விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
![Body Systems](images/body_systems.jpg)
181. முகுளத்தின் சிறப்பென்ன?
அடிமூளைப்பகுதி. இரைப்பை, நுரையீரல்கள் முதலிய உள்ளுறுப்புகளின் வேலைகளைக் கட்டுப்படுத்துவது.
182. தண்டுவடம் என்பது யாது?
முதுகெலும்பில் செல்லும் நாண். இதுவே அனிச்சைச் செயலின் நிலைக்களம்.
183. முப்படலங்கள் என்பவை யாவை?
மூளையையும் தண்டுவடத்தையும் முடியுள்ள மூன்று படலங்கள்.
1. சிலந்திப் படலம்.
2. வன்படலம்.
3. இளம்படலம்.
184. முப்படல அழற்சி என்றால் என்ன?
முப்படல வீக்கம். நினைவுக் குறைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள்.
185. இயக்குவாய் என்றால் என்ன?
தசை, சுரப்பி அல்லது உறுப்பில் முடியும் இயக்க அல்லது சுரப்பு நரம்பு முனை.
186. நரம்பு என்றால் என்ன?
நாரிழையாகும். இது மூளை நரம்புகளையும், தாவர நரம்புகளையும் குறிக்கும்.
187. நரம்புத் துடிப்பு என்றால் என்ன?
நரமபணுக்கள் வழியாகச் செல்லும் குறிபாடு.
188. நரம்பிழை (நியுரான்) என்றால் என்ன?
இது நரம்பணுவும் அதன் கிளைகளும் ஆகும். நரம்புத் துடிப்புகளைக் கடத்துவது. இது நரம்பு மண்டலத்தின் அமைப்பலகும் வேலையலகும் ஆகும்.
189. நரம்பிழையின் முக்கியப் பகுதிகள் யாவை?
1. உடல்
2. அச்சிழை. இது நரம்பன்று. உடலிலிருந்து துடிப்புகளை வெளியே எடுத்துச் செல்வது.
3. கிளை. இது நரம்பணு உடலுக்குத் துடிப்புக்களைக் கொண்டு செல்பவை.
190. நரம்பணுக்களின் வகைகள் யாவை?
1. உணர்நரம்பணுக்கள் - இவை துடிப்புகளின் புலன் உறுப்புகளிலிருந்து (தோல்) மைய நரம்பு மண்டலத் திற்குக் கொண்டு செல்பவை.
2. இயக்க நரம்பணுக்கள்.- மைய நரம்பு மண்டலத்திலிருந்து துடிப்புகளைத் தசைகளுக்கு எடுத்துச் செல்பவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நரம்பு, என்ன, என்றால், செல்பவை, யாவை