விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
171. மூளையின் பகுதிகள் யாவை?
பெருமூளை, இடைப்படுமூளை, சிறுமூளை, முகுளம், தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. உடற்செயல்களைக் கட்டுப்படுத்துவது, ஒருமுகப்படுத்துவது.
172. மூளைச்சாக்காடு என்றால் என்ன?
மூளையின் உயிர்ப்பான செயல்கள் நிலையாக ஒடுங்கும். இந்நிலையிலேயே உறுப்பு மாற்றத்திற்குரிய உறுப்புகள் நீக்கப்படும்.
173. நடு மூளை என்றால் என்ன?
மூளையின் ஒரு பிரிவு. முன் மூளையையும் பின் மூளையையும் இணைப்பது.
174. சிறுமூளை என்றால் என்ன?
பின்மூளையின் பெரும் பகுதி. இயக்குத்தசைக்கிடையே ஒத்துழைப்பை உண்டாக்கி நடத்தல், ஒடுதல் முதலிய இயக்கு வேலைகள் நடைபெற மூளைக்கு உதவுவது. உடலின் நேர்த்தோற்றத்திற்கு காரணம் இதுவே.
175. கள்ளுண்டவன் தள்ளாடுவதேன்?
சிறு மூளை பாதிக்கப்படுவதால், அதன் கட்டுப்பாட்டிலுள்ள தசைகளில் ஒருமித்த இயக்கம் குலைகிறது.
176. பெருமூளைப் புறணி என்றால் என்ன?
பெருமூளைப் பகுதி. விருப்பத்திற்குட்பட்ட இயக்கங்களையும், பார்வை, கேட்டல், தொடுதல் முதலிய உறுத்துணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது.
177. மூளைத் தண்டுவடப் பாய்மத்தின் நன்மை யாது?
மைய நரம்பு மண்டலத்தைத் தீங்கிலிருந்து காப்பது.
178. பெருமூளையின் சிறப்பு என்ன?
இது மூளையின் சிறந்த பகுதி. இதன் வேலைகள்
1. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துதல்.
2. செயற்கை மறிவினையைக் கட்டுப்படுத்துவது.
3. அறிவுக் கூர்மைக்கும் நினைவற்றலுக்குக் காரணம்.
179. அறிவுக் கூர்மை மிகுதியாக இருக்க மூளை எப்படி இருக்க வேண்டும்?
மடிப்புகள் அதிகமுள்ளதாக இருக்க வேண்டும்.
180. யானையின் மூளை அதன் உடல் பருமனுக்கேற்பப் பெரிதாக உள்ளதா?
இல்லை. சிறியதாகவே உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, மூளையின், மூளை, என்றால், இருக்க, வேலைகள், பகுதி, கட்டுப்படுத்துவது