இயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 3
21. ஊடகம் என்றால் என்ன?
ஒளி ஊடுருவிச் செல்லும் பொருள். எ-டு செவ்வகம்,
முப்பட்டகம்.
22. ஒளி ஊடுருவாப் பொருள்கள் யாவை?
மரம், உலோகம்.
23. ஒளி கசியும் பொருள்கள் யாவை?
கண்ணாடித்தாள், தேய்த்த கண்ணாடி.
24. ஆடி என்றால் என்ன?
ஒளி பிரதிபலிக்கும் பரப்பு ஆடியாகும்.
25. ஆடியின் வகைகள் யாவை?
சமதள ஆடி, கோள ஆடி.
26. சமதள ஆடி என்றால் என்ன?
பிரதிபலிக்கும் பரப்பு சமமாக இருக்கும். எ-டு நிலைக் கண்ணாடி.
27. கோள ஆடி என்றால் என்ன?
பிரதிபலிக்கும் பரப்பு கோளமாக இருத்தல்.
28. கோள ஆடியின் வகைகள் யாவை?
குழியாடி, குவியாடி (மாய பிம்பம்).
29. குழியாடி என்றால் என்ன?
பிரதிபலிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இது பொதுவாக உண்மை பிம்பத்தை உண்டாக்கும்.
30. குழியாடியின் பயன்கள் யாவை?
நுண்ணோக்கியிலும், தொண்டையை ஆய்ந்து பார்ப்பதிலும் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், யாவை, என்ன, பரப்பு, பிரதிபலிக்கும்