இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 7
61. இராமன் விளைவு என்றால் என்ன?
ஒர் ஊடகத்தின் வழியாக ஒற்றை நிற ஒளி செல்லும் பொழுது, அது தன் முதல் அலை நீளங்களாகவும் பெரிய அலை நீளங்களாகவும் (இராமன் வரிகள்) சிதறுதல்.
62. இராமன் விளைவின் பயன்கள் யாவை?
அடிப்படை ஆராய்ச்சியில் உலகெங்கும் பல துறைகளில் பயன்படுவது. காட்டாக, ஒரு நீர்மத்தின் மூலக்கூறு ஆற்றல் அளவை ஆராயப் பயன்படுவது.
63. இராமன் எந்த ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்? அதன் சிறப்பு என்ன?
1930இல் பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி. அவர் பங்களிப்பும் அனைத்துலகத் தரத்திலுள்ள முதன்மையான பங்களிப்பு.
64. இந்திய அறிவியலின் தந்தை யார்?
சர். சி. வி. இராமன்.
65. நிறமானி என்றால் என்ன?
நிறங்களின் செறிவைப் பகுக்குங் கருவி.
66. மாறுநிலைக் கோணம் என்றால் என்ன?
அடர்மிகு ஊடகத்தில் எப்படுகோணத்திற்குச் சரியாகக் காற்றில் விலகுகோணம் 90o ஆகவிருக்கிறதோ அப்படு கோணம் அந்த ஊடகத்தின் மாறுநிலைக் கோணம். வைரத்தின் மாறுநிலைக் கோணம் 2.45o
67. முழு அகப் பிரதிபலித்தல் என்றால் என்ன?
படுகோணம் மாறுதானக்கோணத்தை விடப் பெரிதாக இருக்கும் பொழுது உண்டாகும் எதிரொளிப்பு.
68. இப்பிரதிபலிப்பு ஏற்பட நிபந்தனைகள் யாவை?
1. முதலில் ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்தின் வழியாகச் செல்ல வேண்டும்.
2. அதன் படுகோணம் அடர்மிகு ஊடகத்தின் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாக இருக்க வேண்டும்.
69. இப்பிரதிபலிப்பினால் உண்டாகும் வாழ்க்கைப் பயன்கள் யாவை?
கானல் காட்சி ஏற்படுகிறது. வைரம் மின்னுகிறது.
70. கானல் காட்சி என்றால் என்ன?
காற்றடுக்கு அடர்த்தி வேறுபாட்டினால் ஒளிவிலகல் வழி முழு அகப் பிரதிபலிப்பு மூலம் நடைபெறும் நிகழ்ச்சி. வெயில் காலத்தில் மணற்பரப்பைப் பார்க்கும் பொழுதும் தார் சாலையைப் பார்க்கும் பொழுதும் நீர் ஒடுவது போல் காட்சியளிக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 7 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, இராமன், என்றால், கோணம், ஊடகத்தின், அடர்மிகு, யாவை, மாறுநிலைக்