விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
111. மூட்டின் இரண்டு வகைகள் யாவை?
1. அசையா மூட்டு - தலைஎலும்புக் கூடு.
2. அசையும் மூட்டு - கீல் மூட்டு.
112. அசையும் மூட்டின் வகைகள் யாவை?
1. பந்து கிண்ணமூட்டு - தோள் இடுப்பு மூட்டுகள் - கை கால் பகுதிகள்
2. முளை மூட்டு - முழங்கை எலும்பில் ஆர எலும்பு சுழலுதல்.
3. வழுக்குமுட்டு - மணிக்கட்டு, கணைக்கால்.
4. கீல் மூட்டு - முழங்கை, முழங்கால், விரல் முட்டுகள்.
113. எம்மூட்டு அதிக அசைவையும் எந்த மூட்டு குறைந்த அசைவையும் கொடுக்கும்?
அதிக அசைவு பத்து கிண்ணமூட்டு, குறைந்த அசைவு வழுக்கு மூட்டு.
114. மூட்டின் சிறப்பென்ன?
கை கால்களைப் பல திசைகளிலும் சுழற்ற முடிகிறது. இதனால் உடலுக்கு எளிதாக இயக்கம் கிடைக்கிறது.
115. முழங்காற்சில் என்றால் என்ன?
முழங்கால் மூட்டின் முன்தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின் காலை நீட்ட உதவுவது.
116. எலும்புகளில் மிகப் பெரியது எது?
தொடை எலும்பு.
117. எலும்புகளில் மிகச் சிறியவை எவை?
செவிச் சிற்றெலும்புகள்
5. தசை மண்டலம்
118. தசை இயக்க இதயம் என்றால் என்ன?
நேரிடையாகத் தசைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் இதயம். எ-டு எல்லா முதுகு எலும்பு விலங்குகளுக்கும் உண்டு.
119. தசை இயல் என்றால என்ன?
தசைகளை ஆராயுந்துறை.
120. தசையின் தனிப்பண்புகள் யாவை?
1. சுருங்குதல்
2. கடத்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மூட்டு, எலும்பு, மூட்டின், என்ன, யாவை