இயற்பியல் :: நிலையியல் - பக்கம் - 6

51. வினாடி ஊசல் என்றால் என்ன?
2 வினாடி அலைவு நேரமும் 100 செமீ. நீளமுமுள்ள ஊசல்.
52. ஈடு செய்த ஊசல் என்றால் என்ன?
சூழ்நிலையில் வெப்பம் ஏறினாலும் இறங்கினாலும் அதன் நீளம் மாறா ஊசல்.
53. தற்கால ஊசல்கள் எவ்வாறு ஈடு செய்யப்பட்டுள்ளன?
பொதுவான வெப்பநிலையில் நீள் பெருக்கம் அடையாத இன்வார் என்னும் உலோகக் கலவையால் செய்யப்படுகின்றன.
54. தனி ஊசலின் நீளத்திற்கும் அலைவு நேரத்திற்குமுள்ள தொடர்பு யாது?
தனி ஊசலின் நீளமும் அலைவு நேர வர்க்கமும் ஒன்றுக்கொன்று நேர் வீதத்திலிருக்கும் அல்லது lt²= மாறா எண்.
55. நீர் இறைக்கும் உருளை எவ்வகை சார்ந்தது? அதன் எந்திர இலாபம் என்ன?
முதல் வகை. எந்திர இலாபம் 1.
56. காற்று எக்கியைப் புனைந்தவர் யார்?
1645 இல் ஜெர்மன் இயற்பியலார் ஆட்டோ வான் கிரிக்.
57. தனி ஊசலை முதன்முதலில் ஆராய்ந்தவர் யார்? எவ்வாறு?
கலிலியோ தம் 17ஆம் வயதில் பைசா நகர ஆலயத்தில் ஆடிய ஒரு விளக்கின் இயக்கத்தைத் தம்முடைய நாடித்துடிப்பைக் கொண்டு அளந்தார்.
58. இலேமியின் தேற்றம் என்றால் என்ன?
ஒரு புள்ளியில் செயற்படும் மூன்று விசைகள் சமநிலையில் இருந்தால், ஒவ்வொரு விசையும் ஏனைய இரு விசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் சைன் மதிப்பிற்கு நேர் வீதத்திலிருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலையியல் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, ஊசல், அலைவு, என்றால்