குத் துண்டலைக் கொண்டு செல்வது.
197. முகர்நரம்பு யாது?
முதல் மூளை நரம்பு. மணம் நுகரப் பயன்படுகிறது.
198. அடிநரம்பு முடிச்சுகள் என்றால் என்ன?
மூளைநரம்புத்திசுவின் சிறு திரள்கள். கட்டுப்பாட்டிற் குரிய இயக்கங்களை ஒழுங்குப்படுத்துபவை.
199. நரம்பு முடிச்சு என்றால் என்ன?
நரம்புத் திரட்சி. மைய நரம்பு மண்டலத்திற்கு வெளியில் இருப்பது. இம் மண்டலத்தின் ஒரு பகுதி.
200. மறிவினை (அனிச்சைச் செயல்) என்றால் என்ன?
துண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் நிலை. மூளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எ-டு உமிழ்நீர் சுரத்தல். இயற்கை மறிவினை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நரம்பு, என்ன, என்றால், எடுத்துச்