இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 6
51. சாயல் நிறம் என்றால் என்ன?
கலப்பு நிறத்தோடு வெண்ணொளியைச் சேர்க்க அது நிறைவுறா நிறமாகும். இதுவே சாயல் நிறம்.
52. முதன்மை நிறங்கள் யாவை?
பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய மூன்றும்.
53. முதன்மை நிறங்களின் சிறப்பு யாது?
இம்மூன்றையுங் கலந்து எந்நிறத்தையும் உண்டாக்கலாம்.
54. ஒரு பொருள் வெள்ளையாகத் தெரியக் காரணம் என்ன?
அது ஏழு நிறங்களையும் வெளிவிடுகிறது.
55. ஒரு பொருள் கறுப்பாகத் தெரியக் காரணம் என்ன?
அது ஏழு நிறங்களையும் உறிஞ்சிவிடுகிறது.
56. ஒரு பொருள் குறிப்பிட்ட நிறத்தில் தெரியக் காரணம் என்ன?
ஒரு பொருள் சிவப்பு நிறத்தை வெளியிடும் பொழுது அது சிவப்பாகத் தெரியும். இது ஏனைய நிறங்களுக்கும் பொருந்தும்.
57. நிரப்பு நிறங்கள் என்றால் என்ன?
இரு நிறங்களைச் சேர்த்து, வெள்ளை உணர்ச்சியை உண்டாக்குவதற்கு நிரப்பு நிறங்கள் என்று பெயர்.
58. நிறக்குருடு என்றால் என்ன?
சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலை. குறிப்பாகச் சிவப்பு, பச்சை நிறங்களைப் பிரித்தறிய முடியாத நிலை.
59. நிறப்பார்வை என்றால் என்ன?
வேறுபட்ட நிறங்களைப் பிரித்தறியும் கண்ணின் திறன்.
60. ஆக்பா நிறம் என்றால் என்ன?
மூவண்ணத்தைப் பயன்படுத்தும் நிறப் புகைப்படக்கலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பொருள், காரணம், நிறங்களைப், தெரியக், சிவப்பு, நிறங்கள், நிறம்