இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 4

31. வளைவு மையம் என்றால் என்ன?
கோள ஆடியின் கோளத்தின் மையம்.
32. குவியத் தொலைவு என்றால் என்ன?
ஆடி மையத்திற்கும் முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு. இது வளைவு ஆரத்தில் பாதி.
33. ஆடிமையம் என்றால் என்ன?
கோள ஆடியின் பிரதிபலிக்கும் பரப்பின் மையம்.
34. முக்கிய குவியம் என்றால் என்ன?
முக்கிய அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் அடியில் பட்டுப் பிரதிபலித்து, அவை எல்லாம் குவியும் புள்ளி.
35. முக்கிய அச்சு என்றால் என்ன?
ஆடி மையத்தையும் வளைவுமையத்தையும் சேர்க்கும் நேர்க்கோடு.
36. வளைவு ஆரம் என்றால் என்ன?
வளைவு மையத்திற்கும் ஆடிமையத்திற்கும் இடையி லுள்ள தொலைவு.
37. கண்ணாடி வில்லை என்றால் என்ன?
ஒளி ஊடுருவக் கூடிய துண்டு.
38. கண்ணாடி வில்லையின் வகைகள் யாவை?
குழிவில்லை, குவிவில்லை.
39. குழிவில்லை என்றால் என்ன?
ஒரங்களில் தடித்தும் நடுவில் மெலிந்தும் இருக்கும். மாயபிம்பம் உண்டாக்கும்.
40. குவிவில்லை என்றால் என்ன?
இது நடுவில் தடித்தும் ஒரங்களில் மெலிந்தும் இருக்கும். பொதுவாக உண்மை பிம்பங்களை உண்டாக்குவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், வளைவு, முக்கிய, மையம், தொலைவு