இயற்பியல் :: நிலையியல் - பக்கம் - 2
11. ஈர்ப்பு அல்லது ஈர்ப்பு விசை என்றால் என்ன?
ஒரு பொருள் மற்றொரு பொருள்மீது ஏற்படுத்தும் கவர்ச்சியினால் பொருளில் உண்டாகும் விசை. இது பொருள்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும்.
12. எடைமிகுநிலை என்றால் என்ன?
முடுக்கத்தால் ஏற்படுவது இது ஜி எனப்படும். ஏவுகணையில் செல்லும் வானவெளி வீரர் இதை உணர்வர்.
13. எடையின்மை நிலை என்றல் என்ன?
சுழி ஈர்ப்பு நிலை. வான வெளியில் வான வெளி வீரர்கள் உணர்வது, உட்படுவது.
14. ஈர்ப்புப்புள்ளி என்றால் என்ன?
ஒரு பொருளின் எடை முழுதும் தாக்கும் புள்ளி. பொருளுக்குத் தகுந்தவாறு இது மாறுபடும்.
15. சில பொருள்களின் புவி ஈர்ப்பு புள்ளியைக் கூறு.
வட்டம் - மையப் புள்ளி, உருளை - மைய அச்சின் நடுப்புள்ளி. கோளம் - அதன் மையம். இணைகரம், செவ்வகம் - மூலைவிட்டங்கள் சேருமிடம்.
16. ஈர்ப்பு மாறிலி என்றால் என்ன?
நியூட்டன் ஈர்ப்பு விதி மாறிலி.
17. தனி எந்திரம் என்றால் என்ன?
ஒரு கருவியில் ஒரிடத்தில் செயற்படும் விசை வேறோரிடத்தில் அளவும் திசையும் மாறிச் செயற் படுமானால், அது தனி எந்திரம்.
18. தனி எந்திரத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.
நெம்புகோல், கப்பி, சாய்தளம்.
19. எந்திர இலாபம் என்றால் என்ன?
எடைக்கும் (பளு) திறனுக்கும் உள்ள வீதம்.
எடைதிறன் = WP
20. நெம்புகோல் என்றால் என்ன?
நிலைத்த ஒரு புள்ளியைத் தாங்கு புள்ளியாகக் கொண்டு சுழலும் உறுதியான கோல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலையியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஈர்ப்பு, விசை