விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

131. மடக்குதசை என்றால் என்ன?
முன்னங்காலை மடக்கப் பயன்படும் இருதலைத்தசை.
132. கெண்டைக்கால் தசை என்றால் என்ன?
இது ஒர் இயக்குத்தசை இதிலிருந்து குதிகாலோடு சேரும் தசைநாண் அச்சில்லஸ் தசைநாண் எனப்படும். இத்தசை நடத்தல், ஒடுதல், குதித்தல், நிற்றல் முதலிய இயக்கங்களுக்கு முதன்மையானது.
133. நாத்தலைத்தசை என்பது யாது?
முதுகு எலும்பு விலங்குகளின் தொடைத்தசை. கால்வரை நீளுவது.
134. தசைப்பிடிப்பு என்றால் என்ன?
தசையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வலிதரும் சுருக்கம்.உடற்பயிற்சியின் பொழுது ஏற்படுவது. தசையை நீட்டி இதைப் போக்கலாம்.
135. குறுக்குத்தட்டம் (உதரவிதானம்) என்றால் என்ன?
பாலூட்டிகளின் மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் மிகப்பெரிய தசை உடலிலுள்ள தசைகளில் மிகப்பெரியது.
136. எதிர்வினைப்பாடு என்றால் என்ன?
இரு தசைகள் ஒன்றுக்கு மற்றொன்று எதிர்மமாறாகச் செயற்படுதல்.இதனால் உயிருக்கு நன்மையே. காட்டாக, இருதலைதசையும் முத்தலைதசையும் ஒன்றுக்கு மற்றொன்று எதிராக இயங்குவதால் முன் கையை நீட்டி மடக்க முடிகிறது.
137. பந்தகம் என்றால் என்ன?
மூட்டில் எலும்புகளை இணைக்கும் கயிறுகள்.
138. நாண் என்றால் என்ன?
தசையை எலும்போடு இணைக்கும் கயிறு.
139. இறப்பு என்பது என்ன?
திசுக்களில் வளர்விதை மாற்றம் அறவே ஒடுங்குவதால் ஏற்படும் நிலை.
140. இறப்பு விறைப்பு என்றால் என்ன?
மனிதன் இறந்த பின் தசைகள் விறைத்துக் கடினமாதலே இறப்பு விறைப்பு. இது நிகழ்ந்தபின் கைகால்களை மடக்க இயலாது. எனவேதான், மனிதன் இறந்த பின் கைக்கட்டு கால்கட்டு போடப்படுகின்றன. தசை நார்களில் அடினோசைன் முப்பாஸ்பேட்டு படிவதால் இந்நிலை ஏற்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், இறப்பு