இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 13

121. மின்விளக்கில் நடைபெறும் ஆற்றல் மாற்றம் என்ன?
வெப்ப ஆற்றல் ஒளியாற்றலாகிறது.
122. மின்விளக்குகளின் வகைகள் யாவை?
1. இழைவிளக்குகள் - குமிழ் விளக்குகள்.
2. இழையிலா விளக்குகள் - ஆவி விளக்கு.
123. ஆவி விளக்குகளின் பல வகைகள் யாவை?
படிகக்கல் அயோடின் விளக்கு, ஒளிர்குழாய் விளக்கு, பாதரச ஆவிவிளக்கு கரிப்பிறை விளக்கு.
124. ஆவிவிளக்குகளின் நன்மைகள் யாவை?
1. குறைந்த மின்செலவு
2. கருநிழல் ஏற்படாமை.
3. குளிர்ச்சி.
125. மின்காந்தக் குறுக்கீடு என்றால் என்ன?
இது மின்னணுக் கருவியமைப்புகள் உமிழும் காந்த அலைவுகளால் உண்டாவது.
126. இதன் தீமைகள் யாவை?
தொலைக்காட்சி உருப்பதிவு இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது. தற்பொழுது உலகெங்கும் பார்வைக்குப் புலப்படா அச்சுறுத்தலாக உள்ளது.
127. நெகிழ்செலுத்தும் அமைப்புகள் என்றால் என்ன?
திண்மநிலைக் கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்க வல்லவை.
128. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை?
1. மிகுவிரைவு.
2. துல்லியம்.
3. நம்புமை.
129. பாரடே விளைவு என்றால் என்ன?
காந்தப் புலத்திற்கு உடன்பட்ட ஒரே பண்புள்ள ஊடகத்தின் வழியே, மின்காந்தக் கதிர்வீச்சு செல்லும் போது அதன் முனைப்படு தளத்தின் சுழற்சியே இவ்விளைவு. இது ஊடகத்தின் கதிர்வீச்சு வழியின் நீளத்திற்கும் காந்த ஒட்ட அடர்த்திக்கும் நேர்வீதத்தில் இருக்கும்.
130. பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள் யாவை?
1. ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டம் செல்லும் போது கரைசலிலிருந்து வெளிப்படும் உலோகத் தனிமத்தின் நிறை, மின்னோட்டம் செலுத்தப்படும் நேரத்திற்கு நேர்வீதத்தில் இருக்கும்.
2. ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டஞ் செல்லும்போது, வெளித் தள்ளப்படும் உலோகத்தின் நிறை அதில் பாயும் மின்னோட்ட வலிமைக்கு நேர்வீதத்திலிருக்கும்.
3. வெவ்வேறு மின் பகுளிகள் வழியாக ஒரே அளவு மின்னோட்டம் பாயும்பொழுது வெளித்தள்ளப்படும் உலோகத் தனிமங்களின் நிறை, அவற்றின் மின்வேதி இணைமாற்றுக்கு நேர்வீதத்தில் இருக்கும். இவ்விதிகளை 1832இல் இவர் அறிவித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 13 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, என்ன, விளக்கு, மின்னோட்டம், நிறை, வழியாக, என்றால், ஆற்றல், நேர்வீதத்தில், இருக்கும்