விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
121. தசை மண்டலம் என்றால் என்ன?
தசைகளாலான தொகுதி. எலும்புகளைப் பிணைத்து உடலுக்கு இயக்கத்தையும் அழகையும் தருவது.
122. தசை என்பது யாது?
ஒர் இணைப்புத்திசு. சுருங்குவது இதன் தனிப் பண்பு.
123. இதன் வகைகள் யாவை?
1. வரித்தசை, இயக்குத்தசை - முத்தலை, இருத்தலைதசை
2. வரியில்லாத்தசை, இயங்குதசை – உள்ளுறுப்புத்தசை, இதயத்தசை
124. சுருக்குத்தசைகள் என்பவை யாவை? இவை எங்குள்ளன? எவ்வாறு வேலை செய்கின்றன?
இவை ஒருவகை இயங்குதசைகளே. இவற்றில் தசை நார்கள் வட்டமாகவும்,குறுக்காகவும் அமைந்துள்ளன. இரைப்பையின் அடிப்பகுதி, கழிவாய், கண்மணி. குறுக்குநார்கள் சுருங்கும்பொழுது இவற்றின் துளை விரியும். வட்டநார்கள் சுருங்கும்பொழுது துளை சுருங்கும். காட்டாகக் கண்மணி சுருங்கி விரிவதைக் கருவிழிப் படலத்தசை கட்டுப்படுத்துகிறது.
125. தசையின் வேலைகள் யாவை?
உடல் இயக்கம், நிலைப்பு, உடல் உருவம் ஆகியவற்றிற்கு இவையே காரணமாகும்.
126. நம் உடலிலுள்ள தசைகள் எத்தனை?
தசைகள் 400.
127. தசை நலிவு என்றால் என்ன?
வைட்டமின் E குறைவதால் தசையின் இயக்கம் குறைதல்.
128. இரு தலைத் தசை என்றால் என்ன?
ஒர் இயக்குத்தசை, நடுவில் பருத்தும் முனைகளில் குறுகியும் இருக்கும். மேற்கை எலும்பில் உள்ளது. இது சுருங்கும்பொழுது முன்கை மடங்குகிறது.
129. இதற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?
இரு தசைநாண் உள்ளதால் இப்பெயர்.
130. நீட்டுதசை (விரிதசை) என்றால் என்ன?
முன் கையை நீட்ட உதவும் முத்தலைத்தசை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், சுருங்கும்பொழுது, யாவை