முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
மருத்துவம் :: சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
31. சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழுவின் தலைவர்களாக இருந்தவர்கள் யார்?
என். கந்தசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம்.
32. ஆங்கிலத்திலுள்ள சிறந்த சித்த மருத்துவ நூல் எது?
History of Siddha Medicine, 1979. (N. Kandasamy Pillai)
33. தமிழிலுள்ள சிறந்த சித்த மருத்துவ நூல் எது?
சித்த மருத்துவச் சுருக்கம், 1983. (டாக்டர் க.சு. உத்தம நாராயணன்)
34. பேரறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை எங்குள்ளது?
அரும்பாக்கத்தில் உள்ளது. சென்னை 600 106.
35. இம் மருத்துவமனையிலுள்ள பிரிவுகள் யாவை?
1. சித்த மருத்துவம்
2. ஆயுர் வேதம்
3. யுனானி
4. ஓமியோபதி
5. இயற்கை மருத்துவம்
6. யோகா
36. இங்குக் குணப்படுத்தப்படும் நோய்கள் யாவை?
1. தோல் நோய்
2. தொண்டை நோய்
3. ஈரல் நோய்
4. இரைப்பு
5. நீரிழிவு
6. முதுகுத் தண்டு நோய்
7. மலடு
8. மகளிர் நோய்
9. மூல நோய்
10. உடல் ஊதல்
11. யானைக்கால் நோய்
12. மஞ்சட்காமாலை
13. எலும்பு முறிவு.
37. அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் எத்தனை உள்ளன?
இரண்டு. சென்னை அரும்பாக்கத்தில் ஒன்று. பாளையங்கோட்டையில் ஒன்று. இவை தவிர தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் மூன்றும் உள்ளன.
38. அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி எங்குள்ளது?
திருமங்கலத்தில் உள்ளது.
39. யூனானி மருத்துவக் கல்லூரி எங்குள்ளது?
சென்னை அரும்பாக்கத்தில், அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளது.
40. சித்த மருத்துவ நூலகம் எங்குள்ளது?
அரும்பாக்கத்தில் அண்ணா மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சித்த, நோய், மருத்துவக், உள்ளது, அரும்பாக்கத்தில், எங்குள்ளது, மருத்துவ, அண்ணா, சென்னை, மருத்துவமனை