இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 12
111. அயனி என்றால் என்ன?
மின்னணு இழப்பு அல்லது ஏற்பினால் உண்டாகும் மின்னேற்றத் துகள்.
112. அயனியாக்கல் என்றால் என்ன?
ஒர் அணுவிலிருந்து மின்னணுக்களை நீக்கல் அல்லது அணுவோடு அவற்றைச் சேர்த்தல்.
113. அயனியாக்கு ஆற்றல் என்றால் என்ன?
ஒர் அணுவிலிருந்து மின்னணுக்களை நீக்கல் அல்லது அணுவோடு அவற்றைச் சேர்த்தல்.
114. அயனியாக்கு கதிர்வீச்சு என்றால் என்ன?
ஒரு தொகுதியில் அயனிகளை உண்டாக்கவும் அயனி யாக்கவும் தேவைப்படும் ஆற்றலைக் கொண்ட கதிர்வீச்சு.
115. வெப்ப அயனி என்றால் என்ன?
மினனேற்றத்துகள். வெண்சுடர் பொருளினால் உமிழப் படுவது.
116. கோல்ராச்சு விதி யாது?
அயனிவயமாதல் நிறைவுறும் பொழுது, அயனிகளின் கடத்தும் திறன்களின் கூட்டுத்தொகைக்கு மின்பகுளியின் கடத்தும் திறன் இணையானது. இந்நிகழ்ச்சி ஒரு பொருள் சிதையும்பொழுது ஏற்படுவது.
117. வெப்பமின்னிரட்டை என்றால் என்ன?
சீபெக் விளைவு அடிப்படையில் அமைந்தது. வெப்ப நிலைகளை அளக்கப் பயன்படுவது.
118. சீபெக் விளைவு என்றால் என்ன?
வேறுபட்ட இரு உலோகக் கம்பிகள் சேர்ந்த சந்திகளை வெவ்வேறான வெப்பநிலைகளில் வை. இப்பொழுது அவற்றின் சுற்றில் மின்னோட்டம் நிகழ்கிறது. இவ்வெப்ப மின்னோட்ட நிகழ்ச்சியே சீபெக் விளைவு.
119. இதை யார் எப்பொழுது கண்டறிந்தார்?
சீபெக் என்பார் 1826இல் கண்டறிந்தார்.
120. முதல் மின்விளக்கை அமைத்தவர் யார்? எப்பொழுது?
தாமஸ் ஆல்வா எடிசன், 1879 இல்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 12 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, சீபெக், விளைவு, அல்லது, அயனி