இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 5

41. குவிவில்லையின் பயன்கள் யாவை?
இது நுண்ணோக்கி, திரைப்பட வீழ்த்தி முக்குக் கண்ணாடி முதலியவற்றில் பயன்படுவது.
42. குவியத் தொலைவு என்றால் என்ன?
வில்லையின் மையப் புள்ளிக்கும் முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு.
43. முக்கிய அச்சு என்றால் என்ன?
வில்லையின் வளைவு மையங்களைக் சேர்க்கும் நேர்க் கோடு.
44. முக்கிய குவியம் என்றால் என்ன?
முக்கிய அச்சுக்கு இணையாக வரும் ஒளிக் கதிர்கள் வில்லையில் பட்டு விலகலடைந்து மறுபக்கத்தில் அவை குவியும் புள்ளி.
45. ஒளிமையம் என்றால் என்ன?
முக்கிய அச்சும் வில்லையின் அச்சும் சேரும் மையம்.
46. பிம்பம் என்றால் என்ன?
ஒரு பொருளின் மாற்றுரு பிம்பமாகும். ஒளி விலகலாலும் பிரதிபலித்தலாலும் ஏற்படுவது.
47. பிம்பம் எத்தனை வகைப்படும்?
1. உண்மை பிம்பம். திரையில் பிடிக்கலாம். திரைப்படம். 2. மாய பிம்பம். திரையில் பிடிக்க முடியாது. நிலைக் கண்ணாடியில் விழுவது.
48. நிறம் என்றால் என்ன?
பார்வைக் கதிர்வீச்சின் அலை நீளத் தொடர்பாகக் கண் - மூளை மண்டலத்தில் ஏற்படும் உடலியல் உணர்ச்சி.
49. நிற வகைகள் யாவை?
1. கலப்பு நிறங்கள்.
2. முதன்மை நிறங்கள்.
3. சாயல் நிறம்.
50. கலப்பு நிறங்கள் என்றால் என்ன?
வேறுபட்ட அலை நீளங்களைக் கொண்ட ஒற்றை நிறக் கதிர்வீச்சு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், முக்கிய, பிம்பம், நிறங்கள், வில்லையின்