விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
101. சொத்தை என்றால் என்ன?
எலும்புச் சிதைவு. முதுகெலும்புச் சிதைவு. இது பற்சொத்தையையும் குறிக்கும்.
102. எலும்புக்குழி என்றால் என்ன?
இடுப்பு எலும்பின் இருப்புறத்திலும் தொடை எலும்பின் தலை சுழலுவதற்கேற்றவாறு உள்ள பகுதி.
103. ஏவர்சியன் குழாய்கள் என்றால் என்ன?
இவை ஒன்றோடு மற்றொன்று இணைந்தவை. நீள் வாட்டில் அடர் எலும்பு வழியாகச் செல்பவை. இவற்றிற்குக் குருதிக் குழாய்களும் நரம்புகளும் செல்லும்.
104. முதுகெலும்பு என்றால் என்ன?
முள் எலும்புகளாலான தொடர். மனித முதுகெலும்பில் 33 முள் எலும்புகள் உள்ளன.
105. முகுகெலும்பிலுள்ள முள்ளெலும்புகள் 33 யாவை?
1. கழுத்து முள் எலும்புகள் 7.
2. மார்பு முள் எலும்புகள் 12.
3. இடுப்பு முள் எலும்புகள் 5.
4. திரிக முள் எலும்புகள் 5.
5. வால் எலும்புகள் 4.
106. முதுகெலும்பின் சிறப்பு யாது?
இது உடலுக்கு நேர்த்தோற்றத்தையும் அழகையும் அளிப்பது. இதிலுள்ள வளைவே அழகிற்குக் காரணம்.
107. பிடர் அச்சு என்றால் என்ன?
முதுகெலும்பின் இரண்டாம் முள்ளெலும்பு. பிடர் எலும்பைத்தாங்குவதன் மூலம் தலையைத் தாங்குவது.
108. பிடர் எலும்பு என்றால் என்ன?
முதுகெலும்பின் முதல் எலும்பு. தலை எலும்புக் கூட்டைத் தாங்குவது.
109. மார்புக் கூட்டிலுள்ள எலும்புகள் எத்தனை?
25. விலானலும்புகள் 12+12=24. மார்பெலும்பு 1.
110. மூட்டு என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட எலும்புகள் சேருமிடம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எலும்புகள், என்ன, என்றால், முள், பிடர், முதுகெலும்பின், எலும்பு