முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
மருத்துவம் :: சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்

41. டேம்ப்கால் என்றால் என்ன?
தமிழ்நாடு மருத்துவத் தாவரப் பண்ணை மூலிகை மருத்துவக் கழகம் (Tamilnadu Medicinal Plant Farms Herbal Medicine Corporation) என்பதாகும்.
42. இதன் நோக்கம் யாது?
சித்த மருந்துகள் முதலான நாட்டு மருந்துகள் உற்பத்தி செய்வதாகும்.
43. இதன் பதிவு பெற்ற அலுவலகம் எங்குள்ளது?
அண்ணா மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம் சென்னை - 600 106.
44. அறிஞர் அண்ணா மூலிகைப் பண்ணை எங்குள்ளது?
சென்னை அரும்பாக்கத்தில் மருத்துவமனைக்கு எதிரிலுள்ளது.
45. சித்த மருத்துவ இதழ்கள் யாவை?
1. சித்த மருத்துவம்
2. சித்தர் உலகம்
3. அமிழ்தம்
4. மூலிகை மணி
46. சாமி சிதம்பரனார் எழுதிய சித்த அறிவியல் நூல் எது?
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்.
47. சித்த மருத்துவத்தை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர் யார்?
பரம்பரை வைத்தியர்களான சித்த மருத்துவர்களே. இவர்களுக்கு அடுத்ததாகத் தமிழக அரசும் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு உதவுகிறது. சித்த மருத்துவ கல்லூரிகள் அமைத்துள்ளது; சித்த மருத்துவ மனையும் நிறுவியுள்ளது. மறைந்த மாணிக்கம் காஞ்சி சிற்சபை சிறந்த சித்த மருத்துவர். அண்ணாவால் போற்றப் பெற்றவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சித்த, மருத்துவ