இயற்பியல் :: நிலையியல் - பக்கம் - 5

41. விரிவுமானி என்றால் என்ன?
ஒரு பொருளில் தகைவை ஏற்படுத்தி அது உண்டாக்கும் திரிபை அளக்கப் பயன்படுங் கருவி.
42. தனி ஊசல் என்றால் என்ன?
முறுக்கற்ற மெல்லிய நூலில் பளுவாகத் தொங்கவிடப் பட்டிருக்கும் குண்டு.
43. தொங்குபுள்ளி என்றால் என்ன?
ஊசல் தொங்கவிடப்படும் புள்ளி. இது தக்கைக்கு அடியில் உள்ளது.
44. அலைவுப்புள்ளி என்றால் என்ன?
ஊசல் குண்டின் மையம்.
45. ஊசலின் நீளம் என்றால் என்ன?
தொங்குபுள்ளி, அலைவுப் புள்ளி ஆகிய இரண்டிற்கு மிடையிலுள்ள தொலைவு.
46. அலைவு என்றால் என்ன?
ஊசல் ஒரு திரும்பு புள்ளியிலிருந்து எதிர் திரும்பு புள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும் வரை ஏற்படுகின்ற அசைவு.
47. ஊசலின் அலைவு நேரம் என்றால் என்ன?
ஊசல் ஒர் அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம்.
48. அதிர்வு என்றால் என்ன?
அலைவில் பாதி அதிர்வு.
49. ஊசலின் சம அலைவு நேரம் என்றால் என்ன?
வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது.
50. இந்த அடிப்படை எதில் உள்ளது?
ஊசல் கடிகாரங்களில் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலையியல் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஊசல், அலைவு, ஊசலின், நேரம், உள்ளது, திரும்பு